திண்டிவனம், டிச.7-
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பிப்ரவரி மாதம் நடைபெறும் பா.ம.க. பொதுக்குழு- செயற்குழுவில் முடிவு செய்வோம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலங்கை அரசு போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அமைதிப்பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும். அதற்கு இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடையதாக இருக்கின்றன. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை பேச்சளவில் வலியுறுத்தி கொண்டிருக்காமல் செயலில் காட்ட வேண்டும்.
பிரணாப் முகர்ஜி இன்னும் ஓரிரு தினங்களில் கொழும்புக்கு செல்ல வேண்டும். போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்ற அறிவிப்போடு அவர் இந்தியா திரும்ப வேண்டும். அதுதான் 7 கோடி தமிழர்களுக்கும் திருப்தி அளிக்கக்கூடியதாக இருக்கும்.
பேசினோம், வலியுறுத்தியிருக்கிறோம் என்ற வழக்கமான பாணியில் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்று திரும்பக்கூடாது. இதனை தமிழகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தி கூற வேண்டும். அப்போதுதான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் டெல்லி சென்று வந்ததின் நோக்கம் நிறைவேறும்.
ஈழத்தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கிறிஸ்தவ சமூதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந் திருந்தால் இந்நேரம் ஈழத்தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கும். அமெரிக்க உள்ளிட்ட மேலை நாடுகள் தலையிட்டு ஈழப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருப்பார்கள். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கை வெற்றிபெறுவதற்கு இந்தியாதான் உதவ வேண்டும்.
தமிழகம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் ஈழத்தமிழர்களுக்குவழங் கப்பட்டிருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கிறது. அதனை நன்றியோடு பெற்றுக் கொண்ட அவர்கள், எங்களது உரிமைகளை பெற உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இத்தனை துன்பங்களுக்குப் பிறகு அவர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த உறுதியை இந்தியா மதிக்க வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 5 ஆயிரம் ரூபாயும், பயிர்களை இழந்தவர்களுக்கு குறைந்தது ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாயும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தது 2 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும். அதுவும் உடனடியாக வழங்க வேண்டும்.
வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசிடம் 1963 கோடி ரூபாய் உதவி கோரியிருப்பதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளச்சேதங்களை பார்வையிட மத்திய நிபுணர் குழுவினர் விரைவில் வரவேண்டும். மத்திய அரசுக்கு அவர்கள் அறிக்கை கொடுக்க வேண்டும். அதன்பிறகு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும். அப்போதும், உடனடியாக நிதியுதவி வழங்குவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
மத்திய நிபுணர் குழுவினர் அறிக்கை கொடுக்கும்வரை காத்திருக்காமல் அண்மையில் பீகார் மாநிலத்திற்கு உடனடியாக நிதி உதவி வழங்கப்பட்டதைபோல தமிழகத்திற்கும் வெள்ள நிவாரண நிதி குறைந்தது 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி பெற வேண்டும். மத்திய நிதியுதவி கிடைக்கும் வரை காத்திருக்காமல் மாநில அரசு தனது சொந்த நிதி ஆதாரத்திலிருந்து வெள்ள நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் இலவச கலர் டி.வி. வழங்குவதற்கான நிதி சுமார் 1,500 கோடி ரூபாயை வெள்ள நிவாரணத்திற்கு திருப்பிவிட வேண்டும். அப்படி திருப்பி விடுவதில் எந்தத் தவறும் இல்லை. கலர் டி.வி.யை விட வெள்ள நிவாரணம்தான் முக்கியம்.
காஞ்சீபுரத்தில் 9-ந் தேதி பா.ம.க. மாநில விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் மத்திய வேளாண்துறை மந்திரி சரத்பவார் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேருமா? என்று கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே? அது பற்றி தங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு டாக்டர் ராமதாஸ் பதில் அளிக்கையில், ஏப்ரல் மாதத்தில்தான் தேர்தல் வரும், பா.ம.க.வின் மாநில பொதுக்குழு, செயற்குழு கூட்டம் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்போது யாருடன் கூட்டணி என்று முடிவெடுக்கப்படும். நான் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அமைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக தைலாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு அவரது நினைவுநாளை முன்னிட்டு டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments:
Post a Comment