Saturday, November 8, 2008

இலங்கை நிவாரணம் ரூ.19 கோடியை தாண்டியது

சென்னை, நவ.9-
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு அரசிடம் நேற்று நிவாரண உதவி அளித்தவர்கள் விவரம் வருமாறு:-
போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு மூலமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் சார்பில்- ரூ.73 லட்சம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், சென்னை சார்பில் ரூ.27 லட்சத்து 13 ஆயிரம், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், விழுப்புரம் ரூ.75 லட்சம், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், கோவை ரூ.67 லட்சம், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் சேலம் ரூ.42 லட்சத்து 20 ஆயிரம், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கும்பகோணம் ரூ.73 லட்சத்து 2 ஆயிரம், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், மதுரை ரூ.92 லட்சத்து 8 ஆயிரம், சாலை போக்குவரத்து நிறுவனம் ரூ.4 லட்சத்து 14 ஆயிரம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர்கள் ரூ.7 லட்சம், கரூர் கே.சி.பி. கம்பெனியின் தொழிலாளர்கள் சார்பாக கரூர் கே.சி.பழனிச்சாமி எம்.பி. ரூ.3 லட்சத்து 21 ஆயிரம், கே.சி.பி. குரூப் சார்பாக கே.சி.பழனிச்சாமி எம்.பி. ரூ.5 லட்சம், தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக ரூ.5 லட்சத்து 75 ஆயிரம்.
பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் சார்பில் சட்டமன்றப் பேரவை பணியாளர்கள் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 435, கோவை ஓட்டல் சூர்யா சார்பாக குண்டன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரூ.2 லட்சம், சையது சலாவுதீன் துபாய் ரூ.7 லட்சம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் துணை வேந்தர் எம்.ராஜேந்திரன் ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 656 மற்றும் பலர்.
நேற்று மதியம் வரை 19 கோடியே 23 லட்சத்து 62 ஆயிரத்து 547 ரூபாய் நிதி சேர்ந்துள்ளது.
இந்த தகவல் அரசு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments: