கொழும்பு, டிச.8-
விடுதலைப்புலிகளை வேகமாக அழிப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், விடுதலைப்புலிகளுடன் போர் நிறுத்தம் செய்வதை இந்தியா விரும்பாது என்றும் தெரிவித்து இருக்கிறது.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்ற ராணுவம் தீவிரமாக போர் புரிந்து வருகிறது. கிளிநொச்சியை இலக்காக கொண்டு படைகள் நகர்ந்து வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுமாறு தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போர் நிறுத்தம் செய்வதற்காக மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜியும் விரைவில் இலங்கை செல்ல இருக்கிறார். இந்த சூழ்நிலையில், விடுதலைப்புலிகளை அழிக்க இந்தியா உதவ வேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியதாவது:-
போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து இந்தியா கவலை கொள்கிறது. ஆனால், அப்பாவி தமிழர்களுக்கு போதுமான பாதுகாப்பை இலங்கை அரசு அளிக்கிறது. கிழக்கு மாகாணத்தை விடுவிக்கும்போது நடந்த போரிலேயே இது நிரூபிக்கப்பட்டது. அந்த போர் நடவடிக்கைகளை வன்னியிலும் பயன்படுத்தி வருகிறோம். இதைத்தான் இந்தியாவும் எதிர் பார்க்கிறது.
எனினும் தமிழ் உணர்வு என்று வரும்போது அப்பாவி தமிழர்களைத்தான் இந்தியா கருத்தில் கொள்கிறது. எனவேதான் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. எங்களுக்கு இந்தியா முழு ஆதரவு தந்தால், தற்போதைய நிலையை காட்டிலும் மிக விரைவாக விடுதலைப்புலிகளை அழித்து விடுவோம்.
தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்களுக்கு இந்திய அரசில் உள்ள செல்வாக்கை விடுதலைப்புலிகள் பயன்படுத்திக் கொண்டு போர் நிறுத்தம் செய்ய நினைப்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால், போர் நிறுத்தம் செய்வதில் இந்தியாவுக்கு ஆர்வம் கிடையாது என்று நம்புகிறோம். ஏனெனில், பிரபாகரனை குற்றவாளியாக ஒப்புக்கொண்டு அவருக்கு மரண தண்டனையை இந்தியா விதித்துள்ளது. மேலும், அந்த அமைப்பையும் தடை செய்துள்ளது.
விடுதலைப்புலிகளின் சிறிய விமானத்தால் இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. ஆனால் கடல் புலிகளால் இந்தியாவுக்கு ஏராளமான பிரச்சினைகள் உருவாகும். ஏராளமான இந்திய மீனவர்களை தாக்கி இருக்கின்றனர். மேலும் ஆயுதம் போன்றவற்றையும் கடல் வழியாக கடத்தி வருகின்றனர்.
ஒட்டு மொத்ததமாக பார்த்தால் விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரிக்கையால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் அதிகமாகும். தமிழ்நாட்டில் இருந்தபடி விடுதலைப்புலிகள் மீது அனுதாபம் காட்டுபவர்கள் மத்தியில் இந்த பிரிவினை கொள்கை பரவலாம். அப்போது தமிழ்நாட்டுக்கும் அபாயம் ஏற்படும்.
தற்போது நடந்து வரும் போரில் கிளிநொச்சியை விரைவில் கைப்பற்றி விடுவோம். அதன் பிறகு முல்லைத்தீவையும் கண்டிப்பாக பிடிப்போம். அப்போது கடலுக்குள் குதிப்பது அல்லது சயனைடு சாப்பிடுவது ஆகிய இரண்டை தவிர வேறு வழியே விடுதலைப்புலிகளுக்கு இருக்காது. அவர்கள் சரண் அடைய விரும்பினால் இன்னமும் அதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு பொன்சேகா தெரிவித்தார்.
இதற்கிடையே, `தொட்டுவிடும் தொலைவில்தான் கிளிநொச்சி இருக்கிறது. அதுவரை ராணுவம் முன்னேறி விட்டது' என்று ராணுவ செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், `கிளிநொச்சியை கைப்பற்ற நடந்த போரில் கடந்த சில நாட்களில் மட்டும் ஏராளமான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பரிலேயே கிளிநொச்சியை கைப்பற்றி இருப்போம். ஆனால், கனமழை மற்றும் விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பு ஆகியவற்றால் மெதுவாக ராணுவம் முன்னேறுகிறது. தற்போது கிளிநொச்சியில் இருந்து தொட்டுவிடும் தொலைவில் ராணுவம் இருக்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவ தளபதி திமிர் பேட்டி

போர் நிறுத்தம் செய்ய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா, `சண்டே அப்சர்வர்' என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கோமாளிகளின் கோரிக்கைக்காக போர் நிறுத்தம் செய்ய இந்தியா விரும்பாது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகளின் தயவில் அந்த அரசியல்வாதிகள் இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாட்டில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.
விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டால் விடுதலைப்புலிகளிடம் இருந்து வரும் வருமானம் நின்று விடும். விடுதலைப்புலிகளை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நிறைவேறாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment