Showing posts with label பார்வதி ஓமனக் குட்டன். Show all posts
Showing posts with label பார்வதி ஓமனக் குட்டன். Show all posts

Monday, December 15, 2008

"எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை." -பார்வதி ஓமனக் குட்டன்




திருவனந்தபுரம், டிச.16:


தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் நகரில் கடந்த சனிக்கிழமை உலக அழகிப் போட்டி நடந்தது.
இதில், இந்தியாவின் பார்வதி ஓமனக் குட்டன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதி போட்டியில் நூலிழையில் பட்டம் நழுவி, 2வது இடமே அவருக்கு கிடைத்தது. இந்த போட்டியில் ரஷ்யாவின் செனியா சுகினோவா வெற்றி பெற்றார்.
பட்டத்தை இழந்தது பற்றி திருவனந்தபுரத்தில் பார்வதி நேற்று கூறியதாவது:
உலக அழகிப் போட்டியில் தோற்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. இறுதி போட்டியில் நுழைந்த போது எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்க வில்லை.
போட்டியின்போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச் சரியாக பதில் அளித்தேன். எங்கு தவறு நடந்தது என்பது பற்றி இன்னும் எனக்கு புரியவில்லை.
இறுதி போட்டியின்போது கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், மற்றவர்களைவிட நான் நன்றாகவே பதில் அளித்தேன். ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இவ்வாறு பார்வதி மிகுந்த வேதனையுடன் கூறினார்.