கொழும்பு, டிச.5-
பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து கொழும்பில் இலங்கை சுதந்திரா கட்சி பொதுச்செயலாளரும், மூத்த மந்திரியுமான மைத்திரிபால் சிறிசேனவிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
தமிழ் எம்.பி.க்கள் 22 பேரும் இந்திய பிரதமரை சந்தித்துப் பேசினாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை அரசு ஒருபோதும் நிறுத்தாது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை நிறுத்துமாறு இந்திய அரசு ஒருபோதும் வேண்டுகோள் விடுக்காது. அரசின் நிலைப்பாடுகள் குறித்து இந்திய அரசுக்கு எடுத்துக் கூறியுள்ளோம். விடுதலைப்புலிகள் தற்போது பலவீனமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு போரை நிறுத்தாது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு பேச்சுக்கு வருவதுதான் விடுதலைப்புலிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே வழி.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment