Sunday, February 1, 2009

புலிகள் அதிரடி தாக்குதல் : 1000 ராணுவத்தினர் பலி?



கடந்த 2 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது ராஜபக்சே அரசு. ஆனால் போர் நிறுத்த நேரத்திலும் தாக்குதல் நடத்தி 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களை இலங்கை ராணுவம் கொன்றதாக சொன்னது புலிகள் அமைப்பு.

போர் நிறுத்த காலத்தில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துவிடும்படி தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார் ராஜபக்சே. ஆனால் இந்த அறிவிப்புக்கு தமிழ்மக்கள் ஆதரவு தரவில்லை. ஏற்கனவே ராணுவ பாதுகாப்பு வலைய பகுதியில் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் 300 பேர் உயிரை எடுத்த ராணுவத்தை நம்பி போகமாட்டோம் என புலிகள் பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

ராணுவத்தின் பாதுகாப்பில் உயிர் பிழைத்து சித்ரவதைகள் அனுபவிப்பதை விட புலிகளுடன் இணைந்து ராணுவத்தை எதிர்கொள்வோம் என முடிவெடுத்த பெரும்பாலான மக்கள் அதற்கு தங்களை தயார் படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முயன்றபோது விடுதலைப்புலிகள் பதிலடி கொடுத்துள்ளனர். அவர்களுடன் பயிற்சி பெற்ற பொதுமக்களில் சிலரும் ராணுவத்துடன் சண்டையிட்டனர்.

புலிகளின் இந்த பதிலடியில் 1000 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். மேலும் பெருமளவிலான ராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். ராணுவத்தின் 3 டாங்கிகளும் அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் இலங்கை அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், சமீபத்தில் புலிகளுக்கு தாய்லாந்திலிருந்து பெரிய அளவு ஆயுதங்கள் வந்திறங்கியுள்ளன. அந்த ஆயுதங்களுடன் ஏற்கனவே பதுக்கி வைத்திருக்கும் ஆயுத பலத்தோடு ராணுவத்தை எதிர்கொள்கின்றனர்” என்கிறார்கள்.

No comments: