Monday, November 17, 2008

இலங்கை தமிழர் படுகொலை கண்டித்து சாப்ட்வேர் பணியாளர்கள் மனித சங்கிலி

சென்னை, நவ.18-
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதலை கண்டித்து அரசியல் கட்சியினர், நடிகர்-நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனித சங்கிலி நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சென்னையில் நேற்று மனித சங்கிலி நடத்தினர்.
நடிகர் சூர்யா, அவரது சகோதரர் நடிகர் கார்த்தி ஆகியோர் இந்த மனித சங்கிலியை தொடங்கி வைத்தனர். இதில் தரமணி டைடல் பார்க் வளாகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் தகவல் தொழில்ட்ப (ஐ.டி.) பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்திய அரசு இலங்கைக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

No comments: