
வாடிகன் சிட்டி, டிச.26-
போப் ஆண்டவர் பெனடிக்ட் வாடிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தினார். அப்போது அவர் சிறுவர்களை துன்புறுத்தும் பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம் என்று கேட்டுக்கொண்டார்.
உலகம் முழுவதும் 110 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர். இவர்களின் மதத்தலைவரான போப் ஆண்டவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ்பர்க் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடத்தினார். பிரார்த்தனையின் போது அவர் பேசியதாவது:-
வீடுகள் இல்லாத தெருக்களில் வசிக்கும் சிறுவர்களை இந்த நேரத்தில் நினைத்து பார்ப்போம். அவர்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள். செக்ஸ் தொழிலில் ஈடுபட்டுஇருப்பவர்கள் பல்வேறு வழிகளில் அவர்களிடம் இருந்து சுரண்டுகிறார்கள். தவறாக நடத்தப்படுகிறார்கள். சிறுவர்கள் இப்படி துன்புறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த கத்தோலிக்கர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும்.
மேற்கு ஆசியாவில் வன்முறைக்கும், வெறுப்புக்கும் முடிவு கட்டவேண்டும். இருதரப்பினருக்கும் இடையே ஒற்றுமை ஏற்படவேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம். இருதயம் திறந்தால், எல்லைகள் திறக்கும்.
இவ்வாறு போப் ஆண்டவர் கூறினார்.
No comments:
Post a Comment