Thursday, December 25, 2008

இந்தியாவின் மேற்கு கடல் பகுதியில் சீன போர்கப்பல்கள் பதற்றம்!.





பீஜிங், டிச.26-

இந்தியாவின் மேற்கு கடல் பகுதியில் உள்ள சோமாலியாவில் உள்ள கடல் கொள்ளையர்கள், அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத்தொகை கேட்பது அதிகரித்து வருகிறது. அதனால் அக்கொள்ளையர்கள் மீது எந்த நாடும் தாக்குதல் நடத்தலாம் என்று ஐ.நா. அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து, அங்கு இந்திய போர்க் கப்பல் தயார்நிலையில் முகாமிட்டுள்ளது.

இந்நிலையில், சோமாலியாவுக்கு சீனாவும் தனது 3 போர்க் கப்பல்களை அனுப்புகிறது. இக்கப்பல்கள் இன்று ஹைனன் தீவில் இருந்து புறப்படுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ள நிலையில், பாகிஸ்தானின் ராணுவ கூட்டாளியான சீனாவின் கப்பல்கள், இந்திய கப்பல் உள்ள கடல் பகுதிக்கு செல்வது, பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments: