Wednesday, December 24, 2008

அரசியல்வாதிகளுக்கு பைலட், எஸ்கார்ட் கூடாது!.


சண்டிகர், டிச. 25:

பஞ்சாபில் முதல்வர் உட்பட 3 பேரை தவிர மற்ற யாருக்கும் முன்பும், பின்பும் வாகனங்களில் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது என்று சண்டிகர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் போலீசில் 12 சதவீதம் பேர், வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதை கணிசமாக குறைக்க இந்த மாநில காவல் துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், வி.ஐ.பி.க்கள் செல்லும் வாகனங்களின் முன்பும் பின்பும் (பைலட், எஸ்கார்ட்) பாதுகாப்பு வாகனங்கள் செல்வதை எதிர்த்து சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, நவால் சிங் ஆகியோர், பஞ்சாப் முதல்வர், சண்டிகர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஆகியோரை தவிர மற்ற யாருக்கும் இதுபோன்ற பாதுகாப்பை அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

அரசியல்வாதிகளுக்கு பெரிய அளவில் பாதுகாப்பு அளிக்கப்படுவதற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அவருடைய குடும்பத்தின் பாதுகாப்பில் மட்டும் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: