Tuesday, December 16, 2008

பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்று 37 ஆண்டுகள் நிறைவு சென்னை போர் நினைவிடத்தில் வீரர்களுக்கு அஞ்சலி


சென்னை, டிச.17-

பாகிஸ்தானுடன் 1971-ல் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இந்தியாவின் முப்படை வீரர்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரை நிலை குலைய செய்தனர். இறுதியில் இந்தியாவுக்கே வெற்றி கிடைத்தது. 90 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்களிடம் தங்களது ஆயுதத்தை ஒப்படைத்து சரணடைந்தனர்.

இந்த போரில் வெற்றி பெற்றதை "வெற்றி திருநாளாக'' ஆண்டுதோறும் கொண்டாடுவதும், உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதும் வழக்கம். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் 16-ம் தேதி ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று காலை நடைபெற்றது. போர் நினைவிடத்தில் உள்ள நினைவு கோபுரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ராணுவ வீரர்கள் கைகளில் ஆயுதம் ஏந்தி அணிவகுத்து நின்றனர். 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு ராணுவ மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தென் மண்டல ராணுவ தளபதி இ.ஜெ.கொச்சரன், ராணுவ பயிற்சி அகடமியின் தலைமை கமாண்டர் ஜெ.எஸ்.பஜ்வா, கப்பல் படை கமாண்டர் வான்கல்ட்ரன், ஏர் கமாண்டர் டி.கே.வர்மா, கடலோர காவல்படை கமாண்டர் எஸ்.பி.பஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 comment:

Sabale said...

no te puedo creer que escriban asi
http://sabaleplus.blogspot.com/
esos simbolos los tienen en el teclado.
tremendo eso man