சென்னை, டிச.4-
இலங்கைப்பிரச்சினையில் அமைதித் தீர்வு காண, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் சென்னையில் இருந்து நேற்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் போரை நடத்துவதாகக்கூறி தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்.
இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் கடந்த மாதம் 25-ந் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் முதலில் பிரதமரிடம் இதுபற்றி முறையிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. (அதன்படி, 2-ந் தேதி தமிழக எம்.பி.க்கள் குழு பிரதமரை சந்தித்தனர்.)
அதைத்தொடர்ந்து, டிசம்பர் 4-ந் தேதி முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கருணாநிதி தலைமையில், அனைத்துக்கட்சித் தலைவர்கள் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிறார்கள்.
அதற்காக, சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் முதல்-அமைச்சர் கருணாநிதி டெல்லிக்குப் புறப்பட்டுச்சென்றார்.
கருணாநிதியை, விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், சுப.தங்கவேலன், கீதா ஜீவன், முன்னாள் எம்.எல்.ஏ.ஆயிரம் விளக்கு உசேன் உள்பட ஏராளமான தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களுடன் வழி அனுப்பி வைத்தனர்.
முதல்-அமைச்சருடன் அவருடைய துணைவியார் ராஜாத்தி அம்மாள், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் டெல்லி சென்றனர்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாநில இந்திய னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் எம்.பி, எச்.அப்துல் பாசித் எம்.எல்.ஏ., புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (போட்டி) எல்.கணேசன் எம்.பி, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக நிர்வாகி ஐதர் அலி.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் ராதிகா சரத்குமார், இந்திய சமூக நீதி இயக்கம் நிறுவனர் பேராயர் எஸ்றா சற்குணம், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு) பி.வி.கதிரவன், லட்சிய தி.மு.க.நிறுவனர் தலைவர் விஜய டி.ராஜேந்தர், புதிய தமிழகம் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் நேற்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
விமான நிலையத்தில் கட்சித் தலைவர்கள் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
டாக்டர் ராமதாஸ் (பா.ம.க.):- ``முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் டெல்லி செல்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும். அங்கு அமைதி திரும்புவதற்கு உடனடியாக அரசியல் தீர்வு காண வேண்டும் இவை தான் எங்கள் முன் உள்ள கோரிக்கைகள் ஆகும். இலங்கையில் சீக்கிரமாக, விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெல்லி செல்கிறோம்''.
கி.வீரமணி (திராவிடர் கழகம்):- `இலங்கைப் பிரச்சினையில் நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக எம்.பி.க்கள் பிரதமரை 2-ந் தேதி சந்தித்து ஆக்கப்பூர்வமான யோசனைகளை வழங்கி உள்ளனர். இறுதிக்கட்ட முயற்சிக்கான பயணம் மேற்கொள்கிறோம். இந்தப் பிரச்சினையில், அரசியல் மாச்சர்யங்களுக்கு இடம் தராமல் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். வெற்றி பெறுவோம்.'
தொல்.திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள்):- `இலங்கைப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் செல்லும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதல்-அமைச்சர் தலைமையிலான இந்த பயணம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புகிறோம்''.
இவ்வாறு கூறினார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினையில், போர் நிறுத்தம்தான் முக்கிய கோரிக்கைடெல்லியில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேட்டி
சென்னை, டிச.4-
இலங்கை தமிழர் பிரச்சினையில் போர் நிறுத்தம்தான் முக்கியமான கோரிக்கை என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி அரசியல் தலைவர்களுடன் முதல்-அமைச்சர் கருணாநிதி விமானம் மூலம் டெல்லி வந்தார்.
விமான நிலையத்தில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பழனி மாணிக்கம், கனிமொழி கருணாநிதி எம்.பி உள்பட அனைத்து தி,.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களும் பூங்கொத்து, பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு புதிய இல்லத்திற்கு (சாணக்கியா புரி) வந்த முதல்-அமைச்சர் கருணாநிதி அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- பிரதமரிடம் பேசும்போது வெள்ள நிவாரணத்திற்கான உதவித்தொகை கேட்பீர்களா?
பதில்:- நிச்சயமாக கேட்கவிருக்கிறேன். எவ்வளவு என்பதை கேட்ட பிறகு சொல்கிறேன்.
கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசும்போது முக்கியமான கோரிக்கை என்ன?
பதில்:- அதிலே முக்கியமான கோரிக்கை போர் நிறுத்தம்தான்.
கேள்வி:- கடந்த 3 மாதமாக அந்த கோரிக்கையைத் தானே கேட்டுக் கொண்டிருக்கிறோம்?
பதில்:- அதனால் கோரிக்கையை மாற்றிக் கொள்ள முடியுமா என்ன?
கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அவசரம் கருதி மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடியாதா?
பதில்:- தி.மு.க. மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு கவிழ வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா? தி.மு.க. மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெற்று விட்டால், இலங்கை தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா?
கேள்வி:- நாளைய தினம் தரப்படவுள்ள கோரிக்கை மனுவில், தமிழக மீனவர்கள் பிரச்சினையும் இடம்பெறுமா?
பதில்:- இடம்பெறும். ஆனால் தற்போது மீனவர்கள் பிரச்சினை குறைந்துள்ளது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி சென்னை வந்து என்னிடம் பேசிய பிறகு, ஒரே ஒரு முறைதான் தமிழக மீனவர்கள் அதுவும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது தாக்குதலோ, சுடுகின்ற நிகழ்வோ நடைபெறவில்லை. மீனவர்கள் தாக்கப்படக்கூடாது என்றும், சுடக்கூடாது என்றும் மத்திய அரசின் சார்பில் இலங்கை அரசுக்கு வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. அதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
கேள்வி:-நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டதில் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதா?
பதில்:- நேற்றைய தினம் மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு வந்த கடிதத்தில் நிவாரண பொருட்கள் முறையாக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
கேள்வி:- மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?
பதில்: இது தலைவலி மருந்து மாதிரி. மொத்தமாக போர் நிறுத்தம் ஏற்பட்டு, அங்கே தமிழர்கள் அமைதியாக வாழ்ந்தால்தான் எங்கள் திருப்திக்கு அர்த்தம் இருக்க முடியும்.
கேள்வி:- வெள்ள நிவாரண நிதி கேட்பதற்காக மீண்டும் ஒரு முறை டெல்லி வரவிருக்கிறீர்களா?
பதில்:- வெள்ள நிவாரண நிதி கேட்பதற்காக இன்னொரு முறை வரவேண்டிய அவசியம் இல்லை. நாளைய தினமே பிரதமரிடமும், மத்திய மந்திரி ப.சிதம்பரத்திடமும் தமிழக வெள்ள நிவாரணத்திற்காக உதவி நிதி கோரிக்கை வைக்க உள்ளேன்.
கேள்வி:- இலங்கை தமிழர் போன்ற முக்கிய பிரச்சினையிலே, தமிழக கட்சிகளில் அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.எம் போன்ற கட்சிகள் பிரதமரை சந்திக்க வராமல் தனியாக இருக்கிறார்களே?
பதில்:- அதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். எந்த அளவிற்கு தாழ்ந்து போய் வேண்டுகோள் விடுக்க முடியுமோ அந்த அளவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் அதை ஏற்பதாக இல்லை.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

No comments:
Post a Comment