Thursday, February 26, 2009

இன்றைய (பிப்ரவரி இருபத்தியாறு) செய்திகள்




தமிழ்திரை இசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

சென்னை : தமிழ்திரை இசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று ஆஸ்கர் விருதுபெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். ஆஸ்கர் விருதுபெற்ற பின் சென்னை திரும்பிய அவர், சற்றுமுன்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இசை மக்கள் மத்தியில் நிலவும் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது என்றும், இசைக்கு மொழி கிடையாது, மக்களை நேரடியாக மகிழ்விப்பதே விருதுகள் பெறுவதற்கு சமம் என்று கூறினார். மேலும் தமிழ் திரைஇசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதே தமது லட்சியம் என்றும் தெரிவித்தார்.


இயக்குனர் சீமான் மார்ச் 6ல் நெல்லையில் ஆஜராக உத்தரவு

திருநெல்வேலி : இயக்குனர் சீமான் மார்ச் 6ல் நெல்லையில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் கடந்த 17ம் தேதி ஏற்பாடு செய்த கூட்டத்தில், இயக்குனர் சீமான் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு
ஆதரவாக பேசியதோடு வழக்கமான பாணியில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் காங்கிரசாரை திட்டியும் பேசினார். பாளையங்கோட்டை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது, புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இருக்கும் சீமானை முறைப்படி கைது செய்தனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன் தரப்பினர், நெல்லை
முதலாவது ஜெ.எம்., கோர்ட்டில் மனு செய்தனர். வழக்கு விசாரணைக்காக சீமானை பாளையங்கோட்டைக்கு அழைத்து வர உத்தரவிடுமாறு கேட்டனர். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் ஹேமா, மார்ச் 6ல் சீமானை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

சென்னையில் மேலும் 10 மேம்பாலங்கள் : அமைச்சர் ஸ்டாலின் தகவல்

சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்கும் வகையில், மேலும் 10 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது பேசிய அவர், பெரம்பூர், செனோடாப் ரோடு, ரங்கராஜபுரம், கத்திவாக்கம் ஹைவே, ஆலந்தூர் சாலை, மின்ட் தெரு மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வில்லிவாக்கம், ராயபுரம், மணியகரடு மற்றும் சைதாப்பேட்டையிலுள்ள ஜோன்ஸ் ரோடு ஆகிய இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்படுகிறது. இது தவிர, மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கொருக்குப்பேட்டையிலுள்ள போஜராஜா ரயில்நிலையம் அருகே ரூ. 6.28 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும், சுமார் ரூ.9.50 கோடி செலவில்
பெரம்பூர் மேம்பாலம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு படைவீரர்கள் சரணடைந்தனர் : முடிவுக்கு வந்தது வங்கதேச புரட்சி

டாக்கா : கடந்த இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் நடந்து வந்த புரட்சி இன்று மாலை முடிவுக்கு வந்தது. ஊதிய உயர்வு விவகாரத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, வங்கதேச எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதனால் டாக்கா நகரின் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
ராணுவ உயர்அதிகாரிகள் உள்ளிட்ட பலரை பிணைக்கைதிகளாக பிடித்தனர் எல்லை பாதுகாப்பு படையினர். இதனிடையே புரட்சியை கைவிடுமாறு கோரிக்கை விடுத்த பிரதமர் ஷேக் ஹசீனா, பாதுகாப்பு படையினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். எனினும் கலவரம் கட்டுக்கடங்காமல், நாட்டின் பல இடங்களுக்கும் பரவியது. இதனிடையே இன்று
மாலை ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதாக பாதுகாப்பு படையினர் அறிவித்தனர். பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்களும் விடுவிக்கப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் நடந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ராஜினாமா

புதுடில்லி : மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மன்மோகன்சிங் அரசில் மின்துறை இணை அமைச்சராக இருப்பவர் ஜெய்ராம் ரமேஷ். ஆந்திராவிலிருந்து காங்.,
சார்பில் ராஜய்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ராம் ரமேசுக்கு மத்திய மின்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ஜெய்ராம் ரமேஷ், தேர்தல்
பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இம்முடிவை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர்-நாகூர் அலக ரயில்பாதை நாளை மறுநாள் துவக்கம்

சென்னை : திருவாரூர்-நாகூர் இடையே அகல ரயில் பாதை நாளை மறுநாள்(பிப்.27) திறக்கப்படுகிறது. இதற்கான விழா
திருவாரூர் ரயில் நிலையத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கிறது. திருச்சி மற்றும் தஞ்சையிலிருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் நாகூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மத்திய ரயில்வே இணையமைச்சர் வேலு
திருவாரூர்-நாகூர் இடையே பாசஞ்சர் ரயில் போக்குவரத்தை காலை 10 மணிக்கு துவக்கி வைக்கிறார். இந்த ரயில் காலை 11.20 மணிக்கு நாகூர் சென்றடையும். இப்பாதை திறப்பையொட்டி, திருச்சி மற்றும் தஞ்சையிலிருந்து திருவாரூர் வரை
இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் நாளையிலிருந்து நாகூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

குழந்தை நடிகர்களுக்கு மும்பையில் வீடு

மும்பை : ஆஸ்கர் விருதுகளைக் குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த காரிப் நகர் குடிசைப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அசார் மற்றும் ரூபினாவின் குடும்பத்தாருக்கு வீடுகள் ஒதுக்கி, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான்
உத்தரவிட்டுள்ளார். நேற்று அசோக் சவானை சந்தித்த போது, இதை தெரிவித்ததாக, மும்பை நகர காங்கிரஸ் தலைவர் கிருபாசங்கர் அறிவித்துள்ளார். முதல்வரின் 2 சதவீத கோட்டாவில் இருந்து இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ராஜபாளையம் அருகே அரசு பஸ்கள் மோதல் : 3 பேர் பலி

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் என்னுமிடத்தில் செங்கோட்டையிலிருந்து வந்த அரசு பஸ்சும், ராஜபாளையத்திலிருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த சாந்தி, டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் குருசாமி மற்றும் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Sunday, February 22, 2009

இன்றைய முக்கிய (பிப்ரவரி இருபத்தி இரண்டு)செய்திகள்






தி.மு.க. இளைஞர் சங்கிலி பிரமாண்ட அணிவகுப்பு இலங்கை போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. இளைஞரணி சார்பில் இளைஞர் சங்கிலி போராட்டம்.

`ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு ஆஸ்கார் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு


இலங்கை போர் : தி.மு.க. தொண்டர் திடீர் தீக்குளிப்பு இலங்கையில் போர்நிறுத்தம்கோரி சென்னை இளைஞர் சங்கிலியில் கலந்துகொண்ட தி.மு.க. தொண்டர் திடீர் என்று தீக்குளித்தார்.


செவ்வாய்க்கிழமை வரை கோர்ட்டுகளுக்கு விடுமுறை
தமிழகம், புதுச்சேரியில் உள்ளஅனைத்து கோர்ட்டுகளும் செவ்வாய்க்கிழமை வரை மூடப்பட்டு இருக்கும் - ஐகோர்ட்டு


புதிய திருப்பூர் மாவட்டம் இன்று உதயம் கோவை,ஈரோடு மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களை பிரித்து புதிய திருப்பூர் மாவட்டம் இன்று உதயமாகிறது.


படகை கரையில் விட்டு விட்டு ஓட்டம் 13 அகதிகளை அழைத்து வந்த 2 இலங்கை படகோட்டிகள் எங்கே? ராமேசுவரம் பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை


நதி நீர் பங்கீட்டு பிரச்சினை உள்ள தமிழ்நாட்டிற்கு தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்தான் நிரந்தர தீர்வாக அமையும் கருணாநிதி பேச்சு


மிகப்பெரிய தாக்குதலுக்கு இலங்கை ராணுவம் திட்டம் 1 லட்சம் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் ஆபத்து டாக்டர் ராமதாஸ் அறிக்கை


சென்னை கிரீன்வேஸ் சாலைக்கு டி.ஜி.எஸ்.தினகரன் பெயர் கருணாநிதி உத்தரவு


வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் வைகோ அறிக்கை


ஐகோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு கதவுகள் பூட்டப்பட்டதால் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை


5 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது திருச்சி விமானநிலைய விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு


இரங்கல் கூட்டத்தில் புகழ் அஞ்சலி ``வில்லனின் உச்சம் நம்பியார்; நகைச்சுவையின் உச்சம் நாகேஷ்'' லட்சுமி-மனோரமா கண்ணீர்


தங்கம் பவுனுக்கு ரூ.64 உயர்வு ஒரு கிராம் ரூ.1,457-க்கு விற்பனை


சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள்-போலீசார் மோதல் சம்பவம் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கருணாநிதி உறுதி


சென்னை ஐகோர்ட்டு சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் காலவரையற்ற கோர்ட்டு புறக்கணிப்பு தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு


கடற்கொள்ளையர்கள் கடத்திய 2 தமிழர்கள் உள்பட 3 பேர் விடுவிப்பு கடத்தப்பட்டவரின் சகோதரர் தகவல்


கலைஞர் டி.வி. குழுமத்தின் சிரிப்பொலி சேனல் நடிகர் கமலஹாசன் தொடங்கி வைத்தார்


சிவகங்கை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தி.மு.க. அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது கருணாநிதி பேச்சு


திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மாற்றம் ஜெயலலிதா அறிவிப்பு


ஐகோர்ட்டு வளாகத்திற்குள் தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? அறிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு நஷ்டஈடு பற்றி அரசும் விளக்கம் அளிக்க வேண்டும்


கோர்ட்டு வளாகத்தில் அரசு வக்கீல் படுகொலை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மர்ம மனிதர்கள் தப்பி ஓட்டம்


ஐகோர்ட்டு வாசலில் `ஜீப்' எரிக்கப்பட்ட சம்பவம்: 100 வக்கீல்கள் மீது மேலும் ஒரு வழக்கு


பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் இல்லாத கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இடம்பெறும் மாநில செயலாளர் வரதராஜன் பேட்டி


ஓவியம், சுடுமண் சிற்பங்களுடன் தீவுத்திடலில் `சித்திரச்சந்தை' ஓவியக் கண்காட்சி தலைமை செயலாளர் ஸ்ரீபதி தொடங்கி வைத்தார்


எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது


ஐகோர்ட்டில் முட்டை வீச்சு சம்பவம்: சுப்பிரமணியசாமி, எங்கள் மீது அவதூறு பரப்புகிறார் திருமாவளவன் குற்றச்சாட்டு


சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க கட்டிட நிதிக்காக நடிகர்-நடிகைகள் கலை நிகழ்ச்சி மே மாதம் நடக்கிறது


டைரக்டர் சீமான் புதுச்சேரி ஜெயிலில் அடைப்பு நடிகர் மணிவண்ணன் சந்திப்பு


சென்னையை சொகுசாக சுற்றிப் பார்க்க 4 பஸ்கள் விரைவில் அறிமுகம் தமிழக அரசு தகவல்


இலங்கைக்கு, இந்தியா மீண்டும் வலியுறுத்தல் ராணுவமும் விடுதலைப்புலிகளும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.


ராஜ்தாக்கரேவுக்கு கைது வாரண்டு பீகார் கோர்ட்டு பிறப்பித்தது


சென்னை ஐகோர்ட்டு சம்பவம் மிக மிக துரதிருஷ்டவசமானது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து


உத்தரபிரதேசத்தில் பயங்கரம் கோர்ட்டு வளாகத்தில் 5 பேர் சுட்டுக் கொலை


பாராளுமன்ற தேர்தல்: காங். கூட்டணிக்கு 235 இடங்கள் கிடைக்கும் கருத்துக்கணிப்பில் தகவல்


பாராளுமன்றத்தின் கடைசி நாள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்


தீவிரவாதி அஜ்மல், வேறு சிறைக்கு மாற்றம்


`இலங்கை பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை' பா.ஜனதா குற்றச்சாட்டு


பாராளுமன்ற தேர்தல் பீகாரில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு லாலு கட்சி- 22; காங்கிரஸ்- 5


காஷ்மீர் சண்டையில் தீவிரவாதிகள் தப்பினர் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்


விடுதலைப்புலிகள் விமான தாக்குதல் எதிரொலி: கேரளாவில் அதிநவீன ராடார் நிறுவப்படுகிறது இந்திய விமானப்படை திட்டம்


கொழும்பு மீதான தாக்குல் விடுதலைப்புலிகள் அறிவிப்பு
கொழும்பில் விமான தாக்குதல் வான் கரும்புலிகளால் வெற்றிகர
மாக நடத்தப் பட்டது என்று விடுதலைப்புலிகள் அறிவிப்பு.

அமெரிக்க இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட பாணியில் விடுதலைப்புலிகள் தாக்குதல் புதிய தகவல்கள்


பாகிஸ்தானில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டூழியம்: வெடிகுண்டு கார் தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பலி

விரிவான செய்திகளுக்கு "கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" தமிழ் வார செய்திதாள் பார்க்கவும்.

Saturday, February 21, 2009

இன்றைய (பிப்ரவரி இருபத்தி ஒன்று) தலைப்பு செய்திகள்




அரசை கவிழ்க்க சதி கருணாநிதி குற்றச்சாட்டு தி.மு.க. அரசை கவிழ்ப்பதற்காக வன்முறை செயலை திட்டமிட்டு சிலர் நடத்துகிறார்கள் என்று கருணாநிதி குற்றம் சாட்டினார்.


சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்வெளியேற்றம்
ஐகோர்ட்டில் நடந்த மோதல் பற்றி பேச அனுமதிகேட்டு கோஷமிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்ட சபையில்இருந்து வெளியேற்றம்.


ஐகோர்ட்டில் வன்முறை: அதிகாரியின் ஜீப் எரிப்பு ஐகோர்ட்டில்மீண்டும் நேற்று வன்முறை வெடித்தது. ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டதுடன், 3 தீயணைப்பு வீரர்களை வக்கீல்கள்தாக்கினர்.


நெல்லையில் டைரக்டர் சீமான் சரண்
டைரக்டர்சீமான் நேற்று நெல்லை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் சரண். பின்னர் அவர் புதுச்சேரி கொண்டு செல்லப்பட்டார்.


எந்த இடத்திலும் ஏறலாம், எந்த இடத்திலும் இறங்கலாம் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுலா பகுதிகளை காண குளு, குளு பஸ்கள் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் வக்கீல்கள் கோட்டையை நோக்கி ஊர்வலம் 100 பேர் கைதாகி விடுதலை


நள்ளிரவில் பெரும் பரபரப்பு; ஆயிரம் போலீசார் குவிப்பு சென்னை ஐகோர்ட்டுக்குள் இருந்த வக்கீல்கள் வெளியேற்றம் தலைமை நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை


தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு


வக்கீல்கள்-போலீசார் மோதல் விவகாரம்: விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை நீதிபதிகள் உறுதி


போலீசாரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்: சென்னை ஐகோர்ட்டில் 2-வது நாளாக பதற்றம் நீடித்தது "கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம்'' என்று அறிவிப்பு


பஸ், அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு


தீக்குளித்து மரணம் அடைந்த தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தில் ரகளை: போலீஸ் தடியடி 15 பஸ்களின் கண்ணாடி உடைப்பு


இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒபாமாவுக்கு தந்தி-எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டும் விஜயகாந்த் பேச்சு


இன்று தி.மு.க. இளைஞர் அணியின் மனித சங்கிலி: இன உணர்வு கொண்ட தமிழ்மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மன்னார்வளைகுடா கடலில் மீன் பிடித்துக் கொண்டிந்த தமிழக மீனவர்கள் 10 பேரை சிங்கள கடற்படை பிடித்து சென்றது அனுராதாபுரம் சிறையில் அடைப்பு


சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்-போலீஸ் இடையே நடந்த வன்முறை சம்பவம் பற்றி சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பப்படும் சட்டசபையில் சட்ட அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

`கருணாநிதி இன்னும் 4 வாரங்கள் படுக்கையிலே ஓய்வு எடுக்க வேண்டும்' டெல்லி டாக்டர் அரவிந்த் ஜெயஸ்வால் வலியுறுத்தல்


தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.24 உயர்வு


ஐகோர்ட்டு சம்பவத்தில் வழக்குப்பதிவு வக்கீல்கள் பிரச்சினையால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கவில்லை டி.ஜி.பி. கே.பி.ஜெயின் பேட்டி


கருணாநிதியின் உடல்நலன் பற்றி விசாரிக்க வேண்டுமென்ற பண்பு இல்லாத வைகோவை வரலாறு மன்னிக்காது அமைச்சர் பொன்முடி அறிக்கை


எதிர்க்கட்சிகள் இல்லாததால் தாராளமாக பேசிய தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்


நீதிபதி தாக்கப்பட்டதைக் கண்டித்து மாஜிஸ்திரேட்டு உண்ணாவிரதம்


இலங்கையில் உடனே போரை நிறுத்த ஒபாமாவை வலியுறுத்தக் கோரி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் மனு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் அளித்தனர்


ஐகோர்ட்டில் வக்கீல்கள்-போலீசார் மோதல்: அரசும்-ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரலும், 2-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு

தி.மு.க. ஆட்சியில் அதிக அளவில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன பாடி மேம்பாலம் திறப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் பெருமிதம்


சென்னை ஐகோர்ட்டிற்குள் நுழைய போலீசாருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை தலைமை பதிவாளர் அறிக்கை


ஏழைகள் வாழ்வு வளம் பெறுவதற்காக தமிழகத்தில் கள் விற்க அனுமதிக்க வேண்டும் நாடார் பேரவையினர் கவர்னரை சந்தித்து மனு


தெலுங்கு நடிகை நிர்மலம்மா மரணம் ரஜினி, கமலஹாசனுடன் நடித்தவர்


தமிழகம் முழுவதும் 11 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம் அம்பத்தூர்-மாதவரத்துக்கு புதிய துணை கமிஷனர்கள் நியமனம்


உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கமிஷனரை பணிநீக்கம் செய்ய வேண்டும் பெண் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை


இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதா? வருமான வரி அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் கோவையில் 87 பேர் கைது

சம்பள உயர்வு பற்றி பரிந்துரைக்கும் தமிழக அதிகாரிகள் குழுவின் பதவி காலம் நீட்டிப்பு


கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் மார்க்கை சமப்படுத்தும் புதிய முறை அறிமுகம் மதிப்பெண்ணுக்கு ஏற்ப `கிரேடு' வழங்கப்படும்

கைதான லஞ்ச இன்ஸ்பெக்டரால் உயிருக்கு ஆபத்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் கமிஷனரிடம் பரபரப்பு புகார்


வக்கீல்கள் மீது போலீசார் தாக்குதல்: தொல்.திருமாவளவன் கண்டனம்


சென்னையில், நாளை நடக்கிறது பட அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் முக்கிய முடிவுகள் எடுக்கிறார்கள்


சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: வக்கீல்கள் வாதம் 23-ந் தேதி தொடங்கும் நீதிபதி சண்முகம் கமிஷன் அறிவிப்பு


எம்.ஜி.ஆர். நடித்த `எங்க வீட்டு பிள்ளை' மீண்டும் படமாகிறது விஜய் அல்லது அஜீத் நடிப்பார்

சொத்து குவிப்பு வழக்கு முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் குற்றவாளி தண்டனை விவரம் 24-ந் தேதி அறிவிப்பு

சென்னையில் வக்கீல்கள் மீது தாக்குதல்: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அகில இந்திய வக்கீல்கள் சங்கம் வற்புறுத்தல்


சென்னை மருந்து நிறுவனம் மூடல்: மத்திய மந்திரி அன்புமணிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு


எம்.பி.க்களுக்கு எதிரான கருத்துகள்: சோம்நாத் சட்டர்ஜி வருத்தம் தெரிவித்தார் மீண்டும் வெற்றி பெற வாழ்த்து

விடுதலைப்புலிகள் தாக்குதல் கொழும்பில் குண்டு வீச்சு கொழும்பு நகரில் நேற்று இரவு ஊடுருவிய விடுதலைப்புலிகளின் 2விமானங்கள் திடீரென்றுகுண்டு வீசித் தாக்குதல் நடத்தின.


கொலைகார குண்டர்களான தலீபான்களால் இந்தியா, அமெரிக்காவுக்கு ஆபத்து பாகிஸ்தான் அதிபர் சொல்கிறார்


இணையதளத்தில் ஆஸ்கார் விருது பட்டியல் வெளியானதா? ஆஸ்கார் நிர்வாகிகள் அறிவிப்பு


தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக மாறிய பாகிஸ்தான் ஹிலாரி கண்டனம்


அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் வெளிநாட்டினர் இந்தியர்கள் தான்


இலங்கை அதிபர் ராஜபக்சே நேபாள நாட்டுக்கு செல்கிறார்


பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் 28 பேர் பலி

Thursday, February 19, 2009

இன்றைய (பிப்ரவரி இருபது) முக்கிய செய்திகள்






சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ஓராண்டு ஜெயில்


சென்னை ஐகோர்ட்டில் டைரக்டர் சீமான் முன்ஜாமீன் மனு


தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம்

சென்னை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம். கோவையில் போலீஸ் ஜீப்புக்கு தீவைப்பு.


மதுரை கோர்ட்டு வளாகத்தில் 3 பஸ்களுக்கு தீ வைப்பு


சென்னை ஐகோர்ட்டு சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம்


லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்: கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு ஜெயிலா? அரசு ஊழியர்கள் கொதிப்பு


சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதை தடை செய்ய வேண்டும் இல.கணேசன் கோரிக்கை


சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்-போலீசார் மோதல் சென்னை ஐகோர்ட்டில் போலீசாரும் வக்கீல்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். போலீஸ் நிலையத்துக்கு தீவைப்பு.


தலைமை நீதிபதிக்கு கருணாநிதி கடிதம்
ஐகோர்ட்டு சம்பவம் தொடர்பாக தாங்கள் விரும்பினால் நான்வந்து
சந்திக்கிறேன் என தலைமை நீதிபதிக்கு கருணாநிதி கடிதம்.


எதிர்காலம் வேண்டும் என்றால் தி.மு.க. கூட்டணியைவிட்டு வெளியே வாருங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு


தமிழகம், புதுவையில் அனைத்து கோர்ட்டுகளுக்கும் இன்று விடுமுறை


கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு துப்பாக்கி சூடு நடத்தாமல் தவிர்ப்பு


இன்று நடைபெறும் தே.மு.தி.க. ஊர்வல பாதை மாற்றம் தலைமை கழகம் அறிவிப்பு


தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை டி.ஜி.பி. கே.பி.ஜெயின் பேட்டி


ஐகோர்ட்டு வன்முறை சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு


தமிழகத்தில் 7 போலீஸ் ஐ.ஜி.க்கள் மாற்றம் சென்னை நகர போக்குவரத்து போலீசுக்கு புதிய கூடுதல் கமிஷனர்


ஐகோர்ட்டில் வக்கீல்கள்-போலீஸ் மோதல்: காயம் அடைந்த 64 பேர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி


போலீசார் மிகவும் பொறுமை காத்தார்கள் `நீதிபதி தாக்கப்பட்டதால்தான் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தடியடி நடத்தினோம்' போலீஸ் கமிஷனர் பேட்டி


ஐகோர்ட்டில் காவல்துறையினர் அத்துமீறல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான வக்கீல்கள் போராட்டத்தை திசை திருப்ப சதி டாக்டர் ராமதாஸ் அறிக்கை


தலைமை நீதிபதியை தடுத்த வக்கீல்கள்


நாளுக்கு நாள் விலை உயர்கிறது ஒரு பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்தை நெருங்குகிறது


சுப்பிரமணியசாமி தாக்கப்பட்ட சம்பவம்: கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? 5 நீதிபதிகள் குழு அமைப்பு


கண்ணதாசன் நூல்கள் நாட்டுடைமை: கண்ணதாசன் என்ற கவிஞனை மதிப்பதற்காக அரசின் சார்பில் செய்யப்பட்ட செயல் மருத்துவமனையில் இருந்து கருணாநிதி கடிதம்


விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தமிழர்கள் மனிதகேடயங்களாக, பிடிபட்டிருப்போரை விடுவிக்க நிர்ப்பந்திக்க வேண்டும் சட்டசபையில் காங்கிரஸ் கருத்து


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார்: சீமானை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சட்டசபையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தகவல்


சட்டசபையில் மறைந்த முன்னாள் அமைச்சர் மஜீத்துக்கு இரங்கல் எந்த தொகுதியை சேர்ந்தவர் என்பதில் குழப்பம்


சட்டசபைக்கு ஜெயலலிதா திடீர் வருகை சட்டமன்ற உறுப்பினர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்


தனியார் பள்ளிகளில் நன்கொடை, கட்டிட நிதி வசூலித்தால் நடவடிக்கை அ.தி.மு.க. புகாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


வேலைக்கு தடைச்சட்டம் போட்டவர்கள் காலிப்பணியிடங்கள் பற்றி பேசக் கூடாது சட்டசபையில் அமைச்சர் பதிலால் தி.மு.க-அ.தி.மு.க. சலசலப்பு


ஆள் இல்லாத நேரத்தில் நீங்களே `கோல்' போட்டுக் கொள்கிறீர்களே! ஓ.பன்னீர்செல்வம் நகைச்சுவை


திருமங்கலம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது யார்? சட்டசபையில் அ.தி.மு.க.-தி.மு.க. மோதல்


சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதை தடை செய்ய வேண்டும் இல.கணேசன் கோரிக்கை


பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜியின் அறிக்கை: ஈழத்தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக்குண்டுகளை விட கொடுமையானது வைகோ அறிக்கை


வீட்டுக்குள் பிணமாக தொங்கினார் பெண் போலீஸ் `மர்ம' சாவு கொலையா? போலீஸ் விசாரணை


உள்ளாட்சி இடைத்தேர்தல் 260 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு 77 இடங்களுக்கு யாரும் மனு செய்யவில்லை


சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேறியே தீரும்: செய்யூ ரில் அனல்மின்நிலையம் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் சட்டசபையில் ஆற்காடு வீராசாமி தகவல்


விடுதலை சிறுத்தை தொண்டர் தீக்குளித்து சாவு: கடலூரில் சாலை மறியல்; கடையடைப்பு காங்கிரஸ் கொடி-தலைவர்கள் படங்கள் எரிக்கப்பட்டன


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிளஸ்-2 வினாத்தாள் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் இன்று எடுத்துச்செல்லப்படுகிறது


ஜனதா கட்சி அலுவலகம் தாக்குதல்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கக்கோரி மனு மதுரை ஐகோர்ட்டு விசாரிக்க உத்தரவு


``சினிமாவில் எனக்கு எதிரி, நடிகர்கள் அல்ல; திருட்டு வி.சி.டி.'' நடிகர் மாதவன் சொல்கிறார்


உடம்பை காட்டவில்லை ``கவர்ச்சி காட்டினால், தப்பா?'' நடிகை சார்மி பாய்ச்சல்



வக்கீல்கள்-போலீசார் மோதல்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேட்டு அறிந்தார் ஐகோர்ட்டு தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாவுடன் டெலிபோனில் பேச்சு


முகமது அசாருதீன் காங்கிரசில் சேர்ந்தார்
கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஐதராபாத் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.


தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாக இருக்கிறது ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பதில்


பொது பணத்தில் இருந்து எம்.பி.க்களுக்கு ஒரு காசு கூட தரக்கூடாது சபாநாயகர் ஆவேசம்


கர்நாடகாவில் பயங்கர விபத்து திருமண கோஷ்டியினர் 16 பேர் பலி


இலங்கை பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் பா.ம.க. எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக அமளி


வேலை நிறுத்தத்துக்கு எதிராக வழக்கு: தமிழக வக்கீல்கள் சங்கத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

இங்கிலாந்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது: 18 பேர் கதி என்ன?


புகைபிடித்ததால் நோய் தாக்கி பலியானவரின் மனைவிக்கு ரூ.40 கோடி நஷ்டஈடு


ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்புங்கள் நேசநாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை


வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்ததில் 100 பேரை காணவில்லை


பின்லேடன் பதுங்கிஇருக்கும் இடத்தில் குண்டுவீச்சு அமெரிக்கா நடத்தியது

Wednesday, February 18, 2009

இன்றைய (பிப்ரவரி பத்தொன்பது) முக்கிய செய்திகள்






ஒரு பவுன் தங்கம் ரூ.11 ஆயிரத்து 480 ஆனது தங்கம் விலை ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்து 480 ஆக உயர்ந்தது. 2 நாட்களில் ரூ.544 கூடி, கடந்த கால சாதனையை முறியடித்தது.


விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் தீக்குளித்து மரணம்
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைபிரமுகர் தீக்குளித்தார்.


இலங்கை தமிழர்களுக்காக உயிர்தியாகம் முத்துகுமார் அஸ்தி ராமேசுவரத்தில் 23-ந் தேதி கரைப்பு


பிரணாப்முகர்ஜியின் பதில் திருப்தி அளிக்க வில்லை அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பா.ம.க. விவாதித்து முடிவு செய்யும் டெல்லியில் டாக்டர் ராமதாஸ் பேட்டி


ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர்: சிறுநெருக்கடியோ, மனவேதனையோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அனைவருக்கும் நிதியமைச்சர் க.அன்பழகன் வேண்டுகோள்


தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதில் எந்தவித கட்டாயமும் இல்லை தமிழக அரசு அறிவிப்பு


2006 முதல் 2008 வரை விவசாயிகளுக்கு ரூ.3935 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்


"இளமையாக பாட்டு எழுதுவது எப்படி?'' கவிஞர் வாலி சொன்ன ரகசியம்


தமிழகத்துக்கு தலீபான் தீவிரவாதிகள் மிரட்டலா? டி.ஜி.பி. பதில்


இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் கருணாநிதிக்கு நன்றி


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது


பகுஜன் சமாஜ் கட்சி போஸ்டர்களில் உள்ள ஆற்காடு நவாப் படத்தை நீக்க நடவடிக்கை தேர்தல் அதிகாரி உத்தரவு


38 பெண்கள் உள்பட 778 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆணைகள் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


புதிதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட தொடக்க விழா 22-ந் தேதி நடக்கிறது அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்


அடையாறு போலீஸ் நிலையத்தில் 8 மாத கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை லஞ்சமாக கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்


சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு வாபஸ்


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம் உத்தரவு


இன்று நடக்கிறது சினிமா ஒளிப்பதிவாளர் துவாரகாநாத் திருமணம் காதலியை மணக்கிறார்


நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட தமிழ்நாட்டில் 6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்


சுப்பிரமணியசாமி தாக்கப்பட்ட வழக்கில் வக்கீல் கைது மேலும் 19 பேர் மீது வழக்குப்பதிவு


`மணியார்டர் பாரம்' தமிழில் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி இந்தி, மலையாளம் மொழிகளில் இருப்பதால் குழப்பம்


61-வது பிறந்தநாளையொட்டி 61 ஜோடிகளுக்கு இலவச திருமணம் சென்னையில் ஜெயலலிதா இன்று நடத்தி வைக்கிறார்


போலீசாரை பணி செய்யவிடாமல் தடுக்கும் வக்கீல்கள் மீது நடவடிக்கை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்


இலங்கை தமிழர்களுக்காக கட்சி எல்லைகளை கடந்து தமிழ் மக்கள் அறப்போராட்டம் நடத்துகிறார்கள் வைகோ பேச்சு


சிங்கப்பூரில் இருந்து ரூ.1 1/2 கோடி தங்க நகைகளை கடத்திய தொழில் அதிபர் பிடிபட்டார்


கட்சியில் இருந்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் நீக்கம் ஜெயலலிதா அறிவிப்பு


அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட ஆலோசனை கூட்டங்கள் ஜெயலலிதா அறிவிப்பு


குற்றவாளிகளை கைது செய்வதை தடுக்கும் குற்றவிசாரணை முறை சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் வக்கீல்கள் ஊர்வலமாக சென்று கவர்னரிடம் மனு


கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் முடிந்து வக்கீல்கள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்


திருவனந்தபுரம் வழியாக நெல்லை-பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் இன்று முன்பதிவு தொடக்கம்


முயலை சுட்டபோது குறிதவறியதால் வாலிபர் குண்டு பாய்ந்து பலி

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு -சோனியா
இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் -சோனியா


பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் அமளி
போர் நிறுத்தம் செய்ய இலங்கையை வற்புறுத்த முடியாது என்று பிரணாப்முகர்ஜி பேசியதற்கு தமிழக எம்.பி.க்கள் கடும் அமளி.


"இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கவில்லை'' டெல்லி மேல்-சபையில் பிரணாப் முகர்ஜி விளக்கம்


இலங்கை இனப்பிரச்சினையை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா கொண்டு செல்லவேண்டும் டெல்லி மேல்-சபையில் தி.மு.க வற்புறுத்தல்


பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதால் தீவிரவாத பிரச்சினை தீராது பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி தகவல்


மும்பை தாக்குதல்: முக்கிய குற்றவாளி அஜ்மல் கசாபை எங்களிடம் ஒப்படையுங்கள் பாகிஸ்தான் கோரிக்கை


மங்களூரை தலிபான்களின் நகரம் என்று கூறிய மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி மீது வழக்கு பதிவு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு


நவீன் சாவ்லாவை நீக்க கோரும் தலைமை தேர்தல் கமிஷனரின் பரிந்துரை நிராகரிப்பு


`சத்யம்' நிறுவனர் ராமலிங்க ராஜ× ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி


ஜனாதிபதி பேச்சுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானங்கள் தோல்வி


பெங்களூரை உலுக்கிய தொடர் கொலையில் பரபரப்பு தீர்ப்பு பெண்களை கற்பழித்து கொன்ற போலீஸ்காரருக்கு தூக்கு தண்டனை


`கண்டெய்னர்'கள் மூலம் அணு ஆயுதம் கடத்தப்படும் ஆபத்து கடற்படை தலைமை தளபதி அதிர்ச்சி தகவல்



போர் பகுதியில் இருந்து வெளியேறும் அப்பாவி தமிழர்களை பாதுகாக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வில்லை விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு


ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 17ஆயிரம் ராணுவ வீரர்கள் அமெரிக்கா அனுப்புவதற்கு ஒபாமா அனுமதி வழங்கினார்


பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் அமைதி ஊர்வலம் தலீபான்கள் யுத்தம் நடத்துவதை நிறுத்த வலியுறுத்தி


ஏவுகணை சோதனை நடத்தினால் வடகொரியா மீது தடை விதிக்கப்படும் தென்கொரியா அறிவிப்பு


வங்காளதேசத்தில் 62 பிரமுகர்கள் வெளிநாடு செல்ல தடை


அமெரிக்க விமான தாக்குதலில் 16 பேர் பலி

Tuesday, February 17, 2009

இன்றைய (பிப்ரவரி பதினெட்டு ) தலைப்புச் செய்திகள்




தமிழக பட்ஜெட்டில் ரூ.100கோடி வரிச்சலுகைகள் தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. ரூ.100 கோடிக்கு புதிய வரிசலுகைகள்.


தங்கம் ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்தை தாண்டியது
அமெரிக்கா நலிவடைந்ததொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை அளித்து வருவதால் ஒரு பவுன் தங்கம் ரூ.11,000 தாண்டியது.


சுப்பிரமணியசாமி மீது தாக்குதல் வழக்கில் ஆஜராக வந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தாக்கப்பட்டார். அவர்மீது வக்கீல்கள் முட்டைகளை வீசினார்கள்.


கோவில்பட்டி தட்சணமாற நாடார் சங்க பேட்டையில் பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகம் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் திறந்து வைத்தார்


சட்டசபையில் பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க. வெளிநடப்பு


தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்.வரதராஜன் கருத்து


திரைப்பட துறைக்கான வரி சலுகை மறு பரிசீலனை குழு அமைக்க முடிவு


"குறைகளும், நிறைகளும் கலந்த கலவையாக பட்ஜெட் உள்ளது'' டாக்டர் ராமதாஸ் கருத்து


செல்வம் விடுதலை சிறுத்தை எம்.எல்.ஏ.வாகவே தொடர்வார்: 27-ந் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது சபாநாயகர் ஆவுடையப்பன் பேட்டி


ஒரே பகுதியில் 3 ஆண்டுகளாக பணிபுரிபவர்கள் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் பாராளுமன்ற தேர்தலையொட்டி அதிரடி நடவடிக்கை


இலங்கை தமிழர் பிரச்சினை: இருசாராரும் போரை நிறுத்தி உடன்பாட்டுக்கு வர தீவிர முயற்சி மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள்


ரூ.444 கோடி செலவில் வெள்ள சேதத்தை தவிர்க்க சென்னையில் புதிய திட்டம் மத்திய அரசு ஒப்புதல்


மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் மனிதசங்கிலியில் மாணவர்கள் திரளாக பங்கு பெற வேண்டும் தி.மு.க. மாணவரணி செயலாளர் புகழேந்தி அறிக்கை


தி.மு.க. அரசின் மகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கற்கள் பட்ஜெட்டுக்கு தலைவர்கள் பாராட்டு


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் க.அன்பழகன் தலைமையில் நடந்தது


ஏழை, எளிய மக்களுக்கு பயனில்லை தொலைநோக்கு பார்வையில்லாத பட்ஜெட் ஜெயலலிதா கருத்து


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை அமைப்பினர், ஜனாதிபதியை சந்தித்து மனு


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு மேலும் அழுத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் சோனியாவிடம் டாக்டர் ராமதாஸ் நேரில் வலியுறுத்தல்


28 தமிழ் சான்றோர் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும்


"சிப்காட்" வளாகத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு பட்ஜெட்டில் அறிவிப்பு


பாலங்கள், சாலைகள் போன்ற சமூகநல திட்டங்களுக்காக தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பட்ஜெட் பற்றி, நிதித்துறை செயலாளர் பேட்டி


விரைவில் நிறுவப்படும் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை; சென்னையில் கன்னட கவிஞர் சர்வஜ்னா சிலை பட்ஜெட்டில் அறிவிப்பு


உடன்குடியில் விரைவில் மின் உற்பத்தி நிலையம் பட்ஜெட்டில் அன்பழகன் அறிவிப்பு


பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி தமிழக அரசு அறிவிப்பு


கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை மெட்ரோ ரெயில் கருணாநிதி விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்


மேலும் 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி.


தமிழகத்தில் மேலும் 29 சமத்துவபுரங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு


சுயதொழில் செய்வதற்கு உதவும் வகையில் ஊனமுற்றோருக்கு மோட்டார் பொருத்திய இலவச தையல் மிஷின்


ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ்: உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்காக முதல்வர் கலைஞரின் காப்பீட்டு திட்டம் பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு


பிளாட்பார மற்றும் வெற்றிலைபாக்கு கடைக்காரர்களுக்கு தனி நல வாரியம் பட்ஜெட்டில் அறிவிப்பு


மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று வரும் நிலையிலும்கூட பட்ஜெட் தயாரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்ட கருணாநிதி விரைவில் நலம்பெற சட்டசபையில் அன்பழகன் வாழ்த்து


தமிழக அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்


இந்திய இறையாண்மைக்கு எதிராக அறைகூவல் விடுப்போர் மீது கடும் நடவடிக்கை தமிழக அரசு எச்சரிக்கை


பயிர் கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால் விவசாயிகளின் புதிய கடனுக்கு வட்டி கிடையாது பட்ஜெட்டில் அறிவிப்பு


இலங்கைத் தமிழர்கள் படுகொலையை தடுக்க கோரி விஜயகாந்த் தலைமையில் சென்னையில் 20-ந் தேதி பேரணி அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் மனு கொடுக்கின்றனர்


நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்ணிடம் 30 பவுன் நகை பறிப்பு


நெல்லையில் நடந்த கூட்டத்தில் டைரக்டர் சீமான் பேச்சு கைது செய்ய புதுச்சேரி போலீசார் வந்ததால் பரபரப்பு


தமிழக பட்ஜெட்: தொலைநோக்கு திட்டங்கள் இல்லை சரத்குமார் அறிக்கை


அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்


தமிழக பட்ஜெட் திகட்டாத தேன் மருந்தாக இனிக்கிறது எஸ்.ஜெகத்ரட்சகன் பாராட்டு


பாராளுமன்ற தேர்தலை முன்வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட் சட்டசபை கட்சி தலைவர்கள் கருத்து


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தாம்பரம் முதல் குமரி வரை பிரமாண்ட மனித சங்கிலி


1,195 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் ஐகோர்ட்டு உத்தரவு


10, 12-வது வகுப்பு தேர்வுகள் சிறப்பாக நடக்க வினாத்தாள், தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


போரினால் பாதிக்கப்பட்ட "இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு'' நடிகர் மம்முட்டி பேட்டி


லாலு பிரசாத் மீது கொலை வழக்கு -கோர்ட்டு உத்தரவு
பாலம் கட்டும் போது, 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, லாலு பிரசாத் மீது கொலை வழக்கு பதிவு செய்ய, கோர்ட்டுஉத்தரவு.


கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் கமிஷன் தடை தேர்தல்களில் ஓட்டுப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில்கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் கமிஷன் தடை.


விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவுக்கு காரணமான "கை"யை வருங்கால சந்ததிகள் மன்னிக்காது பிரணாப் முகர்ஜி பேச்சுக்கு அத்வானி பதில்


ஆந்திராவைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 12 பேர் பலி எருமேலி அருகே பஸ் கவிழ்ந்தது


அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்தி நடிகர் ஷாருக்கான் வீடு திரும்பினார்


ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் ரூ.30 ஆயிரம் கடன்

இலங்கை ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்யத் தயார் ஆதரவு கட்சி தகவல்


மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் குளறுபடி ஒருவன் மீது மட்டுமே கோர்ட்டில் குற்றச்சாட்டு


ஆசிய நாடுகளில் 8 நாள் பயணம்: அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஜப்பான் சென்றார் பயண திட்டத்தில் இந்தியாவும் சேர்க்கப்படுகிறது


பாகிஸ்தானில் பின்லேடன் ஒளிந்து இருக்கும் இடம் கண்டுபிடிப்பு


அமெரிக்க நிதியை தீவிரவாதிகளுக்காக பயன்படுத்தவில்லை முஷரப் மறுப்பு


அமெரிக்க மாகாண சபையில் சமஸ்கிருத மந்திரம்


கிரீஸ் நாட்டில் நில நடுக்கம்

Monday, February 16, 2009

இன்றைய (பிப்ரவரி பதினேழு) தலைப்பு செய்திகள்








4-வது கட்டமாக இலவச கலர் டி.வி. -மு.க.ஸ்டாலின்

ரூ.750 கோடி செலவில் கலர் டி.வி.க்கள் கொள்முதல் செய்யப்
பட்டு, 4-வது கட்டமாக இந்த வாரம் வழங்கப்படும் -ஸ்டாலின்


மத்திய பட்ஜெட்டுக்கு கருணாநிதி பாராட்டு அடித்தள மக்களின் வாழ்வில் தொடர்ந்து ஒளி ஏற்றும் பட்ஜெட் என்று மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு கருணாநிதி பாராட்டு.


தமிழக கடலோர பாதுகாப்பு மேலும் வலுப்பெறுகிறது இந்திய கடற்படைக்கு 2 அதிநவீன போர் கப்பல்கள் சென்னையில் கவர்னர் அறிமுகம் செய்து வைத்தார்


முல்லைத்தீவில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் விமானம் மூலம் இந்திய அரசு உணவு பொட்டலங்களை போட வேண்டும் டாக்டர் ராமதாஸ், வேண்டுகோள்


சட்டசபையில், இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்
தமிழகசட்டசபையில் இந்த ஆண்டுக்கான நிதிநிலைஅறிக்கையை (பட்ஜெட்) க.அன்பழகன் இன்று தாக்கல் செய்கிறார்.


குடும்ப அரசியலில் இருந்து விலக அமெரிக்க மக்களிடம் இருந்து இந்தியர்கள் பாடம் கற்க வேண்டும் புத்தக வெளியீட்டு விழாவில் நரேந்திர மோடி பேச்சு


நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. மாவட்ட செயலாளர், தேர்தல் பணி செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது


ஆபரேஷன் செய்து தையல் பிரிக்கும் முன்பே பணிகளை கவனிக்கும் முதல்-அமைச்சர் கருணாநிதி படுக்கையில் இருந்தவாறே `பைல்கள்' பார்க்கிறார்


தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரம்: வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்துக்குள் கொடுக்கப்பட்டுவிடும் நரேஷ் குப்தா பேட்டி


இலங்கையில் போரை நிறுத்த மனிதச்சங்கிலி: பா.ம.க.வினருக்கு ஜி.கே.மணி வேண்டுகோள்


மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்: நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் கே.வி.தங்கபாலு பாராட்டு


தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் இன்று காலை நடக்கிறது


மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் `இனிப்பும், கசப்பும் கலந்துள்ளது' ஏ.சி.சண்முகம் கருத்து


இலங்கையில் இருதரப்பினரும் போரை நிறுத்த கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் `இளைஞர் சங்கிலி' 21-ந் தேதி நடக்கிறது


நரேந்திர மோடி அமர்ந்த நாற்காலி உடைந்தது மதுரை விழாவில் பரபரப்பு


போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


எல்.ஐ.சி. ஏஜெண்டு கொலை குற்றவாளிகள் கோர்ட்டில் சரண்


21-ந் தேதி வழங்கப்படுகிறது பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு எம்.ஜி.ஆர். விருது ஆர்.எம்.வீரப்பன் அறிவிப்பு


இடைக்கால பட்ஜெட் மகிழ்ச்சி அளிக்கிறது டாக்டர் ராமதாஸ் கருத்து


விடுதலைப்புலிகளை மட்டும் ஆயுதங்களை கீழே போட சொல்வதா? ப.சிதம்பரத்துக்கு வைகோ கண்டனம்


இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இலங்கைத்தமிழர் நல உரிமை பேரவையினர் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு சோனியாகாந்தி, பிரணாப் முகர்ஜியை நாளை சந்திக்கிறார்கள்


இன்று அறிவிக்கப்படும் பட்ஜெட்டில் சுகாதாரத்துறை வளர்ச்சிக்கு ஏராளமான புதிய திட்டங்கள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்


இடைக்கால பட்ஜெட்டில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை ஜெயலலிதா கருத்து


பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் நடத்தும் சில்லரை கடைகள் வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதா? மத்திய அரசாங்கத்துக்கு கடும் கண்டனம்


இலங்கை தமிழர்களை பாதுகாக்கக்கோரி மதுரையில் தென்மாவட்ட வக்கீல்கள் ஊர்வலம் காங்கிரஸ் கொடி எரிப்பு: மத்திய அரசு அலுவலகம் மீது தாக்குதல்


தொழில்நுட்ப சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்து தேர்வு சென்னையில் 22-ந் தேதி நடக்கிறது


போலி ஆவணங்கள் மூலம் மோசடி: இந்திய உணவுக்கழக அதிகாரிகளுக்கு ஜெயில் தண்டனை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


கள்ளச்சாராய ஒழிப்பில் சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசு கேடயம் வழங்கி டி.ஜி.பி. பாராட்டு


சட்டக்கல்லூரிகளை திறக்கக்கோரி வழக்கு பதில் தரும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இல.கணேசன் 64-வது பிறந்தநாளை கொண்டாடினார்


சொந்தமாக படமும் தயாரிப்பேன் ``சினிமாவில் தொடர்ந்து பாடுவேன்'' மு.க.முத்து மகன் அறிவுநிதி பேட்டி


சினிமா இசையமைப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏ.ஆர்.ரகுமானுக்கு பாராட்டு விழா மார்ச் 1-ந் தேதி நடக்கிறது


டான்ஸ்-ஸ்டண்ட் மாஸ்டர்களை தீர்மானிப்பதில் "தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களின் தலையீடு" டைரக்டர் விக்ரமன் கடும் தாக்கு


மத்திய பட்ஜெட்டில், புதிய வரிக∙-வரி சலுகை இல்லை மத்திய பட்ஜெட்டில் புதிய வரிகளோ, வரிசலுகைகளோ இல்லை. விதவைகள், உடல்ஊனமுற்றவர்களுக்கு பென்ஷன் அறிவிப்பு.


அரசியல் கட்சிகள் ``பந்த்'': சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது அரசியல் கட்சி
களின் உரிமை அதில் தலையிட முடியாது - சுப்ரீம் கோர்ட்டு


பட்ஜெட் தாக்கல் செய்தபோது, கேரள எம்.பி. `திடீர்' மயக்கம் பாராளுமன்றம் 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது


மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு


"மக்கள் பட்ஜெட்" என்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்


பெங்களூரில் மீண்டும் பயங்கர சம்பவம் விஞ்ஞானி, மனைவி, மகன் படுகொலை வளர்ப்பு மகனிடம் போலீசார் விசாரணை


`சத்யம்' நிறுவன தணிக்கை அறிக்கை போல மத்திய பட்ஜெட் உள்ளது பட்ஜெட் குறித்து பா.ஜனதா விமர்சனம்


மத்திய பட்ஜெட் தாக்கல் காலியாக இருந்த எதிர்க்கட்சி வரிசை


இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு ஆபரேஷன் மும்பை ஆஸ்பத்திரியில் நடந்தது


பாராளுமன்றத்தில் அரவாணிகளுக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி


முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி நாராயண் ரானே மீதான நீக்கம் உத்தரவு ரத்து காங்கிரஸ் அறிவிப்பு


பட்ஜெட்டுக்கு ப.சிதம்பரம் பாராட்டு


வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்


அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவி நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் ஏப்ரல் மாதம் விசாரணை


பட்ஜெட் உரையில் `கை' சின்னத்தை நினைவுபடுத்திய மந்திரி



விண்ணில் நடந்த விபத்தின் எதிரொலி செயற்கைக்கோளின் உடைந்த பாகங்கள் பூமியில் விழுகின்றன வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு ஆபத்து


சீன என்ஜினீயரை விடுவிப்பதற்காக 16 தலீபான் தீவிரவாதிகள் விடுதலை பாகிஸ்தான் அரசு நடவடிக்கை


இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த சர்தாரி அனுமதி பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதியில்

இங்கிலாந்து-பிரான்சு நீர்மூழ்கி கப்பல்கள் கடலில் மோதல்


அமெரிக்க அரசின் வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவத்தில் தமிழ்


அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 15 பேர் பலி


வெனிசுலா அதிபருக்கு வாக்கெடுப்பில் வெற்றி

Sunday, February 15, 2009

பிப்ரவரி பதினாறாம் நாள் தலைப்பு செய்திகள்








ரூ.42 லட்சம் கோடி அனுமதி: ஒபாமா நாளை கையெழுத்து இடுகிறார்


பாராளுமன்றத்தில் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், புதிய சலுகைகள் அறிவிக்கப்படுகிறது.

அவுரா - சென்னை `கோரமண்டல் எக்ஸ்பிரஸ்' ரெயில் விபத்தில் உயிர் தப்பிய பயணிகளுடன் தனி ரெயில் சென்னை வந்தது விபத்து குறித்து சென்னை பயணி உருக்கமான பேட்டி

இலங்கையில் போரை நிறுத்தக்கோரி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை மனிதச்சங்கிலி தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வைகோ அழைப்பு


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: இயக்குனர் சீமானை கைது செய்ய நடவடிக்கை புதுச்சேரி போலீசார் சென்னை விரைகின்றனர்

இலங்கை போரில் பிரபாகரனின் மகன்
வன்னி பகுதியில் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தலை
மை தாங்கி போரை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.


கோரமண்டல் ரெயில் விபத்தில் மன்னார்குடியை சேர்ந்த என்ஜினீயர் பலி


பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கிறது நடிகர் ஜெயம் ரவி காதல் திருமணம் பட அதிபர் மகளை மணக்கிறார்


கேரள மாணவர்கள் 5 பேர் சாவு நின்ற லாரி மீது கார் மோதியது


பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் தி.மு.க. ஆட்சிக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் சுயஉதவி குழுவினருக்கு சுழல்நிதி வழங்கி அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


போலீசாரின் உடமைகள் திருட்டு மத்திய ஜெயிலை பார்க்க ஒரு லட்சம் பேர் திரண்டனர் மரத்தில் இருந்து விழுந்து வாலிபர் காயம்


பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கை: மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய ஆலோசனைகள் டாக்டர் ராமதாஸ் தகவல்


கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் புதிய கட்சி-கொங்குநாடு முன்னேற்ற பேரவை பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து போட்டி


சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் "முடிந்தால் தடுத்து பாருங்கள்'' என்று மர்ம ஆசாமி போனில் சவால்


ஜெயிலில் நளினியிடம் பிரியங்கா பேசியது என்ன? ராஜீவ் கொலை கைதி முருகன் வெளியிட்ட தகவல்


பாராளுமன்ற தேர்தலில் சரத்குமார் போட்டியா? அவரே அளித்த பதில்


இலங்கை பிரச்சினை: விஜயகாந்த் போராட்டம் சென்னையில் உ∙ள இலங்கை தூதரகத்தைஅகற்றகோரி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் கூறினார்.


சென்னை பொருட்காட்சியில் விபத்து: ராட்டினம் அறுந்து விழுந்து 4 பேர் படுகாயம்


இலங்கை போர் பற்றி ப.சிதம்பரம் பேச்சு ஆயுதத்தை கீழே போடுவதாக விடுதலைப்புலிகள் அறிவித்தால் போர் நிறுத்தத்திற்கு இந்தியா ஏற்பாடு செய்யும் - ப.சிதம்பரம்.


போருக்கு தயாராவது போல பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக வேண்டும் ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார் இல்ல திருமண விழாவில் ஜெயலலிதா பேச்சு


குட்டையில் தண்ணீர் குடித்த போது பலி இறந்த குட்டி யானையை சுற்றி சோகத்துடன் நின்ற காட்டு யானைகள் பரிதாப காட்சி


சென்னை மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத மீன்கள் கிரேன் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்


இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி 200 பேர் கொண்ட குழுவினர் டெல்லி பயணம் நாளை பாராளுமன்றம் முன் மறியல் செய்ய முடிவு


சென்னையில் புதுமணத்தம்பதிகள் பரிதாப சாவு மனைவியை எரித்துக் கொன்று விட்டு, தீக்காயத்தால் கணவனும் இறந்தார்


இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பெங்களூரில் தமிழர்கள் நடத்திய பிரமாண்ட பேரணி


இடைக்கால பட்ஜெட்டுக்கு மன்மோகன்சிங் ஒப்புதல்


வானத்தில் சாகசம் செய்த போர் விமானத்தின் டயர்கள் வெடித்தன விமானிகள் உயிர் தப்பினார்கள்


முறையான அங்கீகாரம் பெறாமல் மாணவர்களை ஏமாற்றும் கல்லூரிகள் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


`பாகிஸ்தான் விரிக்கும் வலையில் சிக்க வேண்டாம்' மத்திய அரசுக்கு அத்வானி எச்சரிக்கை


தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, திருப்பதியில் போட்டி


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு


ராஜஸ்தான் விவசாயியின் வீடு, நிலம் குண்டு வீச்சில் சேதம் `நாங்கள் குண்டு வீசவில்லை' என்று இந்திய விமானப்படை அறிவிப்பு


சிங்கள ராணுவத்தின் தமிழின அழிப்பு நடவடிக்கை: தமிழ்ப் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய டாக்டர்களுக்கு உத்தரவு


இங்கிலாந்து பிரதமரின் செல்வாக்கு சரிவு


அமெரிக்க அரசின் வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவத்தில் தமிழ் உள்பட 21 இந்திய மொழிகள்


அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான `விசா' வழங்க புதிய கட்டுப்பாடு ஆண்டுதோறும் ஒரு லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் ஆபத்து


மும்பை தாக்குதல் தீவிரவாதிகளின் சதித்திட்ட முகாம் கண்டுபிடிப்பு 6 தீவிரவாதிகளை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு


பாகிஸ்தானில் சீன என்ஜினீயர் விடுவிப்பு தலீபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்


பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா.அதிகாரியை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் சர்தாரியிடம், பான் கீ-மூன் வற்புறுத்தல்


ஜப்பானில் நில நடுக்கம்

பிப்ரவரி பதினைந்தாம் தேதி செய்திகள்










செக்ஸ் கல்வியின் பயன்கள் என்ன? சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்


அதிகரித்து வரும் உள்நாட்டு பிரச்சினைகள்: காவல்துறைக்கு முறையான பயிற்சி இல்லாததே முக்கிய காரணம் ராணுவ கருத்தரங்கில், உயர் அதிகாரி பேச்சு


பூங்கா, கடற்கரை, தியேட்டர்களில் காதலர்கள் திரண்டனர் `காதலர் தினம்' கொண்டாட்டத்தால் களைகட்டிய சென்னை வாழ்த்து அட்டை, பரிசு பொருட்கள் கொடுத்து அசத்தினர்.


டேங்கர் லாரி கவிழ்ந்து, நடுரோட்டில் டீசல் ஆறாக ஓடியது போக்குவரத்து பாதிப்பு


காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கு திருமணம் இந்து மகாசபா சார்பில் நடந்தது.


கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சென்னை பயணி பலியா? உறவினர்கள் ஒரிசா விரைந்தனர்


வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகளின் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின


"தமிழுக்கும், தமிழனுக்கும் இமயம் கருணாநிதி'' ஜெகத்ரட்சகன் அறிக்கை


உடனடியாக போரை நிறுத்த இலங்கைக்கு சர்வதேச அமைதிப்படையை அனுப்ப வேண்டும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை உலக நாடுகளுக்கு வேண்டுகோள்


உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அன்பழகன் அறிவிப்பு


பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியா? சரத்குமார் பதில்


நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன: காதலர் தினம் கொண்டாடுவது தேவைதானா? `சர்வம்' பட பாடல் வெளியீட்டு விழாவில் திரிஷா பேட்டி


ஒரிசாவில் நடந்த விபத்து எதிரொலி: சென்னை-அவுரா கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ரத்து நெரிசலை குறைக்க மற்ற ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


இலங்கை பிரச்சினை: டாக்டர் ராமதாஸ் பேட்டி
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம்வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.


கன்னியாகுமரியில் வரலாறு காணாத அளவில் கடல் உள்வாங்கியது திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்


`புத்தக மூட்டைகளை சுமக்க தேவையில்லை' சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் புதிய திட்டம் அமல் மாநில கல்வித்திட்டத்திலும் கொண்டுவரப்படுமா?


உலக பொருளாதார நெருக்கடியினால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் `கேம்பஸ் இண்டர்விï' குறைந்து வருகிறது மாணவ-மாணவிகள் கலக்கம்

நடிகர் ஷாருக்கான் நடித்து வெளியான `பில்லு' படம் திரையிடப்பட்ட தியேட்டர் மீது கல்வீச்சு


ஆதரவு கொடுப்போம் காங்கிரசிடம் சரண் அடையமாட்டோம் அமர்சிங் சொல்கிறார்


ரெயில் விபத்து பற்றி உயர்மட்ட விசாரணை
சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து குறித்து, உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவேகவுடா அறிவிப்பு


வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன்சிங்தான் சோனியாவை தொடர்ந்து ராகுல் காந்தியும் அறிவிப்பு


டெல்லியில் பரபரப்பு பிரதமர் அலுவலகம் அருகே வாலிபர் தீக்குளிப்பு


வன்முறையை கைவிட்டு காஷ்மீர் தீவிரவாதிகள் ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் சோனியாகாந்தி அழைப்பு


பாராளுமன்ற தேர்தலில் போட்டி: 80 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்தது


அச்சுறுத்தலாக கருத முடியாது: ஸ்ரீராம் சேனா அமைப்பை விரைவில் ஒடுக்க வேண்டும் ப.சிதம்பரம் வற்புறுத்தல்


காதலர்தின கொண்டாட்டம் 2 ஜோடிகளுக்கு திருமணம் காதலர் தின கொண்டாட்டத்தின் போது, 2ஜோடிகளுக்கு பஜ்ரங்தள தொண்டர்கள் திருமணம் செய்து வைத்தனர்.



தீவிரவாதியை ஒப்படைக்க பாகிஸ்தான் வற்புறுத்தல்
முகமதுஅஜ்மலை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியாவிடம் கேட்போம் என்று அந்தநாட்டு உள்துறை மந்திரி தெரிவித்தார்.


ஐ.நா. அலுவலகம் முன்பு தமிழ் வாலிபர் தீக்குளிப்பு இலங்கைஅரசைகண்டித்து சுவிட்சர்லாந்து நாட்டில் ஐ.நா. அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளித்து மரணம்.


அப்பாவி மக்கள் தஞ்சம் அடைந்து இருந்த பாதுகாப்பு பகுதியில் இலங்கை ராணுவம் மீண்டும் குண்டு வீச்சு 27 பேர் பலி; 116 பேர் காயம்


ரூ.42 லட்சம் கோடி அனுமதி மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறியது


லண்டனில் விமானம் தரையிறங்கியபோது விபத்து; 2 பேர் காயம்


தலீபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானை கைப்பற்ற முயற்சி அதிபர் சர்தாரி குற்றச்சாட்டு


அபுதாபி அருகே சரக்கு கப்பல் கடத்தல்


பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 25 தீவிரவாதிகள் பலி


இலங்கை அதிபரின் தகவல் தொழில் நுட்பஆலோசகராக இன்போசிஸ் நாராயண மூர்த்தி நியமனம்

Friday, February 13, 2009

இன்றைய செய்திகள்


சனி ,பிப்ரவரி,14, 2009
கருணாநிதி, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டார் உடல்நிலையின் அனைத்து அம்சங்களும் நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர் அறிவிப்பு


"அப்பாடா... ஒரு 13 போய்விட்டது'' இன்னும் 2 வெள்ளிக்கிழமைகளில் 13-ந் தேதியை சந்திக்க வேண்டுமே அச்சத்தில் நடுங்கும் மக்கள்
கன்னியாகுமரி கடலில் நின்று கொண்டிருந்த கப்பலில் 4 பேர் பிணமாக கிடந்தனர் மயங்கிய நிலையில் கிடந்த 14 பேருக்கு தீவிர சிகிச்சை


சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர்கள் உருவப்படம் அவமதிப்பு: சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயந்தி நடராஜன் எம்.பி. வலியுறுத்தல்

இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை துணைக்குழுவின் 2-வது கூட்டம் சென்னையில் இன்று மாலை நடக்கிறது


வடபழனியில் `சாப்ட்வேர்' என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை


இன்று காதலர் தினம்: நேற்று ஒரே நாளில் ஒன்பது விவாகரத்து வழக்குகள் தாக்கல் காதல் திருமணம் செய்தவர்களும் `குட்பை' சொல்வதுதான் வேதனை


16-ந் தேதி முதல் மார்ச் 14-ந் தேதி வரை நடக்கிறது தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் ஜெயலலிதா அறிவிப்பு


சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு முதல் பயணம்: `செந்தூர் எக்ஸ்பிரஸ்' ரெயிலுக்கு பயணிகளிடம் அமோக வரவேற்பு கூடுதல் பெட்டிகளுடன் தினமும் இயக்க கோரிக்கை


வாடகைக்கு குடியிந்தவர் மிரட்டிய வழக்கு: நடிகை சாதனா சைதாப்பேட்டை கோர்ட்டில் சாட்சியம்


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ரெயில் மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் கைது

`தலைவன் இருக்கின்றான்' படத்தில் கமலஹாசன்-மோகன்லாலுடன் மம்முட்டி நடிப்பாரா?


சப்பாத்தி பார்சலில் மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி வாலிபர் கைது


எல்லா சினிமா படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களுக்கு முத்துக்குமார் பெயர் டைரக்டர் பாரதிராஜா அறிவிப்பு


பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட ரெயில்வே பட்ஜெட் ஜெயலலிதா கருத்து


சென்னையில் காதலர் தின பரிசுப்பொருட்களுக்கு `கிராக்கி'


இடைத்தரகர்களால் முதலுக்கே மோசம்: கூட்டுறவு சங்கங்கள் மூலமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் தமிழகவிவசாயிகள் கோரிக்கை


பாராளுமன்ற தேர்தலில் "தேசிய கட்சியுடன் மட்டுமே கூட்டணி'' சரத்குமார் பேட்டி

டாக்டர் நியமனத்திற்கு பணம் கேட்பதாக கூறுவது அப்பட்டமான பொய் அ.தி.மு.க.வின் உண்ணாவிரத போராட்டம் அரசியலாக்கும் செயல் சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை


சுதர்சன நாச்சியப்பன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது தலைவர்கள் உருவபொம்மையை எரித்தால் குண்டர் சட்டம் பாயும் கூடுதல் டி.ஜி.பி. எச்சரிக்கை


செந்தூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் பரிசாக கிடைத்த ஆட்டுக்குட்டியின் தாய்ப்பாச தவிப்பை கண்டு நெகிழ்ந்த லாலு தாய் ஆட்டை தூத்துக்குடியில் இருந்து டெல்லிக்கு குளு, குளு ரெயிலில் அழைத்து வர ஏற்பாடு

ரெயில்களில் 2 சதவீத கட்டணம் குறைப்பு

ரெயில்வேபட்ஜெட்டில் அனைத்து
வகை ரெயில்களுக்கும் 2 சதவீத கட்டணம்குறைப்பு. தமிழகத்துக்கு
புதிதாக 5ரெயில்க∙ அறிமுகம்.


19 பேரை கொன்ற வழக்கு: 2 பேருக்கு தூக்கு நொய்டாவில் சிறுமிகள், பெண் கள் உள்பட 19 பேரை கொன்ற வழக்கில், குற்றவாளிகளாக அறி விக்கப்பட்ட 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.


மும்பை தாக்குதல் பற்றிய பாகிஸ்தான் பதில்: பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி அறிக்கை "பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து நட்புறவை தீர்மானிப்போம்''


இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


இலங்கை தமிழர் பிரச்சினையை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை டெல்லியில் ம.தி.மு.க. நடத்திய உண்ணாவிரதத்தில் அத்வானி பேச்சு


டெல்லியில், இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சி


ரெயில்வே பட்ஜெட்டில் 43 புதிய ரெயில்கள் அறிவிப்பு தமிழகத்துக்கு 5 புதிய ரெயில்கள்


வருமானவரி வழக்கு: மாயாவதியின் மனு தள்ளுபடி


டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா வெளிநடப்பு


மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் காவல் நீடிப்பு


முல்லைபெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு துரதிர்ஷ்டவசமானது கேரள நீர்வள மந்திரி கூறுகிறார்

"பாராளுமன்றத்தை அடக்கம் செய்து விடலாம்" உறுப்பினர்களின் நடவடிக்கையால் சபாநாயகர் ஆவேசம்


இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் போக்கு பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கண்டனம்


நடிகர் ஷாருக்கான் வீடு மீது பாட்டில்கள் வீச்சு மும்பையில் நடிகர் ஷாருக்கான் வீடு மீது மண்எண்ணை நிரப்பிய பாட்டில்க∙ வீச்சு. 3 வாலிபர்கள் தப்பி ஓட்டம்.


தமிழ்நாட்டில்ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிப்பு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த மேலும் 4 வாரம் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.


`கோரம்' இல்லாததால் டெல்லி மேல்-சபை ஒத்திவைப்பு


"என்றாவது ஒருநாள், பிரதமர் ஆவேன்" லாலு சொல்கிறார்


முன்னெச்சரிக்கை நடவடிக்கை `ஸ்ரீராம் சேனா' தலைவர் முத்தாலிக் கைது

தீவிர கண்காணிப்புடன் இன்று காதலர் தினம்

சென்னை ரெயில் கவிழ்ந்து 15 பேர் பலி
சென்னை நோக்கி வந்த கோர
மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து 15 பேர் பலி. 100-க்
கும் மேற்பட்டோர் காயம்.


வீட்டின் மீது விமானம் விழுந்ததில் 49 பேர் பலி அமெரிக்காவில் பரிதாபம்


இஸ்ரேல் தேர்தலில் பெண் தலைவர் லிவினி வெற்றி


ஈராக்கில் பெண் தற்கொலை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 32 பேர் பலி


பாகிஸ்தானில் இருந்து "அல்கொய்தாவினரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்'' அமெரிக்க அதிகாரி தகவல்


அமெரிக்காவில் வர்த்தக மந்திரி பதவியை ஏற்க குடியரசு கட்சி எம்.பி. மறுப்பு


பாகிஸ்தானில் இருந்து "அல்கொய்தாவினரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்'' அமெரிக்க அதிகாரி தகவல்