
புதுடெல்லி, டிச.18-
இலங்கையில் நடைபெறும் கடுமையான போர் காரணமாக அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இலங்கை அரசிடம் போரை நிறுத்த சொல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களையும் அவர்கள் சந்தித்து பேசினர். இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியை வரும் 21-ந் தேதி அன்று நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் நகைமுகன் கூறும்போது, "தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் கடந்த 4-ந் தேதி அன்று பிரதமரிடம் வலியுறுத்தியும் எந்த சாதகமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே, இலங்கையில் இருந்து வந்த 22 எம்.பி.க்களும் 21-ந் தேதி அன்று அத்வானியை சந்தித்து இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் தலையிடுமாறு கேட்டுக் கொள்ள இருக்கின்றனர்'' என்றார்.
No comments:
Post a Comment