Wednesday, December 24, 2008

பாகிஸ்தான் மீது போர் சிவசேனா வலியுறுத்தல்!.




புனே, டிச.24:
பாகிஸ்தானிடம் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருப்பதை காட்டிலும், உடனடியாக அதன் மீது போர் தொடுப்பதும், தீவிரவாத முகாம்களை அழிப்பதும்தான் சரியான முடிவு என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
சிவசேனா கட்சி பத்திரிகை ‘சாம்னா’வின் தலையங்கத்தில் பால்தாக்கரே கூறியிருப்பதாவது:

மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பின்பு, ஆயிரக்கணக்கான இந்தியர்களை மறைமுக தீவிரவாத போரில் பாகிஸ்தான் கொன்று குவித்துள்ளது. நாட்டின் இறையாண்மையின் முக்கிய சின்னமான நாடாளுமன்றத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியபடி, பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக நையாண்டிதான் செய்து வருகிறது. அதனுடன் பேசிக் கொண்டிருப்பதை காட்டிலும், உடனடியாக போர் தொடுத்து, அங்குள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க இதுதான் சரியான நேரம்.
உறுதியான போர் ஒன்றே இப்போதைய தீர்வு.இவ்வாறு பால் தாக்கரே கூறியுள்ளார்.

No comments: