கொழும்பு, டிச.6-
தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் இலங்கை தமிழர்களிடம் கொடுத்தனர். பொருட்களை பெற்ற அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இலங்கையில் கடுமையான சண்டை நடந்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் உள்ளூரிலேயே வீடுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர். அவர்களின் துயர் துடைப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து உணவு, உடை, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக போரால் பாதிக்கப்பட்ட வன்னி பகுதிக்கு அவை சென்றன.
தற்போது அந்த பொருட்களை இலங்கை தமிழர்களிடம் வினியோகிக்கும் பணிகள் நேற்று முன்தினம் முதல் (வியாழன்) தொடங்கின. குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே முதலில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில் 51 ஆயிரத்து 200 குடும்பங்கள் உள்ளன.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கண்காணிப்பின் கீழ் வன்னியில் மட்டும் 23 மையங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதில் `கரைச்சி பன்முக கூட்டுறவு சங்கம்' என்ற மையமும் அடங்கும். அங்கு பொருட்களை பெற்ற தமிழர்கள், தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இது பற்றிய விபரம் வருமாறு:-
மூன்று குழந்தைகளுக்கு தாயாரான வனந்தன் பிரேமா (வயது 27) என்ற பெண் கூறும்போது, ``ஜெயபுரம், முறிப்பு என பல இடங்களுக்கு இடம் பெயர்ந்த நான், தற்போது கட்டைக்காடு பகுதியில் வசிக்கிறேன். எனது 9 மாத குழந்தைக்கு பால் கொடுக்க கூட முடியாத நிலையில் இருக்கிறேன். உலக உணவு திட்டத்தின் கீழ் வழங்கும் உணவில்தான் எனது 8 மற்றும் 3 வயது குழந்தைகள் வாழ்கின்றனர். மறுவாழ்வு முகாமில் நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்'' என்றார்.
தன்னுடைய குடும்பத்தினருக்காக நிவாரண உதவிகளை பெற்ற முருகேசு தவராஜா என்பவர் கூறுகையில், ``போர் காரணமாக ஏராளமான முறை எனது உடைமைகளை இழந்தேன்'' என்று தெரிவித்தார்.
தவராஜா என்பவர் கூறும்போது, ``ஒவ்வொரு முறை எங்களுடைய உடைமைகள் மற்றும் இடங்களை இழக்கும்போதும் நாங்களே எங்களுடைய வாழ்க்கையை மீண்டும் தொடங்குவோம். இந்த முறை ஒரு வித்தியாசமாக தமிழ்நாட்டில் உள்ள சாதாரண மக்கள் முதல் அனைவருமே ராஜபக்சே அரசின் உண்மையான முகத்தை அறிந்து கொண்டுள்ளனர். தற்போது கூட கிளிநொச்சிக்கு 50 லாரிகளில் மட்டுமே நிவாரணப் பொருட்களை அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக மக்கள் எங்களுக்காக தொடர்ந்து போராட வேண்டும்'' என்றார்.
ராசாமணி என்ற மூதாட்டி கூறுகையில், ``தமிழ்நாட்டு மக்கள், முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் அனைத்து தலைவர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். அவர்களுடைய உதவியினால் எங்களுடைய எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்'' என்றார்.
தாவரத்தினம் (வயது 32) என்பவர் கூறும்போது, ``இலங்கை ராணுவம், விமானப்படை குண்டு வீச்சினால் மல்லாவியில் இருந்து தர்மபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்து இருக்கிறேன். உலக உணவு திட்டம் சார்பாக 600 கிராம் அரிசி, 500 கிராம் மாவு ஆகியவை மட்டுமே அளிக்கப்பட்டன. அதுவும் சில சமயங்களில் வினியோகிக்கப்படாது. தற்போது உணவு பொருட்களை அனுப்பி வைத்த தமிழக மக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்'' என்றார்.
தினேஷ், ``தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைத்த உணவுப் பொருட்கள்தான் தற்போது வந்துள்ளன. இன்னும் உடைகள் எதுவும் வரவில்லை. வைத்திருந்த உடைகளும் சமீபத்தில் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. மல்லாவி, கந்தபுரம், கிளிநொச்சி என இடம்பெயர்ந்த நான் தற்போது கட்டைக்காட்டில் இருக்கிறேன். உடைகள் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.
வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வினியோகம் தொடங்கினாலும் அதிகாலை 5 மணிக்கே ஏராளமான மக்கள் வரிசையில் காத்து இருந்தனர். ஒரு சில மையங்களில் குறைந்த அளவிலேயே நிவாரணப் பொருட்கள் வந்ததால் பல மணி நேரம் காத்திருந்தும் எதுவும் கிடைக்காமல் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். வினியோகப் பணிகளை செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகளும் நிவாரண அதிகாரி மேவா சிலாபியா ஆகியோர் பார்வையிட்டனர்.

No comments:
Post a Comment