Sunday, May 17, 2009

தமிழகத்தில் தி.மு.க., - காங்., கூட்டணி அபாரம்: பா.ம.க., - ம.தி.மு.க.,வை வீழ்த்தியது; தே.மு.தி.க., - பா.ஜ., அணி தோல்வி






தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலம் வாய்ந்த கூட்டணி என்று கருதப்பட்ட அ.தி.மு.க., அணியை வீழ்த்தி, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. மாறி மாறி கூட்டணி அமைத்து வந்த பா.ம.க., - ம.தி.மு.க., தோல்வி அடைந்தன. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க., - பா.ஜ., அணிகளும் தோல்வியடைந்துள்ளன.



லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் வெவ்வேறு பிரச்னைகள் அலசப்பட்ட போதிலும், தமிழகத்தில் கூட்டணி பலத்தை வைத்து மதிப்பிடப்பட்டு வந்தது. அ.தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க., மற்றும் இடதுசாரிகள் சேர்ந்து அமைத்த கூட்டணியே பலமான கூட்டணியாக கருதப்பட்டது. இதுதவிர, இலங்கைப் பிரச்னையை முன்னிறுத்தி இக்கூட்டணி பிரசாரம் செய்ததால், தி.மு.க., அணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்டது.



அனைத்தையும் மீறி, மிகப் பெரிய வெற்றியை தி.மு.க., அணி பெற்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்த அணி முன்னிலை வகித்தது. சில தொகுதிகளில் மட்டும் இழுபறி நீடித்தது. இறுதியில், திருச்சி, விழுப்புரம் போன்ற தொகுதிகளில் முன்னணியில் இருந்த தி.மு.க., அணி வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். அதேபோல், காஞ்சிபுரம், சிவகங்கை, தேனி போன்ற தொகுதிகளில் முன்னணியில் இருந்த அ.தி.மு.க., அணி வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். தி.மு.க., அணி 28 தொகுதிகளிலும், அ.தி.மு.க., அணி 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.



இதில், தி.மு.க., 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒன்பது தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் ஒரு தொகுதியிலும், அ.தி.மு.க., ஒன்பது தொகுதிகளிலும், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. தி.மு.க., 22 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்பதிலும், விடுதலைச் சிறுத்தைகள் இரண்டில் போட்டியிட்டு ஒன்றிலும் வென்றுள்ளன.



அ.தி.மு.க., 23 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்பது தொகுதிகளிலும், பா.ம.க., ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு பூஜ்யத்தையும், ம.தி.மு.க., நான்கில் போட்டியிட்டு ஒன்றிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா மூன்றில் போட்டியிட்டு தலா ஒன்றிலும் வென்றுள்ளன. ஆளுங்கட்சிக்கு எதிரான பிரசாரம், இலங்கைப் பிரச்னை போன்ற எதுவும் இத்தேர்தலில் எடுபடவில்லை. வேட்பாளர்களின் மீதான அதிருப்தி காரணமாகவே, சில இடங்களை தி.மு.க., இழந்துள்ளது. மேலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றதில் அதிக தொகுதிகள் காங்கிரசுக்கு எதிராக வென்றவை. இத்தொகுதிகளிலும் தி.மு.க., நேரடியாக களமிறங்கி இருந்தால், கூடுதல் வெற்றி கிடைத்திருக்கும் எனக் கருதப்படுகிறது.



இத்தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்பட்ட சில கட்சிகள், ஓட்டுக்களை மட்டுமே பிரிக்க முடிந்ததே தவிர, டிபாசிட் கூட பெற முடியவில்லை. தே.மு.தி.க., 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டாலும், ஒவ்வொரு தொகுதியிலும் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஓட்டுகள் வரை பெற்றது. எனினும், எந்த தொகுதியிலும் இரண்டாவது இடத்தைக் கூட பிடிக்கவில்லை. இக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 322 ஓட்டுகளும், விழுப்புரத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 476 ஓட்டுகளும், விருதுநகரில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 229 ஓட்டுகளும்,



ஆரணியில் ஒரு லட்சத்து 5,893 ஓட்டுகளும், தர்மபுரியில் ஒரு லட்சத்து 3,485 ஓட்டுகளும் பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் குறைந்தளவு ஓட்டுகளே பெற்றுள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவும் புதிய அணியை அமைத்து போட்டியிட்டது. இதில், கன்னியாகுமரியில் இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 474 ஓட்டுகளை பெற்று இரண்டாவது இடத்தையும், ராமநாதபுரத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 322 ஓட்டுகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தது.



கன்னியாகுமரியில் அ.தி.மு.க., அணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் டிபாசிட் இழந்து, தே.மு.தி.க., வேட்பாளருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். மற்றபடி இக்கட்சி சார்பில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களான இல.கணேசன் 42 ஆயிரத்து 925 ஓட்டுகளையும், தமிழிசை சவுந்தரராஜன் 21 ஆயிரத்து 942 ஓட்டுகளையும், லலிதா குமாரமங்கலம் 30 ஆயிரத்து 329 ஓட்டுகளையுமே பெற்றனர். கோவையில் இக்கட்சி 37 ஆயிரத்து 909 ஓட்டுகளையும், நெல்லையில் 39 ஆயிரத்து 987 ஓட்டுகளையும் அதிகபட்சமாக பெற்றுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி வந்தது மட்டுமன்றி, எதிரணியை கடுமையாக விமர்சித்துவந்த பா.ம.க.,வுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. அதேபோல், ம.தி.மு.க.,வும் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

Wednesday, April 22, 2009

இன்றைய செய்திகள் (ஏப்ரல் இருபத்தி இரெண்டு )






ராஜபக்சே விசேஷ தூதர் டெல்லி வருகிறார்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கான ராணுவ தாக்குதல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 1 லட்சம் பேர், அரசு கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துவிட்டதாக, ராணுவம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில், இடம் பெயர்ந்துவரும் தமிழர்களின் மறுவாழ்வுக்கு உதவி கேட்பதற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சே அவருடைய மூத்த ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். அவர் டெல்லி வரும் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் விரைவில் அவர் இந்தியா செல்வார் என்று கொழும்பு அரசு வட்டார தகவல்கள் தெரிவித்தன. அரசு கட்டுப்பாடு பகுதிக்கு வந்துள்ள தமிழர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக உதவி கேட்டு, இந்திய அரசுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க., வேட்பாளர் ஜே.கே.ரித்தீசுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது

ராமநாதபுரம் தி.மு.க., வேட்பாளர் ஜே.கே.ரித்தீசுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. பசும்பொன் தேவர் குருபூஜை மோதல் வழக்கில், ராமநாதபுரம் தி.மு.க., வேட்பாளர் ஜே.கே.ரித்தீஷ் குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, கமுதி கோர்ட் உத்தரவிட்டது. பசும்பொன்னில் தேவர் குருபூஜையின் போது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் மகனான ஆர்.மங்கலம் ஒன்றிய செயலர் ஆனந்த் தரப்பினருக்கும், தற்போதைய ராமநாதபுரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரித்தீஷ்குமார் தரப்பினருக்கும் இடையே அபிராமம் அருகே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ரித்தீஷ் குமார் தரப்பை சேர்ந்த 37 பேரில் 36 பேர் ஜாமீன் பெற்றனர். ரித்தீஷ்குமார் மட்டும் ராமநாதபுரம் செஷன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் ஆர்டர் வாங்கி பிணையம் கொடுக்காமல் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இது தொடர்பாக ரித்தீஷ் குமாரை தலைமறைவு கைதியாக கருதி அவருக்கு கமுதி கோர்ட்டில் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் போலீசார் கைது செய்வதை தவிர்க்கும் வகையில், முன்ஜாமீன் கேட்டு அவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்துள்ளார். அம்மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. ரித்தீஸ் குமாருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

நளினியை விடுதலை செய்யக்கோரி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் தர்மாராவ், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வக்கீல்கள் வாதத்திற்கு பிறகு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.ராஜீவ்காந்தி கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தபோது, ஜெயின் கமிஷன் அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை என்பது குறித்தும், ஜெயின் கமிஷன் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்தும் மனுதாக்கல் செய்யும்படி சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஸ்ரீபெரும்புதூரில் தே.மு.தி.க. வேட்பாளர் மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூர் மணிக்கூண்டு அருகே இருந்து 1500க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் தே.மு.தி.க., கொடியை பிடித்தபடி முரசு அடித்து ஊர்வலமாக வந்த தே.மு.தி.க., வேட்பாளர் அருண் சுப்பிரமணியம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசன், சி.எச்.சேகர், மற்றும் நகர ஒன்றிய வட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பீலிபட் தொகுதியில் வருண் காந்தி மனு தாக்கல்

உத்தரபிரதேச மாநிலம் பீலிபட் தொகுதியில் வருண் காந்தி பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரசாரத்தின் போது மத விரோத கருத்துக்களை வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார். இந்த பிரச்சினையை அடுத்து வருண் காந்தியை வேட்பாளராக நிறுத்த கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. ஆனால் அதை பாரதீய ஜனதா ஏற்கவில்லை. வருண் காந்தியை மாற்ற மாட்டோம் என்று திட்டவட்டமாக அறி வித்தது. வருண் காந்தி இன்று பீலிபட் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விரைவில் சட்டசபை தேர்தல் : நாஞ்சில் சம்பத்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் இன்று சிறையில் இருந்து வெளி வந்தார். அப்போது பேசிய அவர், லோக்சபா தேர்தலுக்கு பின் கருணாநிதி சட்டசபை தேர்தலை சந்திக்கும் காலம் கனிந்து வருகிறது. தமிழ்நாட்டில் எல்லா சிறைகளையும் பார்த்து விட்டேன் சேலம் சிறையை பார்க்க ஆவலாக உள்ளது. எனவே அடுத்து என்னை சேலம் சிறையில் அடைக்க கருணாநிதி ஆவன செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில் ம.தி.மு.க. தே.மு.தி.க. பங்கேற்காது

நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில் ம.தி.மு.க., தே.மு.தி.க. பங்கேற்காது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

என் பேரைச் சொல்ல எதிர் கட்சிகள் தயங்குகின்றன : விஜயகாந்த்

சேலம் மாவட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கள்ளக்குறிச்சி வேட்பாளர் சுதீ‌ஸை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது : எதிர்கட்சிகளான அ.தி.மு.க.,வும் - தி.மு.க.,வும் எனது பெயரை சொல்ல கூட தயங்குகின்றன. என் பெயரை கேட்டாலே எதிர்க் கட்சிகள் அதிர்கின்றன. என்னை பற்றி பேசினால் அவர்களே என் வளர்ச்சிக்கு வழி வகுத்ததாக ஆகி விடுமோ என அஞ்சுகின்றனர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். இது தேர்தலில் ஓட்டு சேகரிப்பதற்காக அவர் நடத்தும் நாடகம். இதை கண்டு மக்கள் ஏமாறக்கூடாது . திருவாரூரில் இருந்து வெறும் மஞ்சள் பையுடன் வந்த கருணாநிதி இன்றைக்கு கோடியாக கோடியாக சொத்து சேர்த்தது எப்படி.. ஜெயலலிதாவும், சசிகலாவும், சொத்துக்களை குவித்து வைத்துள்ளனர். அவர்கள் இப்படி சொத்துக்களை குவித்ததற்கு நீங்கள் தான் காரணம். நீங்கள் ஓட்டுப் போட்டதால் தான் அவர்கள் வெற்றி பெற்றனர். 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். நான் மக்களுக்கு சேவை செய்வேன் என்பதற்கு நானே எடுத்துக்காட்டும் கூறுகிறேன். தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் அமைத்துள்ளேன். அதில் ஒரு லட்சம் பேர் பயணடைந்துள்ளனர். 26,00 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். நான் ஆட்சிக்கு வந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்ப‌தோடு , படிக்காத இளைஞர்களுக்கும் தொழிற்கல்வி மூலம் வேலை வாய்ப்பு அளிப்பேன் . ஒரு ரூபாய் அரிசியை சமைத்தால் வாடை குடலை புரட்டுகிறது. வாழப்பாடியில் சமைத்தால் இங்கு வரை நாற்றம் அடிக்கிறது. மாற்றம் வரவேண்டும். எனவே தே.மு.தி.க., வுக்கு ஓட்டளியுங்கள் . இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தில் அமைதியாக ஈடுபடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ் இனத்தைப் படுகொலை புரியும் இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாதமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காக தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும்கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன் வந்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அமைதியான முறையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிற தமிழ் இனத்துக்காக விடுகின்ற கண்ணீரும் கூட என்கிற உணர்வோடு இந்த வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள மீண்டும் வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


விடுதலைப்புலிகள் முக்கிய புள்ளிகள் சரண்

விடுதலைப்புலிகள் முக்கிய புள்ளிகளான தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் சரணடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் ‌இலங்கை ராணுவத்தின் 58வது பிரிவு படையினரிடம் சரணடைந்துள்ளதாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயகரா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் நக்சலைட்டுகள் சிறை பிடித்த 700 பயணிகள் விடுவிப்பு

பீகார், ஜார்க் கண்ட் மாநிலங்களில் 2-வது கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிக்கும்படியும் முழு அடைப்பு நடத்தவும் நக்சலைட்டுகள் இன்று அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை பயணிகள் ரெயிலை நக்சலைட்டுகள் சிறை பிடித்தனர். அந்த ரெயில் ஜார்க்கண்ட் மாநிலம் பர்கானாவில் இருந்து மொகுல்சாரை என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. வழியில் லேட்கர் மாவட்டத்தில் ஹெலக கார்கா ரெயில் நிலையம் அருகே அந்த ரெயிலை நக்சலைட்டுகள் வழி மறித்து சிறை பிடித்தனர்.ரெயிலில் 700 பயணிகள் இருந்தனர். பயணிகளை தீவிரவாதிகளின் துப்பாக்கி முனையில் பணய கைதிகளாக வைத்து உள்ளனர். பந்த் நடக்கும் போது ரெயில்களை ஓட்டக் கூடாது என்று ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். சிறிது நேரத்தில் நக்சலைட்டுகள் சிறை பிடித்த ரெயிலை விடுவித்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரி கூறும்போது, "700 பயணிகளையும் நக் சலைட்டுகள் விடுவித்தனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். விடுவிக்கப்பட்ட அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது என்றார்.

நாராயணசாமிக்கு காமராஜர் சமூக நீதி இயக்கம் ஆதரவு

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு அளிப்பதாக காமராஜர் சமூக நீதி இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, முன்னாள் புதுச்சேரி சுகாதராத் துறை அமைச்சரும், காமராஜர் சமூக நீதி இயக்க நிறுவனருமான பெருமாள் தெரிவிக்கும் போது, வரும் மே 13ம் தேதி நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என ‌கூறினார்.

வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பொருளாளர் சுதர்சனம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கைப் போரால் பலியாகி வரும் அப்பாவி தமிழர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திட ஜன நாயக முற்போக்கு கூட் டணி தலைவர் முதல்- அமைச்சர் கருணாநிதி நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் அறிவித்துள்ள முழு வேலை நிறுத்த வேண்டுகோளை தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்று அதில் பங்கேற்கிறது. வேலை நிறுத்தம் முழு வெற்றியைப் பெற தமிழகத்தின் அனைத்து காங்கிரஸ் சகோதர, சகோதரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பை அளித்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நட்சத்திர சின்னம் கேட்டு திருமாவளவன் வழக்கு: 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விடுதலை சிறுத்தை கட்சிக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சி தலைவர் திருமாவளவன் வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்தது. அதனைதொடர்ந்து, வழக்கு 24ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் போட்டி

காஞ்சீபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பி.விசுவநாதன் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் மேலிடம் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. மேலும் விருதுநகர் தொகுதியில் சுந்தரவடிவேலுக்கு பதில் மானிக் தாகூர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நக்சலைட்டுகளை ஒழிப்பதில் தவறிவிட்டது பீகார் : லாலு

நக்சலைட்டுகளை ஒழிப்பதில் பீகார் அரசு தோல்வியடைந்து விட்டது என ரயில்வே துறை அமைச்சர் லாலு தெரிவித்துள்ளார். பீகாரில் தேர்தலை சீர்குலைக்கும் விதமாக, பர்கானாவில் இருந்து முகல்சாராய் பகுதிக்கு சென்ற பயணிகள் ரயிலை மவோயிஸ்டுகள் சிறைப்பிடித்து, பின்னர் விடுவித்தனர். இதுகுறித்து லாலு தெரிவிக்கும் ‌போது, நக்சலைட்டுகளால் ரயில் கடத்தப் பட்டதை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறேன். நக்சலைட்டுகளை ஒழிப்பதில் நிதீஷ்குமார் அரசு முற்றிலும் ‌தோல்வி அடைந்து விட்டது என தெரிவித்தார்.

போர் பகுதியில் இருந்து தமிழர்கள் அனைவரும் தப்பி விட்டனர்: இலங்கை அரசு தகவல்

இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- ராணுவத்தின் 58-வது படை பிரிவு இதுவரை 48 ஆயிரத்து 501 தமிழர்களை மீட்டு உள்ளது. 55-வது டிவிசன் 10 ஆயிரத்து 743 பேரை மீட்டு உள்ளது. 53-வது டிவிசன் 3267 பேரை மீட்டு உள்ளது. இத்துடன் நேற்று இரவு வரை 62 ஆயிரத்து 609 பேரை மீட்டு உள்ளோம். தற்போதைய நிலையில் போர் பகுதியில் பொது மக்கள் வேறு யாரும் இல்லை. அத்தனை பேரும் தப்பி வந்து விட்டனர். மக்கள் வெளியேறிய பகுதியில் ராணுவம் உள்ளே நுழைந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை விடுதலைப்புலிகள் தரப்பில் மறுத்து உள்ளனர். இலங்கை அரசு முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறி உள்ளது. இன்னும் லட்சக்கணக் கான மக்கள் பாதுகாப்பு பகுதியிலேயே உள்ளனர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பந்தினால் விமான சேவை பாதிக்கப்படாது

பந்தினால் விமான சேவை பாதிக்கப்படாது என சென்னை விமான நிலைய இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து வழக்கம் போல் விமானங்கள் இயங்கும் ‌என அவர் தெரிவித்துள்ளார்.


நாளை வேலை நிறுத்தம்:அ.தி.மு.க. பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கும்- ஜெயலலிதா

"போர் நிறுத்தம் செய்யுங்கள்'' என்று உலகமே கேட்கும் இந்த நேரத்தில் கூட, "வேலை நிறுத்தம் செய்யுங்கள்'' என்று இங்கே முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் ஒர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கிறது. பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் பொது வேலை நிறுத்தங்களை சட்ட விரோதம் என்றும் அறிவித்திருக்கிறது. வேலை நிறுத்தம் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யுமா? இலங்கையில் மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை எண்ணி தமிழ் நாட்டில் கலங்கி நிற்கும் தமிழர்களுக்கு மேலும் பல இழப்புகளையும், இடைஞ்சல்களையும் தான் பொது வேலை நிறுத்தம் தரும். இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெற்று வெளிவேடம். எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
உருதில் குற்றப் பத்திரிகை : கசாப் மனு தள்ளுபடி

மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் , குற்றப்பத்திரிகையில் இருப்பது புரியவில்லை எனவும், எனவே குற்றப்பத்திரிகையை உருதில் மொழியாக்கம் செய்து தருமாறு மனு தாக்கல் செய்திருந்தான். அவனது மனு மீதான விசாரணை இன்று சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அஜ்மலின் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் கசாப் தரப்பில் ஆஜராகி அவன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாட மே 2ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்த 5 பெண்கள் கைது

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணா விரதம்இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். 10-வது நாளாக உண்ணா விரதம் இருக்கும் பெண்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களில் 5 பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ம.தி.மு.க. அலுவலகத்தில் படுத்து தூங்கி போராட்டம் செய்து வரும் அவர்களை இன்று போலீசார் கைது செய்தனர். போலீஸ் இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் அன்பு ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை 5.45 மணியளவில் தாயகம் சென்றனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்களை போலீசார் தட்டி எழுப்பினார்கள். உடல்நிலை மோசமாக இருந்த 5 பெண்கள் யார்? என்று விசாரித்தார்கள். அவர்களை கைது செய்து வேனில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட லோகநாயகி, ஜெயமணி,சுமதி, சித்ராதேவி, தங்கமணி ஆகிய பெண்களுக்கு போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இலங்கையில் இறுதி கட்ட போர்: விடுதலைப்புலிகள் ஊடுருவலை தடுக்க தமிழ் நாட்டில் பலத்த பாதுகாப்பு

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடை பெறும் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளை சிங்கள ராணுவம் சுற்றி வளைக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, விடுதலைப்புலிகள் அங்கிருந்து தப்பி தமிழ் நாட்டுக்குள் ஊடுருவலாம் என்ற நிலை இருக்கிறது. மத்திய அரசும் இது குறித்து தமிழக அரசை எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே "கெடு"வை ஏற்க விடுதலைப்புலிகள் மறுப்பு: "சரண் அடைய மாட்டோம்"- "தொடர்ந்து போராடுவோம்" - என்று திட்டவட்ட அறிவிப்பு

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனும் மற்ற தளபதிகளும் 24 மணி நேரத்திற்குள் சரண் அடைய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே இறுதி கெடு விதித்து இருந்தார். இந்த கெடு இன்று பகல் 12 மணியுடன் முடிவடைந்தது. ஆனால், இந்த கெடுவை விடுதலைப்புலிகள் நிராகரித்துவிட்டனர். அதைத்தொடர்ந்து, இலங்கை ராணுவத்தினர் மீண்டும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வலைஞர் மடம், மாத்தளன் ஆகிய இரு முனைகளில் முன்னேறிச்சென்று தாக்குதல் நடத்தினார்கள். இதற்கிடையில், "இலங்கை ராணுவத்திடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்; தமிழ் மக்களின் உதவியுடன் தொடர்ந்து போர் புரிந்து வெற்றி பெறுவோம்'' என்று, விடுதலைப்புலிகளின் அமைதி செயலக பொதுச்செயலாளர் புலித்தேவன் அறிவித்தார்.

`ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு டெலிபோன் மூலம் அளித்த பேட்டியில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். போர் முனையில் பாதுகாப்பு பகுதி எல்லையில் இருந்து பேசுவதாக அவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் அந்த பகுதியில் இருந்து போரை நடத்தி வருவதாக புலித்தேவன் கூறினார்

உலக நாடுகள் இனியும் தாமதிக்காமல் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வற்புறுத்தாவிட்டால், ரத்த ஆறு ஓடுவதை தடுக்க முடியாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். புலித்தேவன் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது-

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகள், `நாபாம்' மற்றும் `பாஸ்பரஸ்' விஷக்குண்டு தாக்குதலில் 1000 பேர் பலியாகி உள்ளனர். 2300 பேர் படுகாயம் அடைந்தனர். பலியான நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் மாத்தளன் மற்றும் பொக்கணை பகுதியில் இன்னும் சிதறிக்கிடக்கின்றன. படுகாயம் அடைந்த 600 பேர் முள்ளிவாய்க்கால் பகுதியில் பள்ளிக்கூடத்தில் செயல்பட்டுவரும் தற்காலிக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு புலித்தேவன் கூறினார். அதேபோல், தமிழர்களுக்கு எதிராக மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவம் வெளியிட்ட தகவலை, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் மறுத்து இருக்கிறார். 3-வது நாட்டின் மேற்பார்வையில் போர்நிறுத்தத்துக்கு விடுதலைப்புலிகள் தயார் என்றும் அவர் அறிவித்தார்.

"ராகிங்' வழக்கில் இன்று தீர்ப்பு

"ராகிங்' வழக்கில் தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர்களின் முன்ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு கூறப்படுகிறது.கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி மாணவர் அகில் தேவ். இருவாரங்களுக்கு முன், இவரது அறைக்குள் புகுந்த சீனியர் மாணவர்கள் ராகிங் செய்து, அடித்து சித்ரவதை செய்தனர். இதில், மாணவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கில் தலைமறைவாக உள்ள மாணவர்கள் அஸ்வின், அர்ஜூன் ஆகியோர் சார்பில், முன் ஜாமீன் கேட்டு, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான வாதம் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்படுவதாக இருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் சார்பில் நேற்று, மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய் யப்பட்டது. அதில், தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதால், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களுக்கு முன்ஜா மீன் வழங்கக் கூடாது என, தெரிவிக்கப்பட்டது. இதை பரிசீலித்த மாவட்ட நீதிபதி சொக்கலிங்கம், முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம் 9-வது நாளாக நீடிப்பு

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதம் இன்று 9-வது நாளாக நீடித்தது. போராட்டத்தை கைவிட வேண்டும் என்று விஜயகாந்த் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்தார்.

புது சட்டசபை பணி: முதல்வர் பார்வை

புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். உயர் அதிகாரிகளுடன், பணிகள் குறித்து விவாதித்து ஆலோசனைகள் வழங்கினார். அப்போது, உள்துறை முதன்மைச் செயலர் மாலதி, நிதித்துறை முதன்மைச் செயலர் ஞானதேசிகன், சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

பயங்கரவாதத்தை எந்த மதமும் போதிக்கவில்லை: பிரதிபா

பயங்கரவாதத்தை எந்த மதமும் போதிக்கவில்லை என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மூன்று நாள் பயணமாக ஸ்பெயின் மற்றும் போலந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதிபா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "பயங்கரவாதத்தால் மும்பை மட்டுமல்ல, மேட்ரிட் போன்ற நகரங்களும் பாதிக்கப் பட்டுள்ளன. யங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. "அனைவரும் ஒன்றுபடுவதன் மூலமே பயங்கரவாதத்தை களைய முடியும். மக்களுக்கு தீமை தரும் பயங்கரவாதத்தை எந்த மதமும் போதிக்கவில்லை' என்றார்.

ஸ்பெயின் மன்னர் ஜுவான் கார்லோஸ், அரசி சோபியா உள்ளிட் டோரையும் பிரதிபா சந்திக்க உள்ளார். ஸ்பெயின் பார்லிமென்டிற்கு அவர் செல்ல இருக்கிறார்.

தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் அவர் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.

கள்ளுக்கடையை திறப்பதில் தவறு இல்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கள்ளுக்கடை திறப்பு என்பது நியாயமானதுதான். அரசு மதுபானக்கடைகளிலே விஸ்கி, பிராந்தி விற்பனை செய்யும்போது விஞ்ஞானிகளால் உணவுப்பொருள் என்று நிரூபிக்கப்பட்ட கள்ளை விவசாயிகள் இறக்குவது, விற்பது, குடிப்பதில் தவறு கிடையாது. மாநில அரசிடம் இதை வலியுறுத்த வேண்டும். இதற்கு எங்கள் கட்சியில் உள்ள சில பொறுப்பாளர்கள் தடையாக இருந்தால் அவர்கள் பற்றி சோனியாகாந்தியிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவேன். அதே நேரம் பரிபூரண மதுவிலக்குக்கும் பூரண ஆதரவு உண்டு. இவ்வாறு மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
வருண் கோரிக்கை: நிராகரித்தது தேர்தல் கமிஷன்

"பிலிபிட் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளரை மாற்ற வேண்டும். நடுநிலையான பார்வையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்' என்ற பா.ஜ., வேட்பாளர் வருணின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக துணை தேர்தல் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: பிலிபிட் மாவட்ட கலெக்டரையும், போலீஸ் கண்காணிப்பாளரையும் மாற்றுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக கமிஷன் கருதவில்லை. அதனால், வருணின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் பார்வையாளர்கள் அனைவரும் நடுநிலையுடன் செயல்படுபவர்கள் என்பதால், நடுநிலையான பார்வையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரிக்கிறோம். முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்படும். வருணுக்கு பாதுகாப்பு அளிக்கும் விவகாரம் குறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஒருவருக்கு எவ்வளவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் மதிப்பிட முடியாது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழ்நாடு முழுவதும் வியாழக்கிழமை வேலை நிறுத்தம்-கருணாநிதி

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வற்புறுத்தி தமிழ்நாடு முழுவதும் 23-ந் தேதி (வியாழக்கிழமை) வேலைநிறுத்தம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் இன்று எழுதியுள்ள உடன்பிறப்புகளுக்கான கடிதத்தைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23-4-2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல, இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிற தமிழ் இனத்துக்காக விடுகின்ற கண்ணீரும்கூட என்கிற உணர்வோடு இந்த வேலைநிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள மீண்டும் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார். வேலை நிறுத்தம் நடைபெறும் 23-ந் தேதி அன்று படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் நடைபெறாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் கூறினார்.

ஜே.கே. ரித்தீஷ் முன்ஜாமீன் கோரிய வழக்கு: இன்று விசாரனை

தேவர் குருபூஜையின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஜே.கே. ரித்தீஷ் கோரிய முன்ஜாமீன் வழக்கு இன்று விசாரனைக்கு வருகிறது. லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகர் ஜே.கே. ரித்தீஷ். கடந்த தேவர் குருபூஜையின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். இதனால் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரியிருந்தார், இதுதொடர்பான வழக்கு விசாரனை இன்று நடைபெறுகிறது.


பாராளுமன்ற தேர்தலுக்காக இதுவரை 277 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 5-வது கட்டமாக மே மாதம் 13-ந் தேதி ஒரேநாளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 4-வது நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் 60 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 277 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா குறிப்பிட்டார்.

விஜய டி.ராஜேந்தர் இன்று மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் இன்றும், தே.மு.தி.க., சுதீஷ் நாளையும் மனு தாக்கல் செய்கின்றனர். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஒரே நாளில் மனு தாக்கல் செய்னர். ஒரே நாளில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ததால், கள்ளக்குறிச்சி நகரம் திக்குமுக்காடியது. இந்நிலையில், தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷ், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் நாளை (23ம் தேதி) மனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தனர். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ஆறுமுகம் இரு கட்சியினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்பே அறிவித்தபடி தே.மு.தி.க., 23ம் தேதி(நாளை)யும், இன்று விஜய டி.ராஜேந்தரும் மனு தாக்கல் செய்வது என முடிவானது.

லாலுவுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்காது: காங்கிரஸ் பதிலடி

பீகார் மாநிலம், சமஸ்திபூர் நகரில் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி வந்தார். அப்போது அவர் லாலுவை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் கூறியதாவது:- காங்கிரசுடனான உறவை முறித்துக் கொண்ட பிறகு லாலு பிரசாத்தும், அவரது கட்சியும் பீகார் மாநிலத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. மத்தியில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார்?.. பா.ஜனதாவா?.. தேசிய ஜனநாயக கூட்டணியா?.. மூன்றாவது அணியா?... அல்லது லாலுவா?.. ஆட்சியை அமைப்பதை விடுங்கள். அவர் எந்த அணியில் இருக்கிறார் என்பதே தெளிவாகத் தெரியவில்லை. லாலுவுடன் எந்தவொரு பெரிய கட்சியும் இல்லை. எனவே அவருக்கு மத்திய மந்திரி சபையில் மீண்டும் இடம் கிடைப்பது கஷ்டம்தான் என்று கூறினார். இதற்கு, லாலுபிரசாத் பாட்னா நகரில் பேட்டியளித்தபோது பதிலடி கொடுத்தார். `நாங்கள் இல்லாமல் யார் ஆட்சியமைக்க முடியும்? மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும். அப்போது யார் மந்திரியாக இருப்பார்கள். யார் வெளியேறுவார்கள் என்பது தெரிய வரும்' என்று பிரணாப் முகர்ஜிக்கு பதில் அவர் அளித்தார்.

பிரபாகரனை நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள்: பிரியங்கா

பிரபாகரனை நாட்டு மக்கள் ஒரு போதும் மன்னிக்கமாட்டார்கள் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் தனது சகோதரர் ராகுலுக்காக தீவிர பிரசாரம் செய்தார் பிரியங்கா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "முன்னாள் பிரதமர் ராஜிவை கொலை செய்த பிரபாகரனை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என, பிரியங்கா கூறியுள்ளார். எனினும் தனிப்பட்ட முறையில் பிரபாகரன் மீது தனக்கும் தமது குடும்பத்திற்கும் எவ்வித கோபமும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.


இந்த நிமிடம் தவறினால் தமிழினத்தை காக்க முடியாமலே போய்விடும்: டாக்டர் ராமதாஸ்

இந்த நிமிடம் தவறினால் தமிழினத்தை காக்க முடியாமலே போய்விடும். இலங்கை தமிழினம் பேரழிவை சந்திப்பதற்கு முன்னர் ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரிட்டன் கோரிக்கை: இலங்கை நிராகரிப்பு

"விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என்பது அவசியமற்றது' என, பிரிட்டன் அரசுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே பதிலளித்துள்ளார். இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், அதிபர் ராஜபக்ஷேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, முல்லைத் தீவில் ராணுவ தாக்குதலை நிறுத்தும்படி வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த அதிபர் ராஜபக்ஷே, "புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என்பது அவசியமற்றது. பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்தப் பின், பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும். மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சி ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது' என, உறுதியளித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காஷ்மீரில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்; 5 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரில் உள்ள ராணுவ மையத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு டிரக் வண்டி சென்றது. பாபியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் அந்த டிரக் சென்றபோது தீவிரவாதிகள் அதை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதில் அந்த டிரக் வெடித்துச் சிதறியதுடன் பல தடவை உருண்டு பள்ளத்தாக்கிற்குள் விழுந்தது. இந்த சம்பவத்தில் டிரக்கில் இருந்த 5 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்தார்கள். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.

ஐ.பி.எல்.,டுவென்டி20:கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 11ரன்னில் வெற்றி

ஐ.பி.எல்.,டுவென்டி20 கிரிக்கெட் தொடரின் 6வது போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகிறது. டாஸ் வென்ற கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வுசெய்தது. முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற அடிப்படையில் அடுத்து களமிறங்கிய கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 9.2 ஓவரில் 1விக்கெட் இழப்பிற்கு 79 ரன் எடுத்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லிவிஸ் படி ‌கோல்கட்டா நைட் ‌ரைடர்ஸ் அணி ‌11 ரன்னில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கெய்ல் அதிரடியால்(44) ஆட்டநாயனாக அறிவிக்கப்பட்டார்.

இலங்கை தமிழர் மீதான தாக்குதல்உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது முழக்கம்: ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை ராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை ராணுவம் விரட்டி அடித்துக் கொல்கிறது. அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை அளிக்கும் செய்தி நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற இனப்படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், தெளிவான முடிவை முதல்-அமைச்சர் கருணாநிதி தைரியமாக எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள், இலங்கை தமிழர்களுக்காக தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றனர். பல நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன.இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் இந்த நிமிடத்தில் நமது ஒரே முழக்கம் இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

விருதுநகரில் மழைக்கு மூன்று பேர் பலி

விருதுநகரில் மழைக்கு மூன்று பேர் பலியானார்கள். விருதுநகரில் பெய்த திடீர் மழையால் திருச்சுழி பகுதியை சார்ந்த பால்காரர் மணியன் என்பவர் மின்னல் தாக்கி பலியானார். இதேபோல் வத்திராயிருப்பு நெடுங்குளம் அருகே மழை மற்றும் பலத்த காற்றால் மரம் சாய்ந்து பஞ்சவர்ணம் என்ற பெண்ணும், மற்றொரு ஆணும் பலியானார்கள்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்ரூ.70 லட்சம் கோடியை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடியை போட்டு வைத்து இருப்பதாகவும், சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு உள்ள இந்த கறுப்பு பணத்தை மீட்க அந்த வங்கிகளை அணுக வேண்டும் என்றும் பாரதீய ஜனதா தலைவர் அத்வானி மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார். இதேபோல் இடதுசாரி கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக பிரபல சட்ட நிபுணரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத்மலானி, பஞ்சாப் மாநில முன்னாள் `டி.ஜி.பி.` கே.பி.எஸ்.கில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்த வழக்கில் மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி, `செபி' அமைப்பு, அமலாக்கப்பிரிவு இயக்குனரக இயக்குனர், மத்திய நேர்முக வரிகள் வாரிய தலைவர் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த மனு ஆய்வுக்கு வந்தது. மனு மீது இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
வாக்காளர்களை ஆசிர்வதிக்கும் ‌சாமியார் வேட்பாளர்

கர்நாடகாவில் உள்ள டும்குர் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சாமியார் என்பதால், வாக்காளர்கள் அவரிடம் வந்து ஆசிர்வாதம் பெற்று செல்கின்றனர். பொதுவாக வேட்பாளர்கள் அனைவரும் மக்களிடம் பிரசாரம் செய்து, அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று செல்வார்கள். ஆனால், கெளரிசங்கர் சுவாமி என்ற இந்த வேட்பாளரே, சாமியார் என்பதால் மக்களே அவரிடம் வந்து ஆசிர்வாதம் பெற்று செல்கின்றனர். இதனால் அவர் பிரசாரம் செய்வதும் மிக எளியதாகி விட்டது. இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது, அரசியல் என்பது ஒரு சமூக சேவை. அதனால் தான் மக்களுக்கு சேவை செய்யும் ‌விதமாக அரசியலை தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என தெரிவித்தார்.

இலங்கை தமிழர் மீது கொடூர தாக்குதல்: 24-ந் தேதி கறுப்பு கொடி அஞ்சலி

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொத்துக் குண்டுகளை வீசி சிங்கள ராணுவம் கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மனித பேரழிவைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு முன் வராததைக் கண்டித்தும், கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் வரும் 24-ந் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழ்நாடு முழுவதும் கறுப்பு கொடி ஊர்வலங்கள் நடத்த வேண்டும். சரியாக மாலை 6 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி அமைதி அஞ்சலி செலுத்த வேண்டும். அமைதி அஞ்சலி செலுத்தும் நேரத்தில் அனைத்து போக்குவரத்தையும் நிறுத்தி, அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தும், வீடுகளில் இருப்பவர்கள் வீட்டுக்கு உள்ளேயும் 5 நிமிட நேரம் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அறிக்கையில் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

பீட்டருக்கு எதிராக தீர்மானம்: தென்காசி காங்கிரசில் புயல்

தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வெள்ளைப்பாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வாசன் ஆதரவாளர். கடையநல்லூர் எம்.எல்.ஏ.,பீட்டர்அல்போன்சின் முயற்சியில்தான் இவருக்கு சீட் கிடைத்தது. நெல்லை மேற்கு மாவட்ட காங்.,தலைவர் கொடிக்குறிச்சிமுத்தையா. இவர் ஈ.வி.கே.எஸ்.,இளங்கோவன் ஆதரவாளர். பீட்டர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமல் தேர்தல் பணிகள் மேற்கொள்வதாகவும், வேட்புமனுதாக்கல் செய்வதற்கு கூட தங்களை அழைக்கவில்லை எனவும் இளங்கோவன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு கொடி பிடிக்க துவங்கியுள்ளனர். தென்காசியில் இளங்கோவன் ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில், வேட்பாளர் வெள்ளைபாண்டி பீட்டரின் கைப்பாவை போல செயல்படுவதாகவும், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை கலந்துஆலோசிக்காமல் கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை செலவழிக்க "வழிகாட்டுதல் குழு' ஒன்றை அமைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தனர். தென்காசியில் பீட்டர் நடத்த உள்ள காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தையும் தேர்தல் பணிகளையும் புறக்கணிக்கவும் முடிவு செய்தனர். நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புவிற்கு எதிராக தனுஷ்கோடிஆதித்தன ஆதரவாளர்கள் களம் இறங்கியுள்ள நிலையில் தென்காசியில் வெள்ளைப்பாண்டிக்கு எதிராக இளங்கோவன் ஆதரவாளர்கள் கண்டன தீர்மானம் போட்டுள்ளதும் இருவரும் இன்னமும் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்பாகவே கோஷ்டிபூசல் களைக்கட்டியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, April 21, 2009

இன்றைய செய்திகள் (ஏப்ரல் இருபத்தியொன்று)

சரண் அடைய பிரபாகரனுக்கு விதித்த கெடு முடிந்தது: ராணுவம் இறுதிகட்ட தாக்குதல்

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புக்கு கிழக்கே 20 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.

அங்கு விடுதலைப்புலிகள், 2 லட்சம் தமிழர்களும் உள்ளனர். சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் தினமும் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வந்தனர். இதை ஐக்கிய நாட்டு சபையும், சர்வதேச நாடுகளும் கண்டித்தன. அப்பாவி மக்கள் உயிரிழப்பை தடுக்கும்படி கேட்டு கொண்டன. ஆனாலும் இதைப்பற்றி கவலைப்படாத சிங்கள ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது.

விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதியை நாலா புறமும் முற்றுகையிட்டு இருந்த ராணுவம் நேற்று அதிரடியாக உள்ளே புகுந்து தாக்கியது. பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த ராணுவம் அங்கிருந்த ஒரு பகுதி மக்களை வெளியே கொண்டு வர முயற்சித்தது. அதற்கு வெற்றி கிடைத்தது. 35 ஆயிரம் மக்களை அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றியது.

மேலும் அங்கு தங்கியிருக்கும் மக்களையும் வெளியே கொண்டு வர ராணுவம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது. விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதாக தகவல் வந்தாலும் அரசு தரப்பில் 70 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக கூறி வந்தனர்.

அதில் 35 ஆயிரம் பேர் வெளியேறி விட்டதால் இதை பெரிய வெற்றியாக சிங்கள அரசு கருதுகிறது. இருப்பினும் இருக்கும் மக்களையும் வெளியேற்றி விட்டு விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட ராணுவம் தயாராகி வருகிறது.

மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டால் சில மணி நேரத்திலேயே விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்து விடலாம் என்று நினைக்கின்றனர். எனவே அதிபர் ராஜபக்சே பிரபாகரனுக்கு நேற்று 24 மணி நேரம் கெடு விதித்தார். கெடுமுடிவதற்குள் பிரபாகரனும் மற்றவர்களும் சரண் அடைய வேண்டும் இல்லை என்றால் விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்து விடுவோம் என்று அவர் எச்சரித்தார்.

இந்த கெடு நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து மிகப்பெரிய தாக்குதலை நடத்த சிங்கள ராணுவம் தயாராகி வருகிறது. விடுதலைப்புலி கட்டுப்பாட்டு பகுதியின் கிழக்கே கடல் உள்ளது. இங்கு கடற்படை தயாராக நிற்கிறது. மற்றும் மேற்கு, வடக்கு, தெற்கு பகுதியில் 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் உள்ளே அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்த தயாராக நிற்கின்றனர்.

எனவே இதுவரை இல்லாத அளவுக்கு எந்த நேரத்திலும் பெரிய தாக்குதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சண்டையே இறுதி போராக இருக்கும். விடுதலைப்புலிகளும், இறுதி கட்டத்தில் இருப்பதால் அவர்களும் புதிய முறையில் தாக்குதல்களை நடத்தி சிங்கள படையை நிலை குலைய செய்ய வாய்ப்பு உள்ளது.

பிரபாகரன் என்ன முடிவு எடுக்க போகிறார்? அவர் தப்பி செல்வாரா? அல்லது கடைசி வரை எதிர்த்து போரிடுவாரா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் ஈழப்போர் முற்றிலும் முடிவுக்கு வந்துவிடும் நிலையை எட்டி உள்ளது. நேற்று 35 ஆயிரம் தமிழர்களை வெளியே கொண்டு வந்ததற்காக இலங்கை அரசுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் தொகுதியில் வைகோவை எதிர்த்து கார்த்திக் போட்டி

விருதுநகர் தொகுதியில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவை எதிர்த்து நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் களமிறங்குகிறார். தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கு 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன . விருதுநகர் தொகுதியில் கார்த்திக்கும், தேனியில் பார்வதியும் போட்டியிடுகின்றனர்.

காக்கிநாடாவில் கோர்ட்டு நீதிபதி மீது ஆசிட் வீச்சு

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள 3-வது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் இன்று மதியம் ஒரு வழக்கின் விசாரணையை நீதிபதி நாகமாருதி சர்மா நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வழக்கு விசாரணைக்காக வந்திருந்த சூரிய நாராயணா(45) என்பவர் திடீரென்று நீதிபதியை நோக்கி ஆசிட்டை வீசினார். இதில் நீதிபதியின் கழுத்து, காது ஆகிய இடங்களில் ஆசிட் கொட்டி உடல் வெந்தது. இதனால் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். உடனடியாக நீதிபதியை காக்கி நாடா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். ஆசிட் வீசிய சூரியநாராயணாவை போலீசார் கைது செய்தனர். நீதிபதி மீது அவர் எதற்காக ஆசிட் வீசினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நவீன் சாவ்லா பதவியேற்றார்


தலைமை தேர்தல் கமிஷனர் கே.கோபாலசுவாமி நேற்று ஓய்வு பெற்றார். புதிய தலைமை தேர்தல் கமிஷனராக 64 வயதான நவீன் சாவ்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். அடுத்த ஆண்டு ஜுன் 29-ந் தேதி வரை அவர் அந்த பொறுப்பில் இருப்பார். இதே போல 3-வது தேர்தல் கமிஷனராக மின்துறை செயலாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வி.எஸ்.சம்பத் பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்ட நவீன் சாவ்லா கூறும் போது 3 தேர்தல் கமிஷனர்களும் இணைந்து முடிவு எடுப் போம் என்றார். கட்சி சார்பாக செயல்படு வதாக கூறி நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என்று கோபாலசுவாமி ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்க வில்லை.

எங்கும் மரண ஓலம்: ராணுவம் குண்டு வீச்சில் 1496 தமிழர்கள் பலி!.3,333 பேர் படுகாயம்

விடுதலைப்புலிகளிடம் இருக்கும் முழு பகுதியையும் பிடிப்பதற்காக கடந்த ஒரு வாரமாக சிங்கள ராணுவம் ஆவேச தாக்குதலை நடத்தி வருகிறது.

புதுக்குடியிருப்புக்கு கிழக்கே விடுதலைப்புலிகள் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் பாதுகாப்பு அரணை அமைத்து இருந்தனர் இதை தகர்த்து கொண்டு சிங்கள படை நேற்று உள்ளே புகுந்தது. அந்த பகுதியில் ஏராளமான தமிழர்கள் தஞ்சம் அடைந்து இருந்தனர். அவர்கள் கூட்டத்துக்குள் புகுந்து ராணுவத்தினர் சரமாரியாக சுட்டனர். இதனால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. மக்கள் அங்கும், இங்கும் ஓடினார்கள். இந்த குழப்பத்தில் ஏராளமான மக்கள் அங்கிருந்து வெறியேறி அரசு கட்டுப்பாட்டு பகுதிக்கு ஓடிவந்தனர். அவர்களை சிங்கள ராணுவம் மனித கேடயமாக பிடித்து கொண்டது. தமிழர்களை முன்பே அனுப்பி பின்னால் இருந்தபடி விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனால் விடுதலைப்புலிகள் எதிர் தாக்குதல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி சிங்கள ராணுவம் வேகமாக உள் பகுதிக்குள் முன்னேறியது.

அதே நேரத்தில் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசியது. கொத்து குண்டுகள், வெள்ளை புகைகளை கக்கும் ரசாயன குண்டுகள் ஆகியவற்றையும் வீசினார்கள். இதில் சிக்கி ஏராளமானோர் பலியானார்கள். வெள்ளை புகையால் குறிப்பிட்ட தூரம் வரை எதையும் பார்க்க முடியவில்லை. இதனால் குழப்பம் அடைந்து மக்கள் வெவ்வேறு திசையில் ஓடினார்கள். இன்று காலை வரை நடந்த குண்டு வீச்சில் 1496 பேர் பலியாகி உள்ளனர். 3,333 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் 476 பேர் சிறுவர்கள்.

ஒரே நாளில் இவ்வளவு பேர் பலியானதால் எங்கும் மரண ஓலமாக இருந்தது. தெருக்களில் ஆங்காங்கே பிணங்கள் சிதறி கிடந்தன. காயம் அடைந்தவர்களையும் யாரும் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லவில்லை. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தால்நேற்று ஏராளமான குழந்தைகள், பெற்றோர்களை பிரிந்து திசைமாறி சென்று விட்டனர். அவர்களை பெற்றோர்கள் தேடி அலைந்தது பரிதாபமாக இருந்தது.

தேசத்தின் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணம் காங்., : ராஜ்நாத்சிங்

உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் தேர்தல் பிரசார‌த்தில் ஈடுபட்ட பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் தேசத்தின் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காங்கிரஸ் தான் காரணம் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி போன்ற கட்சிகள் அரசியல் மனோதிடம் இல்லாத கட்சிகள் . இவ்வாறு காங்., அரசியல் மனோதிடம் இல்லாமல் இருப்ப‌தால் தான் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுகின்றன. சமாஜ்வாடி கட்சியும் , பகுஜ் சமாஜ் கட்சியும் ஜாதி, மத அடிப்டையில் ஓட்டு சேகரிக்க கனவு காண்கின்றன . அது பலிக்காது. முன்பிருந்ததை விட தே.ஜ., கூட்டணி சக்தி வாய்ந்ததாக இருக்கிறது . ஐ.மு., கூட்டணியோ சி‌தறி கிடக்கிறது. இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

முதல்வர் பதவியை உணரவில்லை கருணாநிதி : ஜெ., தாக்கு

முதல்வர் பதவியை உணர்ந்து கருணாநிதி செயல்படவில்லை என முதல்வர் கருணாநித மீது அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றச்சாட்டி உள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜெயலலிதா பேட்டி அளித்தார். அப்போது, பிரபாகரன் எனது நண்பன். அவர் பயங்கரவாதி அல்ல என கருணாநிதி தெரிவித்தது குறித்த தங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு, கருணாநிதி வெளியிட்டுள்ள இந்த செய்தியில் இருந்தே, அவர் முதல்வர் பதவியை உணர்ந்து செயல்படவில்லை என்பது தெரிகிறது. கருணாநிதி விஷயத்தில் சோனியா மவுனம் காப்பது ஏன்? சோனியா தானே காங்கிரஸ் கட்சி தலைவர்? இது குறித்து அவர் நிச்சயம் கருத்து தெரிவிக்க வேண்டும். ஆனால், இதற்காக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமலும், இது குறித்து எந்த கருத்தையும் சோனியா வெளியிடாமலும் இருப்பது பெரும் வருதத்திற்குரியது.

பிரபாகரன் குறித்த கருணாநிதி செய்திக்காக, அவரை போலீசார் கைது செய்யவேண்டும். ஆனால் தமிழக போலீசார் முதல்வர் கைபிடிக்குள் இருக்கும் போது, அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.‌ இது குறித்து மத்திய அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்த கேள்விக்கு, சரத்பவார் முதர்ச்சியும், அனுபவமும் உள்ள மூத்த அரசியல் தலைவர், அவர் நிச்சயம் பிரதமர் வேட்பாளராக முடியும் என தெரிவித்தார்.


மன்மோகன்சிங்கை பிரதமராக ஏற்க முடியாது: லாலு பிரசாத் அறிவிப்பு

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக, மன்மோகன்சிங்கை ஏற்க முடியாது என்று, லாலு பிரசாத் யாதவ் அறிவித்து இருக்கிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-"மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு அமைப்பான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, காங்கிரசுக்கு மட்டும் சொந்தம் அல்ல. தேர்தலுக்குப்பின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வகுப்பதுடன், பிரதமர் யார் என்பதையும் தீர்மானிப்போம். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைப்பதில் உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை. பீகார் மாநிலத்தை பொறுத்தவரை, இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், அவர்களுடைய கட்சியின் பலம் குறித்து சோனியாகாந்திக்கு தவறான தகவலை தெரிவித்ததால், பல இடங்களில் எங்களுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலுக்குப்பிறகு அவர்களால் சோனியாவின் முகத்தில் விழிக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

மதவாதமும் , பயங்கரவாதமும் தலைதூக்க முடியாது : மன்மோகன்சிங்

மதவாதமும் , பயங்கரவாதமும் நாட்டில் தலைதூக்க முடியாது என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவம் போன்றவை இனிமேல் நடைபெறாது . எந்த ஒரு மதத்தையும், ஜாதியையும் குறி வைத்து தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரை நிறுத்த இறுதிக்கெடு விதிக்க வேண்டும்: பிரதமர்- சோனியாவுக்கு கருணாநிதி தந்தி

முதல்-அமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தந்தி அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோச மான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது. ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இலங்கை அரசை உடனே போரை நிறுத்தும் படி வற் புறுத்தி உள்ளனர். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தும் படியும், நிரந்தர போர் நிறுத்தம் செய்யும்படியும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இலங்கை அரசுக்கு இறுதி கெடு விதிக்க வேண்டும், லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதா? தேர்தல் கமிஷனர்களுக்கு மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்திரபிரதேச முதல்-மந்திரியுமான மாயாவதி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக தேர்தல் கமிஷனர்கள் செயல் படுகிறார்கள். அவர்கள் மூலம் அரசியல் நெருக்கடி கொடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். தேர்தல் கமிஷனர்கள் நவீன் சாவ்லாவும், என்.ஒய்.குரேஷியும் காங்கிரஸ் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்களாக செயல்படுகின்றனர். இவர்களின் நடவடிக்கையால் நாட்டில் அமைதியாகவும், சுதந்திர மாகவும் தேர்தல் நடை பெறாது. இவர்களின் இந்த நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல்லில் விஜயகாந்த் பிரசாரம் : திமுக, பாமக மீது காட்டம்

வாங்கும் திறன் அரசியல் வாரிசுகளிடம் தான் அதிகரித்துள்ளது என நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசாரம் செய்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர் மகேஷ்வரனை ஆதரித்து திருச்செங்கோட்டில் பிரசாரத்தில் பேசிய விஜயகாந்த் வாங்கும் திறன் மக்களிடம் அதிகரித்துள்ளதாக ஆளும் கட்சியினர் கூறி வருகின்றனர். வாங்கும் திறன் அவர்களது வாரிசுகளிடம் தான் அதிகரித்துள்ளது என கூறினார். மேலும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் திமுக, அதிமுக கூட்டணியில் சேர 2 ஓட்டு பெட்டி வைக்கப்பட்டது. தனித்து போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவிக்க பெட்டி வைக்கவில்லை. அவர்களிடம் தனித்து நிற்க தைரியம் இல்லை என பாமகவை விஜயகாந்த் விமர்சித்தார்.

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து ஐகோர்ட்டு வக்கீல்கள் மீண்டும் போராட்டம்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 1 மாதம் போராட்டம் செய்தனர். பின்னர் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசை கண்டித்து கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டுக்கு திரும்பினர். இந்த நிலையில் இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் இன்று மீண்டும் போராட்டம் செய்தனர். ஐகோர்ட்டு வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் உண்ணாவிரதம் இருந்தனர். ஐகோர்ட்டுக்கு வக்கீல்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.


520 தொகுதிகளில் பா.., கூட்டணி போட்டி: அருண் ஜெட்லி

லோக்சபா தேர்தலில் 520 தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து பொதுச் செயலர் அருண் ஜெட்லி, நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 520 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், 427 இடங்களில் பா.ஜ., தனியாகவும், 93 இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. நாகலாந்து, மிசோரம் மற்றும் ஆந்திராவில் உள்ள தொகுதிகளில் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

மேலூர் தொகுதியை முற்றுகையிட்ட வேட்பாளர்கள்

மதுரை தொகுதியில் மேலூரை குறி வைத்து மு.க. அழகிரி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் இவர் ஓட்டு சேகரித்தார். தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசு மேலூரின் 21 வார்டுகளில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது : மேலூர் இ.மலம்பட்டியை சேர்ந்தவன் நான். மேலூர் மில்கேட்டில் 15 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் பஞ்சு மில்லை திறந்து இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவேன். சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் தர்பார் ராஜா காரில் தனியாக மேலூரில் சுற்றிக் கொண்டிருந்தார். மார்க்ஸிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ரங்கராஜன் எம்.பி., தலைமையில் செக்கடியில் நடைபெற்றது. ஒரே நாளில் வேட்பாளர்களின் முற்றுகையால் மேலூர் களை கட்டியது.

குழப்பத்தில் இருக்கிறார் கருணாநிதி: தா.பாண்டியன் கடும் தாக்கு

"மாற்றி, மாற்றி சொல்வது கருணாநிதி குழப்பத்தில் இருப்பதையே காட்டுகிறது,'' என்று இ.கம்யூ., பொதுச் செயலர் தா.பாண்டியன் கூறினார். வடசென்னை லோக்சபா தொகுதி வேட்பாளரும் இ.கம்யூ., மாநிலச் செயலருமான தா.பாண்டியன், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: "என்.டி.டி.வி.,யில் எனது பேட்டியை முழுமையாக போடவில்லை' என, கருணாநிதி சொல்லியிருக்கிறார். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு பிரபாகரன் எனது நண்பர் என கூறியிருக்கிறார். அவர் இன்று ஒன்று பேசுவார்; நாளை வேறொன்று பேசுவார்; மொத்தத்தில் அவர் முழுக்க குழப்பத்தில் இருகிறார் என்பதை இது காட்டுகிறது. இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.


இலங்கையில் போரை நிறுத்தகோரி சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்- பஸ் உடைப்பு

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் இலங்கை அரசை கண்டித்தும், இந்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென் சோனியாகாந்தியின் உருவப்பொம்மையை கொளுத்தினர். அப்போது சேலம் அடிவாரத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கல்லூரி மாணவர்கள் அந்த பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் ஜான்நிக்கல்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர்.

அரசியலில் அருமையான தலைவர்கள் உண்டு : இன்போசிஸ் தலைவர்

அனைத்து அரசியல் கட்சிகளிலும் அருமையான தலைவர்கள் இருக்கிறார்கள் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது : அனைத்து அரசியல் கட்சிகளிலும் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் . கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா, வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் போன்ற சிறந்த தலைவர்களை கண்டுள்ளதே ஒரு சிறநத எடுத்துக்காட்டாகும் . அரசியலில் நாகரிகமான தலைவர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு குடிமக்களுக்கு உண்டு . தேர்தலில் ஓட்டளிப்பது ஜனநாயகம் வெற்றிப் பாதையில் தான் செல்கிறது என்பதை உணர்த்த உதவும் முதல் படியாகும் . இவ்வாறு ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

முல்லை தீவில் இருந்து தப்பி வேதாரண்யத்துக்கு வந்த 19 இலங்கை அகதிகள்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை மீட்பதற்காக முல்லை தீவு மாவட்டத்தில் இலங்கை ராணுவம் உச்ச கட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு முல்லை தீவில் இருந்து தப்பி ஓரு படகில் இலங்கை அகதிகள் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டு துறைக்கு வந்தனர். இதில் 8 பெண்களும், 9 ஆண்களும், 2 குழந்தைகளும் இருந்தனர். தப்பி வந்த 19 இலங்கை அகதிகளும், மீனவர் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அகதிகள் தப்பி வந்த தகவல் அறிந்ததும் வேதாரண்யம் தாசில்தார் முகமது கமால் பாட்சா, வேதாரண்யம் போலீஸ் டி.எஸ்.பி. சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்றனர்.படகில் தப்பி வந்த இலங்கை அகதிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மீட்பு பணிகள் முடிந்ததும் பிரபாகரன் மீது தாக்குதல் : உதய நாணயகரா

இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயகரா செய்தியாளர்களிடம் பேசியபோது : இலங்கையில் போர் பகுதியில் சிக்கியிருக்கும் அப்பாவி மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. அப்பாவி மக்கள் மீட்கப்பட்ட பிறகு பிராபகரன் மீது தாக்குதல் நடத்தப்படும் . இலங்கை அரசு அப்பாவி மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது, அவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்பாவிகள் பலியாவதை தடுத்து நிறுத்துங்கள்:அமெரிக்கா வற்புறுத்தல்

அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராபர்ட்வுட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கையில் நிலைமை மோசமாகி வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் அப்பாவி மக்கள் ஏராளமானோர் பலியாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே அப்பாவி மக்கள் பலியாவதை தடுத்து நிறுத்துங்கள், ராணுவம், விடுதலைப்புலிகள் இருவருமே மக்கள் உயிருக்கு உத்தர வாதம் வழங்க வேண்டும். மனிதாபிமான உதவிகளை அந்த மக்களுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும். அங்கும் நடக்கும் கொடூரங்களை தடுக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

கடுமையான போட்டியை சந்திக்கும் ஜார்ஜ் பெர்னாண்டஸ்

பீகார் லோக்சபா தேர்தலில் கடுமையான போட்டியை ஜார்ஜ் பெர்னாண்டஸ் சந்திக்க உள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் உட்கட்சிப் பூசல் வெடித்ததை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மூத்த தலைவர் திக் விஜய்சிங் ஆகியோருக்கு லோக்சபா தேர்தலில் சீட் வழங்கப் பட வில்லை. இருபது ஆண்டுகளாக தொடர்ந்து எல்லா லோக்சபா தேர்தல்களிலும் போட்டியிட்டவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். தற்‌போதுள்ள அரசியல் சூழ்நிலையில், அவரது உடல்நிலை ஒத்துழைக்காது என்பதை கருத்தில் கொண்டே அவருக்கு சீட் வழங்கப் படவில்லை என ஜக்கிய ஜனதா தளம் கருத்து தெரிவித்தது. இதனைதொடர்ந்து, சுயோச்சையாக முஜாப்பர்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்தார். ஜார்ஜ் பெர்னாண்டசின் உடல் சோர்ந்து விட்டாலும், அவரது மூளை மிகவும் கூர்மையாக செயல்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர் ‌வெற்றி பெற இன்னும் சில கைகளுடன் இணைய வேண்டியது அவசியம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றன.


இலங்கையில் மனிதநேயம் மங்கிவிட்டது : அமெரிக்கா கவலை

இலங்கையில் போர் பகுதியில் கடைசி கட்ட தாக்குதல் நடந்து வரும் நிலையில், மனிதநேயம் மங்கி விட்டது என அமெரிக்கா கவலை‌ தெரிவித்துள்ளது. போர் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் நிலை பரிதாபத்தில் உள்ளது . இலங்கை அரசும் , விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த வேண்டும் . அமெரிக்கா உலக நாடுகளுடன் இணைந்து இந்த பிரச்னையில் எவ்வளவு தூரம் உதவ முடியுமோ அதை செய்யும் . இவ்வாறு செய்தி தொடர்பாளர்(பொறுப்பு) ராபர்ட் வுட்ஸ் தெரிவித்துள்ளார்.

மீலாது சமய மத நல்லிணக்க விழா

செங்குன்றம் வட்டார இம்தாத் பைத்துமால் மற்றும் இஸ்லாமிய இளைஞர் நலச்சங்கம் சார்பில், மீலாது சமய மத நல்லிணக்க விழா பொதுக்கூட் டம் பஸ் நிலையம் அருகே நடந்தது. செங்குன்றம் ஆயிஷா பள்ளி இமாம் காஜா மொய்னுத் தீன் ஜமாலி தலைமையில், பேராசிரியர் பெரியார் தாசன், சித்தர்கள் ஞானபீட அறக்கட்டளை தலைவர் சற்குரு சவுந்தர் ராஜ், சார்லஸ் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மத நல்லிணக்கம் குறித்து பேசினர். நாரவாரிக்குப்பம் பேரூராட்சி துணைத்தலைவர் ஏ.பாபு, கவுன்சிலர்கள் டி. ரமேஷ், ஏ. திராவிடமணி, எஸ்.எம்.ரமேஷ் உட்பட செங்குன்றம் சுற்று வட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எழும்பூரில் மேலும் ஒரு வக்கீல் சங்கம்

சென்னை எழும்பூர் மாநகர கோர்ட்டில் வக்கீல்களின் புதிய சங்கம்
துவங்கப்பட்டது. இதன் அறிமுக விளக்க கூட்டத்தில் சங்கத் தலைவர் வக்கீல் சேகர் கூறியதாவது:சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீல்களின் நலனுக்காக எங்கள் சங்கம் துவங்கியுள்ளோம். இது பதிவு செய்யப் பட்ட சங்கமாகும். நீதிபதிகள் - வக்கீல்கள் உறவை மேம்படுத்த பாடுபடுவோம். சங்கத்தின் மூலமாக சிறந்த நீதிபதிகளை உருவாக்க வக்கீல்களுக்கு பயிற்சி அளிக்க உள் ளோம். நவீன சட்ட நூலகமும் உருவாக்கப்படும். வழக்குகளை தாமதமின்றி நடத்துவதற்கான கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பு நீதிமன்றத்திற்கு வழங்கப்படும்.இவ்வாறு வக்கீல் சேகர் தெரிவித்தார். உடன் செயலர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர் இருந்தனர்.


ஆந்திர மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள்: சிரஞ்சீவி

பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது:- ஆந்திர மக்கள் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் மீது கடும் வெறுப்பில் உள்ளனர். அவர்கள் ஆட்சியில் விவசாயிகள், கூலி தொழிலாளர்களுக்கு எந்த வித உதவியும் அரசு செய்யவில்லை. அவர்கள் உணவுக்கு கூட வழியின்றி தவிக்கிறார்கள். ஆந்திராவில் பிரஜா ராஜ்ஜியம் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை தலை கீழாக மாறும். ஆந்திர மக்கள் இந்த தேர் தலில் புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.

சரத்பவார் பிரதமராக ஜெயலலிதா ஆதரவு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சி.என்.என்-ஐ.பி.என். டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமர் ஆவதற்கு அவர் ஆதரவு தெரிவித்தார். சரத்பவாரை பற்றி கேள்வி எழுப்பிய போது, அவர் முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள மூத்த அரசியல் தலைவர் என்றும், அவர் பிரதமர் பதவி வேட்பாளராக முடியும் என்றும் ஜெயலலிதா கூறினார்.
#

தங்கம் விலை பவுனுக்கு ரூ.296 அதிகரிப்பு

தங்கம் விலையில் தொடர்ந்து நிலையற்ற தன்மை காணப்படுகிறது. விலை சிறிது குறைவதும் பின்னர் தொடர்ந்து அதி கரிப்பதுமாக உள்ளது. நேற்று 1 பவுன் ரூ.10,488 -க்கு விற்பனை ஆனது. இன்று அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 அதிகரித்து உள்ளது. இன்று 1 பவுன் விலை ரூ.10,784, 1 கிராம் ரூ.1348 க்கு விற்பனை ஆனது.

மாயாவதி பிரிவினைவாத தலைவர் : அமெரிக்க பத்திரிகை கருத்து

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையின் அட்டையில் மாயாவதியின் படம் இடம் பெற்றுள்ளது . அத்துடன் நிற்கவில்லை அந்த பத்திரிகை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து அரசியலில் உயர்வான இடத்தை பிடித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், உத்திரபிரதேச முதல்வர் மாயாவதியை ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளது .மாயாவதி பிரதமாரானால் பிரிவினைவாதியாக தான் இருப்பார் என அப் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஒபமாவுக்கும் , மாயாவதிக்கும் இடையே இரண்டே ஒற்றுமை தான் உண்டு ; அவை மாயாவதி இளம் அரசியல் தலைவர் , மாயாவதியும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர் என்பவை மட்டுமே என அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது . அரசியலில் குறுகிற காலத்தில் அதிக செல்வத்தை சேர்த்துள்ள மாயாவதி ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுவதாக கூறுகிறார், ஆனால் செய்தவை சொற்பம் எனவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

பிரபாகரனுக்கு மன்னிப்பு கிடையாது: ராணுவம் அறிவிப்பு

இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறியதாவது:- பிரபாகரன் 10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிக் குள்ளேயே பதுங்கி இருக்கிறார். அவர் சரண் அடைய வேண்டும். அல்லது மர ணத்தை சந்திக்க வேண்டும். அவருக்கு நாங்கள் மன்னிப்பு வழங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, March 20, 2009

இன்றைய (மார்ச் 21-ம் தேதி) தலைப்புச் செய்திகள்






தேர்தல் விதி மீறலை வீடியோ எடுக்க தனி குழு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைமீறலை வீடியோ மூலம் படம்பிடிக்க தனி குழு அமைக்க தேர்தல் அதிகாரி உத்தரவு.


தி.மு.க.வினருக்கு கருணாநிதி அறிவுரை
தவறுசெய்பவர்கள் யாராக இருந்தாலும் அறவழிநின்று அவர்களை
தண்டிப்பேன் என்று தி.மு.க.வினருக்கு கருணாநிதி அறிவுரை.


காங்கிரசுடன் தே.மு.தி.க. தொகுதி உடன்பாடு? காங்கிரஸ்கட்சியுடன் தே.மு.தி.க. தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.


4-வது திருமணத்துக்கு முயன்ற பேராசிரியர் கைது
சென்னையில் 3 பெண்களைமணந்து ஏமாற்றிய மோசடி கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். பரபரப்பு வாக்குமூலம்.

வருண்காந்தியை கைது செய்ய கோர்ட்டு தடை வருண்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் போலீசார் கைது செய்யாமலிருக்க, டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன் அளித்தது.


தேர்தல் கமிஷனின் கருத்தை ஏற்க மத்திய அரசு மறுப்பு உள்துறை செயலாளரின் பதவி காலம் நீடிப்பு பிரச்சினையில் சிக்கல் மேல் சிக்கல்: மேனகா காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு

பாராளுமன்ற தேர்தலில் ``அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற பாடுபடுங்கள்'' சிறு கட்சி தலைவர்களை அழைத்து ஜெயலலிதா வலியுறுத்தல்


ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா: ஜனாதிபதி பிரதீபா பட்டீல் சென்னை வந்தார் கவர்னர், அமைச்சர்கள் வரவேற்றனர்


"அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம்'' விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்


செல்போன் பேச்சு மூலம் குட்டு உடைந்தது செல்போன் பேச்சால்தான் குமாரின் குட்டு உடைந்தது


வக்கீல்கள் போராட்டத்தின் போது சோனியா உருவப்படத்தை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கே.வி.தங்கபாலு வலியுறுத்தல்


நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல்: 3 பேர் நசுங்கி சாவு


நடிகை அசின் உதவியாளரை கண்டு பிடிக்க தனிப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் அமைக்கப்பட்டது


பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் ஏப்ரல் 2-ந் தேதிக்கு தள்ளிவைப்பு அன்பழகன் அறிவிப்பு


முதல்முறையாக ஜெயில்களில் கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி தமிழக அரசு உத்தரவு


ஐகோர்ட்டு சம்பவத்தில் போலீஸ் அத்துமீறல் நடந்துள்ளதா? ஒருநபர் குழுவின் முதல்கட்ட விசாரணை 24, 26 தேதிகளில் நடக்கிறது தமிழக அரசு அறிவிப்பு


கூடங்குளத்தில் பயங்கரம் ஜோதிட நிலையத்தில் வாலிபர் தலை துண்டித்து கொலை உடலுக்கு தீ வைப்பு


கடலூர் மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவியதாக பரபரப்பு தகவல் கடலில் படகில் சென்று போலீசார் தேடுகிறார்கள்


ரூ.31 ஆயிரம் கோடியில் 5900 மெகாவாட் மின் உற்பத்தி திட்ட வேலைகள் நடக்கின்றன மின்வாரியம் விளக்கம்


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மோதல் மாணவர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து


கிண்டல் செய்வது போல் அமைந்துவிடக்கூடாது என்பதால் ``எம்.ஜி.ஆர். போல் நடனம் ஆட மறுத்து விட்டேன்'' சினிமா பட விழாவில், விஜயகாந்த் பேச்சு


அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்உற்பத்தி திறன் 10,011 மெகாவாட் தற்போது மின் உற்பத்தி திறன் குறைவதற்கு காரணம் என்ன? அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கேள்வி


கள் இறக்க அனுமதி கோரி டெல்லியில் நாடார் பேரவையினர் உண்ணாவிரதம்


இந்த ஆண்டு இறுதியில் தொடக்கம் இந்தியா-சான்பிரான்சிஸ்கோ இடையே நேரடி விமான சேவை ஏர்-இந்தியா விமான அதிகாரி வர்கீஸ் தகவல்


உளூந்தூர்பேட்டையில் ரெயில் முன்பாய்ந்து பலியானவர்கள் சென்னை காதல் ஜோடி திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்


சென்னை பரங்கிமலையில் பயிற்சி ராணுவ அதிகாரிகள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சி ஜனாதிபதி முன்னிலையில் இன்று பொறுப்பு ஏற்கிறார்கள்


இயக்குனர் சீமான் ஜாமீனில் வர மறுப்பு மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு

பணவீக்கம் குறைவு, விளைச்சல் அதிகரிப்பு எதிரொலி அனைத்து மளிகை பொருட்களும் கிடுகிடு சரிவு குண்டு மிளகாய் வத்தல் கிலோவுக்கு ரூ.20 குறைந்தது


கேரளா ஓவியர் வரைந்த அன்னை தெரசா ஓவியத்திற்கு ரூ.1 1/2 கோடி அன்பளிப்பு "பணத்தை என்ன செய்வதென்று திகைத்து நிற்கிறார்''


சென்னையில் மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர்களுக்கு வரவேற்பு கவிஞர் வைரமுத்து பங்கேற்பு


வெடிகுண்டு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்ய முடியாது ஐகோர்ட்டு தீர்ப்பு

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார், மாயாவதி இன்று, கேரளாவில் பிரசாரம் தொடங்குகிறார்


வருண்காந்தி விவகாரம்: முக்கிய தலைவர்களின் பேச்சு வீடியோவில் பதிவு தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு


பிரதமர் ஆவதற்கு எல்லா தகுதியும் ராகுல் காந்தியிடம் உள்ளது டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித் பேட்டி

முன்னாள் முதல்-மந்திரி மகனுக்கு `சீட்' மறுப்பு: அத்வானி வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


சிரஞ்சீவி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ரெயில் சின்னத்தை எங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும்


கருத்துகளில் கட்சிக்கு உடன்பாடு இல்லை: வருண்காந்தியின் பேச்சுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல தேர்தல் கமிஷன் நோட்டீசுக்கு பா.ஜனதா பதில்


சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மீது செருப்பு வீசிய பெண் 3 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது


அரசியலில் மதத்தை கலந்து மக்களை பா.ஜனதா பிளவுபடுத்தி வருகிறது ஜெயந்தி நடராஜன் குற்றச்சாட்டு


4 தொகுதிகளில் மனுதாக்கல்: ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை முடிந்தது


சுப்ரீம் கோர்ட்டில் நவீன் சாவ்லாவுக்கு எதிரான மனு தள்ளுபடி


இந்தியாவில் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க மாட்டோம் சிவசேனா கண்டிப்பு


3-வது அணியின் பிரதமர் வேட்பாளரை தேர்தல் முடிந்த பிறகு முடிவு செய்வோம் தேவேகவுடா பேட்டி

இதுதான் எனது கடைசி தேர்தல் பிரணாப் முகர்ஜி உருக்கமான பிரசாரம்


ஜார்கண்ட் மாநிலத்தில் ஜெயிலுக்குள் கைதிகள் துப்பாக்கி சண்டை: 2 பேர் சாவு



மத்திய அமெரிக்காவில் ஈகுவேடார் நாட்டில் அமெரிக்க தூதரின் வீடு மீது போர் விமானம் மோதியதில் 7 பேர் பலி


2 அமெரிக்க கடற்படை கப்பல்கள் நேருக்கு நேர் மோதல் 95 ஆயிரம் லிட்டர் டீசல் கடலில் கொட்டியது


இலங்கை தமிழர் பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதியுங்கள் சீனாவுக்கு, விடுதலைப்புலிகள் கோரிக்கை


பாகிஸ்தானில் தலீபான்கள் ராக்கெட் வீசி தாக்கியதில் 8 பேர் பலி


வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய 4 கம்பெனிகள் மீது நடவடிக்கை சிங்கப்பூர் அரசு எடுத்தது


பாகிஸ்தானில் சர்தாரியின் அதிகாரத்தை பறிக்க பிரதமர் கிலானி உறுதி


ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் ஒபாமா அறிவிப்பு

Thursday, February 26, 2009

இன்றைய (பிப்ரவரி இருபத்தியாறு) செய்திகள்




தமிழ்திரை இசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

சென்னை : தமிழ்திரை இசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று ஆஸ்கர் விருதுபெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். ஆஸ்கர் விருதுபெற்ற பின் சென்னை திரும்பிய அவர், சற்றுமுன்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இசை மக்கள் மத்தியில் நிலவும் வேறுபாடுகளை களைந்து ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது என்றும், இசைக்கு மொழி கிடையாது, மக்களை நேரடியாக மகிழ்விப்பதே விருதுகள் பெறுவதற்கு சமம் என்று கூறினார். மேலும் தமிழ் திரைஇசையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதே தமது லட்சியம் என்றும் தெரிவித்தார்.


இயக்குனர் சீமான் மார்ச் 6ல் நெல்லையில் ஆஜராக உத்தரவு

திருநெல்வேலி : இயக்குனர் சீமான் மார்ச் 6ல் நெல்லையில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் கடந்த 17ம் தேதி ஏற்பாடு செய்த கூட்டத்தில், இயக்குனர் சீமான் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு
ஆதரவாக பேசியதோடு வழக்கமான பாணியில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் காங்கிரசாரை திட்டியும் பேசினார். பாளையங்கோட்டை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது, புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இருக்கும் சீமானை முறைப்படி கைது செய்தனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன் தரப்பினர், நெல்லை
முதலாவது ஜெ.எம்., கோர்ட்டில் மனு செய்தனர். வழக்கு விசாரணைக்காக சீமானை பாளையங்கோட்டைக்கு அழைத்து வர உத்தரவிடுமாறு கேட்டனர். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் ஹேமா, மார்ச் 6ல் சீமானை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

சென்னையில் மேலும் 10 மேம்பாலங்கள் : அமைச்சர் ஸ்டாலின் தகவல்

சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்கும் வகையில், மேலும் 10 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது பேசிய அவர், பெரம்பூர், செனோடாப் ரோடு, ரங்கராஜபுரம், கத்திவாக்கம் ஹைவே, ஆலந்தூர் சாலை, மின்ட் தெரு மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வில்லிவாக்கம், ராயபுரம், மணியகரடு மற்றும் சைதாப்பேட்டையிலுள்ள ஜோன்ஸ் ரோடு ஆகிய இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்படுகிறது. இது தவிர, மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கொருக்குப்பேட்டையிலுள்ள போஜராஜா ரயில்நிலையம் அருகே ரூ. 6.28 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றும், சுமார் ரூ.9.50 கோடி செலவில்
பெரம்பூர் மேம்பாலம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு படைவீரர்கள் சரணடைந்தனர் : முடிவுக்கு வந்தது வங்கதேச புரட்சி

டாக்கா : கடந்த இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் நடந்து வந்த புரட்சி இன்று மாலை முடிவுக்கு வந்தது. ஊதிய உயர்வு விவகாரத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, வங்கதேச எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதனால் டாக்கா நகரின் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
ராணுவ உயர்அதிகாரிகள் உள்ளிட்ட பலரை பிணைக்கைதிகளாக பிடித்தனர் எல்லை பாதுகாப்பு படையினர். இதனிடையே புரட்சியை கைவிடுமாறு கோரிக்கை விடுத்த பிரதமர் ஷேக் ஹசீனா, பாதுகாப்பு படையினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். எனினும் கலவரம் கட்டுக்கடங்காமல், நாட்டின் பல இடங்களுக்கும் பரவியது. இதனிடையே இன்று
மாலை ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதாக பாதுகாப்பு படையினர் அறிவித்தனர். பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்களும் விடுவிக்கப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக வங்கதேசத்தில் நடந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ராஜினாமா

புதுடில்லி : மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மன்மோகன்சிங் அரசில் மின்துறை இணை அமைச்சராக இருப்பவர் ஜெய்ராம் ரமேஷ். ஆந்திராவிலிருந்து காங்.,
சார்பில் ராஜய்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ராம் ரமேசுக்கு மத்திய மின்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ஜெய்ராம் ரமேஷ், தேர்தல்
பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இம்முடிவை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவாரூர்-நாகூர் அலக ரயில்பாதை நாளை மறுநாள் துவக்கம்

சென்னை : திருவாரூர்-நாகூர் இடையே அகல ரயில் பாதை நாளை மறுநாள்(பிப்.27) திறக்கப்படுகிறது. இதற்கான விழா
திருவாரூர் ரயில் நிலையத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கிறது. திருச்சி மற்றும் தஞ்சையிலிருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் நாகூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மத்திய ரயில்வே இணையமைச்சர் வேலு
திருவாரூர்-நாகூர் இடையே பாசஞ்சர் ரயில் போக்குவரத்தை காலை 10 மணிக்கு துவக்கி வைக்கிறார். இந்த ரயில் காலை 11.20 மணிக்கு நாகூர் சென்றடையும். இப்பாதை திறப்பையொட்டி, திருச்சி மற்றும் தஞ்சையிலிருந்து திருவாரூர் வரை
இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் நாளையிலிருந்து நாகூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

குழந்தை நடிகர்களுக்கு மும்பையில் வீடு

மும்பை : ஆஸ்கர் விருதுகளைக் குவித்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த காரிப் நகர் குடிசைப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அசார் மற்றும் ரூபினாவின் குடும்பத்தாருக்கு வீடுகள் ஒதுக்கி, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான்
உத்தரவிட்டுள்ளார். நேற்று அசோக் சவானை சந்தித்த போது, இதை தெரிவித்ததாக, மும்பை நகர காங்கிரஸ் தலைவர் கிருபாசங்கர் அறிவித்துள்ளார். முதல்வரின் 2 சதவீத கோட்டாவில் இருந்து இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ராஜபாளையம் அருகே அரசு பஸ்கள் மோதல் : 3 பேர் பலி

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் என்னுமிடத்தில் செங்கோட்டையிலிருந்து வந்த அரசு பஸ்சும், ராஜபாளையத்திலிருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த சாந்தி, டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் குருசாமி மற்றும் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க நபர் உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.