Wednesday, December 17, 2008

ஒரே நேரத்தில் பல மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாகும் ‘எந்திரன்’ திரைபடத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


சென்னை, டிச.18:
ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ (ரோபோ) படத்தை தயாரிப்பதாக இந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் அறிவித்துள்ளது.

சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் ஒரு அங்கமான சன் பிக்சர்ஸ், பெரும் பொருட்செலவில் இந்தியாவிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம் என அனைத்து வகையிலும் இது மிகப்பெரிய படமாக உருவாகும்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரிவித்தார்.

வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான எந்திரனில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணியாற்ற உள்ளனர்.

கிராபிக்ஸ் காட்சிகள், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சண்டைகாட்சிகள் இதுவரை இந்திய திரையுலகம் பார்த்திராத வகையில் புதுமையாக உருவாக்கப்படுகிறது என்று சக்சேனா கூறினார்.

No comments: