Thursday, December 25, 2008

சுனாமி சுட்ட தினம் இன்று . . . .






தமிழ்கம் டிசம்பர் இருபத்தியாறு.
சுனாமியின் கொடூர தாக்குதல் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகி
விட்டன.
உறவுகளையும், உடமைகளையும் இழந்த மீனவர்கள் இன்னும்
பாதிப்பில் இருந்து விடுபடவில்லை.ஒரு ஆண்டிற்குள் குடியிருக்க
நிரந்தர வீடுகள் அமைத்து தரப்படும் என்ற அரசின் அறிவிப்பும்
முழுமையடையாததால், மீனவர்கள் வாழ்வாதார பிரச்னை இன்னும்
சிக்கலாகவே உள்ளது. சுனாமியின் சுவடுகள் தொடரத்தான்
செய்கிறது.நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உறவுகள், உடமைகளை
இழந்து கதறிய கடலோர மக்களின் அழுகுரலை எளிதாக மறந்து
விடமுடியாது. தமிழக கடலோரங்களில் கிளிஞ்சல்கள் பொறுக்குவது போல்
பொறுக்கிய மனித உடல்களும், தோண்டத் தோண்ட பிணங்களும் தான்
கிடைத்தன.

தமிழகத்தில் 8,018 பேர் உயிரிழப்பு.
குவியல் குவியலாக உயிரிழந்தவர்களுக்கு ஆண்டு
தோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.கொடூர சுனாமியால் தாக்கப்
பட்டவர்கள் இழப்புகளை மறந்து, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின்
அரவணைப்போடு மெல்ல சகஜ நிலைக்கு வர புது வாழ்க் கையை துவக்கினர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள்
ஓராண்டுக்குள் பாதுகாப்பான இடத்தில் நிரந்தர குடியிருப்புகள்
கட்டித் தரப்படும் என்ற அறிவிப்போடு நிரந்தர வீடுகளை கட்டியது.
தமிழகத்தில் கோர சுனாமியின் தாக்குதலில் 8,018 பேர்
உயிரிழந்தனர். 17,404 கால்நடைகள் இறந்தன. 3,446 பேர் உடல்
உறுப்புகளை இழந்தனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 6,065 பேர்
உயிரிழந்தனர். 11,899 கால்நடைகள் இறந்தன. 2,375 பேர் உடல்
உறுப்புகளை இழந்தனர். ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர்
பாதிக்கப்பட்டனர்.

No comments: