Thursday, December 25, 2008

காங்கிரசுக்கு `கை' சின்னம் வந்தது எப்படி?. - ருசிகிர தகவல்கள்.



குண்டூர், டிச.26-

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான என்.பாஸ்கர ராவ், தான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு `கை' சின்னம் வந்தது எப்படி? என்பது பற்றி குறிப்பிட்டு உள்ளார்.

காங்கிரஸ் உடைந்ததால், இந்திரா காங்கிரஸ் கட்சியை தொடங்கிய இந்திரா காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக ஆந்திரா வந்த போது, அவரும், பாஸ்கர ராவ் உள்ளிட்ட சிலரும் மதனபள்ளிக்கு சென்று அங்கு தங்கி இருந்த காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு எதை சின்னமாக தேர்ந்து எடுக்கலாம் என்று யோசனை தெரிவிக்குமாறு சங்கராச்சாரியாரை இந்திரா காந்தி கேட்க, அதற்கு அவர் தனது கையை உயர்த்தி காட்டிதாகவும் அதை குறிப்பாக உணர்ந்து கொண்ட இந்திரா காந்தி தனது கட்சியின் சின்னமாக `கை' சின்னத்தை தேர்ந்து எடுத்ததாகவும் தனது சுயசரிதை புத்தகத்தில் பாஸ்கர ராவ் குறிப்பிட்டு உள்ளார்.

No comments: