தமிழக அரசியல் தலைவர்கள் பற்றி தவறாக விமர்சித்த சிங்கள ராணுவ தளபதியின் பேச்சுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதைத் தொடர்ந்து, இலங்கை அரசு வருத்தம் தெரிவித்தது.
புதுடெல்லி,டிச.10-
இலங்கையில் நடைபெற்று வரும் போரால், அங்குள்ள அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழகமும் தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. கடந்த வாரம், முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி தலைவர்கள் கொண்ட குழு, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தது. போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை மனு சமர்ப்பித்தது.
இதன் தொடர்ச்சியாக, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய வெளி உறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
போரை நிறுத்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சியால் இலங்கை அரசு ஆத்திரம் அடைந்துள்ளது. அதனால் தமிழக தலைவர்கள் மீது பாய்ந்துள்ளது. குறிப்பாக, இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா, தமிழக தலைவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்தார்.
அவர் `சண்டே அப்சர்வர்' என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசியல் தலைவர்களை `அரசியல் கோமாளிகள்' என்று அடாவடித்தனமாக குறிப்பிட்டார். விடுதலைப்புலிகளிடம் இருந்து தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் பணம் பெறுவதாகவும், விடுதலைப்புலிகளை ஒழித்து விட்டால், அவர்களிடம் இருந்து கிடைக்கும் வருவாயை இந்த அரசியல் கோமாளிகள் இழந்து விடுவார்கள் என்றும் சரத் பொன்சேகா கூறினார். தமிழக அரசியல் தலைவர்களின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்காது என்றும், போர் நிறுத்தம் செய்யுமாறு வற்புறுத்தாது என்றும் அவர் கூறினார்.
இலங்கை ராணுவ தளபதியின் இந்த கருத்துகளால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதி, இந்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு கட்சி மாநில செயலாளர் என்.வரதராஜன், இந்திய கம்னிஸ்டு செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனது பேச்சுக்கு சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளார்.
சரத் பொன்சேகா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பல இடங்களில் அவரது உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சியினர் இந்த போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையை உணர்ந்த மத்திய அரசு, நேற்று இலங்கை அரசிடம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதர் அலோக் பிரசாத், இலங்கை பாதுகாப்பு செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோதபயா ராஜபக்சேவிடம் இந்தியாவின் கண்டனத்தை நேரில் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த கோதபயா இத்தகைய கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இந்த விவகாரத்தை கவனிப்பதாகவும் உறுதி அளித்தார்.
இந்த தகவலை டெல்லியில் மத்திய வெளிஉறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இலங்கை ராணுவ தளபதி தெரிவித்த தரக்குறைவான கருத்துகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாகவும், அதற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment