Saturday, December 6, 2008

மத்திய மந்திரி சபையில் மாற்றம் சி.ரங்கராஜனுக்கு நிதி மந்திரி பதவி?


புதுடெல்லி, டிச.7-
மத்திய மந்திரிசபை ஒரிரு நாட்களில் மாற்றம் செய்யப்படுகிறது. சி.ரங்கராஜன் நிதி மந்திரியாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். ப.சிதம்பரம் வகித்து வந்த நிதி மந்திரி பொறுப்பை பிரதமர் மன்மோகன் சிங் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதனிடையே, நிதி மந்திரி பொறுப்புக்கு இன்னும் ஓரிரு நாட்களில் நியமனம் இருக்கும் என்று தெரிகிறது. அண்மையில் டெல்லி மேல்-சபை எம்.பி.யாக தேர்வான முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரங்கராஜனுக்கு நிதி மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
வருகிற 10-ந்தேதி பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாகவே புதிய நிதி மந்திரி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: