Tuesday, February 17, 2009

இன்றைய (பிப்ரவரி பதினெட்டு ) தலைப்புச் செய்திகள்




தமிழக பட்ஜெட்டில் ரூ.100கோடி வரிச்சலுகைகள் தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. ரூ.100 கோடிக்கு புதிய வரிசலுகைகள்.


தங்கம் ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்தை தாண்டியது
அமெரிக்கா நலிவடைந்ததொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை அளித்து வருவதால் ஒரு பவுன் தங்கம் ரூ.11,000 தாண்டியது.


சுப்பிரமணியசாமி மீது தாக்குதல் வழக்கில் ஆஜராக வந்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தாக்கப்பட்டார். அவர்மீது வக்கீல்கள் முட்டைகளை வீசினார்கள்.


கோவில்பட்டி தட்சணமாற நாடார் சங்க பேட்டையில் பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகம் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் திறந்து வைத்தார்


சட்டசபையில் பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க. வெளிநடப்பு


தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்.வரதராஜன் கருத்து


திரைப்பட துறைக்கான வரி சலுகை மறு பரிசீலனை குழு அமைக்க முடிவு


"குறைகளும், நிறைகளும் கலந்த கலவையாக பட்ஜெட் உள்ளது'' டாக்டர் ராமதாஸ் கருத்து


செல்வம் விடுதலை சிறுத்தை எம்.எல்.ஏ.வாகவே தொடர்வார்: 27-ந் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது சபாநாயகர் ஆவுடையப்பன் பேட்டி


ஒரே பகுதியில் 3 ஆண்டுகளாக பணிபுரிபவர்கள் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் பாராளுமன்ற தேர்தலையொட்டி அதிரடி நடவடிக்கை


இலங்கை தமிழர் பிரச்சினை: இருசாராரும் போரை நிறுத்தி உடன்பாட்டுக்கு வர தீவிர முயற்சி மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள்


ரூ.444 கோடி செலவில் வெள்ள சேதத்தை தவிர்க்க சென்னையில் புதிய திட்டம் மத்திய அரசு ஒப்புதல்


மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் மனிதசங்கிலியில் மாணவர்கள் திரளாக பங்கு பெற வேண்டும் தி.மு.க. மாணவரணி செயலாளர் புகழேந்தி அறிக்கை


தி.மு.க. அரசின் மகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கற்கள் பட்ஜெட்டுக்கு தலைவர்கள் பாராட்டு


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் க.அன்பழகன் தலைமையில் நடந்தது


ஏழை, எளிய மக்களுக்கு பயனில்லை தொலைநோக்கு பார்வையில்லாத பட்ஜெட் ஜெயலலிதா கருத்து


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை அமைப்பினர், ஜனாதிபதியை சந்தித்து மனு


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு மேலும் அழுத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் சோனியாவிடம் டாக்டர் ராமதாஸ் நேரில் வலியுறுத்தல்


28 தமிழ் சான்றோர் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும்


"சிப்காட்" வளாகத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு பட்ஜெட்டில் அறிவிப்பு


பாலங்கள், சாலைகள் போன்ற சமூகநல திட்டங்களுக்காக தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பட்ஜெட் பற்றி, நிதித்துறை செயலாளர் பேட்டி


விரைவில் நிறுவப்படும் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை; சென்னையில் கன்னட கவிஞர் சர்வஜ்னா சிலை பட்ஜெட்டில் அறிவிப்பு


உடன்குடியில் விரைவில் மின் உற்பத்தி நிலையம் பட்ஜெட்டில் அன்பழகன் அறிவிப்பு


பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி தமிழக அரசு அறிவிப்பு


கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை மெட்ரோ ரெயில் கருணாநிதி விரைவில் அடிக்கல் நாட்டுகிறார்


மேலும் 25 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி.


தமிழகத்தில் மேலும் 29 சமத்துவபுரங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு


சுயதொழில் செய்வதற்கு உதவும் வகையில் ஊனமுற்றோருக்கு மோட்டார் பொருத்திய இலவச தையல் மிஷின்


ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ்: உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்காக முதல்வர் கலைஞரின் காப்பீட்டு திட்டம் பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு


பிளாட்பார மற்றும் வெற்றிலைபாக்கு கடைக்காரர்களுக்கு தனி நல வாரியம் பட்ஜெட்டில் அறிவிப்பு


மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று வரும் நிலையிலும்கூட பட்ஜெட் தயாரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்ட கருணாநிதி விரைவில் நலம்பெற சட்டசபையில் அன்பழகன் வாழ்த்து


தமிழக அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்


இந்திய இறையாண்மைக்கு எதிராக அறைகூவல் விடுப்போர் மீது கடும் நடவடிக்கை தமிழக அரசு எச்சரிக்கை


பயிர் கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால் விவசாயிகளின் புதிய கடனுக்கு வட்டி கிடையாது பட்ஜெட்டில் அறிவிப்பு


இலங்கைத் தமிழர்கள் படுகொலையை தடுக்க கோரி விஜயகாந்த் தலைமையில் சென்னையில் 20-ந் தேதி பேரணி அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் மனு கொடுக்கின்றனர்


நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்ணிடம் 30 பவுன் நகை பறிப்பு


நெல்லையில் நடந்த கூட்டத்தில் டைரக்டர் சீமான் பேச்சு கைது செய்ய புதுச்சேரி போலீசார் வந்ததால் பரபரப்பு


தமிழக பட்ஜெட்: தொலைநோக்கு திட்டங்கள் இல்லை சரத்குமார் அறிக்கை


அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம்


தமிழக பட்ஜெட் திகட்டாத தேன் மருந்தாக இனிக்கிறது எஸ்.ஜெகத்ரட்சகன் பாராட்டு


பாராளுமன்ற தேர்தலை முன்வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட் சட்டசபை கட்சி தலைவர்கள் கருத்து


இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தாம்பரம் முதல் குமரி வரை பிரமாண்ட மனித சங்கிலி


1,195 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் ஐகோர்ட்டு உத்தரவு


10, 12-வது வகுப்பு தேர்வுகள் சிறப்பாக நடக்க வினாத்தாள், தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


போரினால் பாதிக்கப்பட்ட "இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு'' நடிகர் மம்முட்டி பேட்டி


லாலு பிரசாத் மீது கொலை வழக்கு -கோர்ட்டு உத்தரவு
பாலம் கட்டும் போது, 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, லாலு பிரசாத் மீது கொலை வழக்கு பதிவு செய்ய, கோர்ட்டுஉத்தரவு.


கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் கமிஷன் தடை தேர்தல்களில் ஓட்டுப்பதிவு முடிவடைவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில்கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் கமிஷன் தடை.


விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவுக்கு காரணமான "கை"யை வருங்கால சந்ததிகள் மன்னிக்காது பிரணாப் முகர்ஜி பேச்சுக்கு அத்வானி பதில்


ஆந்திராவைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 12 பேர் பலி எருமேலி அருகே பஸ் கவிழ்ந்தது


அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்தி நடிகர் ஷாருக்கான் வீடு திரும்பினார்


ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் ரூ.30 ஆயிரம் கடன்

இலங்கை ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்யத் தயார் ஆதரவு கட்சி தகவல்


மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் குளறுபடி ஒருவன் மீது மட்டுமே கோர்ட்டில் குற்றச்சாட்டு


ஆசிய நாடுகளில் 8 நாள் பயணம்: அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஜப்பான் சென்றார் பயண திட்டத்தில் இந்தியாவும் சேர்க்கப்படுகிறது


பாகிஸ்தானில் பின்லேடன் ஒளிந்து இருக்கும் இடம் கண்டுபிடிப்பு


அமெரிக்க நிதியை தீவிரவாதிகளுக்காக பயன்படுத்தவில்லை முஷரப் மறுப்பு


அமெரிக்க மாகாண சபையில் சமஸ்கிருத மந்திரம்


கிரீஸ் நாட்டில் நில நடுக்கம்

No comments: