சென்னை, டிச.9-
பாராளுமன்ற தேர்தல் முடிந்து, டெல்லியில் (மத்தியில்) ஆட்சி அமைக்கப் போவது காங்கிரஸ் கட்சிதான் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி உறுதிபட கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் கருணாநிதி, நிருபர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-
கேள்வி:- இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி கணிசமான அளவுக்கு வெற்றி பெற்றுள்ளதே?
பதில்:- இன்னும் முழுமையாக முடிவுகள் வரவில்லை. வந்துள்ள வரை, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்றுதான் கூற வேண்டும்.
கேள்வி:- விரைவில் வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலிலும் இப்போது கிடைத்துள்ள வெற்றி தொடருமா?
பதில்:- பாராளுமன்றத் தேர்தல் முடிந்து டெல்லியில் ஆட்சி அமைக்கப் போவது காங்கிரஸ் கட்சி தான்.
கேள்வி:- உங்கள் கூட்டணியில் இருந்த கம்னிஸ்டு கட்சிகள் இந்த முறை போயஸ் தோட்டத்துக்கு போனதைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்:- (சிரிப்பு) -இது தான் பதில்.
கேள்வி:- இலங்கைத் தளபதி ஒருவர் நேற்று கூறும்போது தமிழ்நாட்டின் தலைவர்கள் கோமாளிகள் என்று அருவறுக்கத் தக்கவகையில் விமர்சனம் செய்திருக்கிறாரே?
பதில்:- அந்தத் தளபதி அப்படி சொல்லியிருப்பது உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. இங்குள்ள தமிழகத்தின் தலைவர்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளின் அடிப்படையில் ஒருவரைப் பற்றி மற்றொருவர் விமர்சித்துக்கொள்வது என்பது வேறு. ஆனால் இன்னொரு நாட்டவர் தமிழகத் தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது எந்தக்காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்படி விமர்சித்திருந்தால், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கேள்வி:- டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைத் தளபதியின் செய்கை குறித்து தாங்கள் பிரதமரின் கவனத்துக்குச் கொண்டு செல்ல வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:- டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் அது பற்றி கூறியுள்ளதே இந்நேரம் பிரதமரின் கவனத்துக்குச் சென்றிருக்கும்.
கேள்வி:- வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு போகப் போவதாகச் சொல்லப்பட்டதே, தேதி உறுதியாகிவிட்டதா?
பதில்:- இன்னும் தேதி குறிப்பிடவில்லை. விரைவில் செல்வார்.
கேள்வி:- இலங்கை தளபதி மேலும் கூறும்போது போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை இந்திய அரசு வைக்காது என்று சொல்லியிருப்பதைப் பற்றி?
பதில்:- இதைப் பற்றியெல்லாம் நானும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லியில் பிரதமரைச் சந்தித்தபோது விரிவாகப் பேசி, அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு தான் இலங்கைக்கு வெளி உறவுத்துறை அமைச்சர் சென்று நம்முடைய கோரிக்கையை வலியுறுத்தவும் -போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது பற்றிய கோரிக்கையை வலியுறுத்தவும் -அந்த அடிப்படையில் அவர்களை நடந்து கொள்ளச் செய்யவும் -நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அதை பிரதமரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
கேள்வி:- வெள்ள நிவாரணப் பணிகள் எல்லாம் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உதவித் தொகைகள் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் சில எதிர்க்கட்சியினர் குறை கூறுகிறார்களே?
பதில்:- அதுதான் எதிர்க்கட்சி. அவர்கள் விமர்சனங்களைச் செய்ய செய்ய - குறைகளைக் கூறக் கூற அவற்றைத் திருத்திக் கொண்டு நாங்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுவோம்.
கேள்வி:- மத்திய அரசிடம் வெள்ள நிவாரணத்துக்காக நாம் கேட்ட தொகையில் பத்து சதவிகித அளவுக்குக் கூட அவர்கள் நிதி உதவி செய்யவில்லை. இந்த முறையாவது செய்வார்களா?
பதில்:- சென்ற முறை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட போது, தமிழக அரசு கேட்டதில் ஒரு பகுதியைக் கூடத் தரவில்லை, இந்த முறையாவது நாங்கள் கோரியுள்ள நிதியை வழங்க வேண்டுமென்று பிரதமரிடமும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவருமான சோனியாகாந்தியிடமும் கோரியிருக்கிறேன். அதனால் நாம் கோரிய அளவுக்கு நிதி வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி:- வெள்ள நிவாரணப் பணிகளை அரசாங்கம் முறையாக ஈடுபட்டு செய்து கொண்டிருக்கும்போது, சில எதிர்க்கட்சிகள் மக்களைத் தூண்டிவிடும் விதமாக ஆர்ப்பாட்டம், மறியல் என்றெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களே?
பதில்:- நாங்கள் நிவாரணம் அளித்துக் கொண்டிருக்கும்போதே சில எதிர்க்கட்சிகள் நிவாரணமே அளிக்கவில்லை என்பதைப் போலவும், அதனால் ஆர்ப்பாட்டம், மறியல், சாலை மறிப்பு போன்றவற்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்திருப்பது வெறும் அரசியல் ஆதாயத்துக்காகத்தான். நான் திட்டவட்டமாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தமிழகத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டமோ, பேரணிகளோ நடத்த விரும்பினால், பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படாமல் காவல்துறையினரிடம் அனுமதியைப் பெற்று எந்தக் கோரிக்கையானாலும் அவற்றை வலியுறுத்தலாம். அவ்வாறு இல்லாமல் சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்.
கேள்வி:- இதுபோன்ற வெள்ள நேரத்தில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றி பேசியபோது நிரந்தரமான சில முயற்சிகளை எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். அதற்காக ஏதாவது குழு அமைக்கப் போகிறீர்களா? நடைமுறையில் அதை எப்படிச் செய்யப் போகிறீர்கள்?
பதில்:- வெள்ளம் போன்ற இயற்கை இடர்களால் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுத்து நிறுத்த அரசின் அத்தனை துறைகளும் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும்.
கேள்வி:- மழைக்குப் பிறகு சென்னையில் சாலைகள் மோசமாக உள்ளதே?
பதில்:- படிப்படியாகத் தான் சரி செய்ய முடியும்.
கேள்வி:- பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது போதாது என்று சில பேர் சொல்கிறார்களே?
பதில்- அவர்களுக்கு போதாது.
கேள்வி:- மத்திய அரசின் சார்பில் நேற்றையதினம் பெருமளவிற்கு பல்வேறு சலுகைகள் எல்லாம் தொழில் துறையிலும், மற்ற துறைகளிலும் அறிவித்திருப்பதைப் பற்றி?
பதில்:- இந்தியாவைப் பொறுத்தவரையில் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு முன்னேற்ற நிலைமைக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி:- சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தீர்களே?
பதில்:- நேற்றுதானே கடிதம் எழுதியிருக்கிறேன்.
கேள்வி:- மத்திய அமைச்சரவையில் மேலும் சிலரை நியமிக்கப் போவதாக பிரதமர் சொல்லியிருக்கிறாரே, தமிழகத்துக்கு மேலும் வாய்ப்பு கிடைக்குமா?
பதில்:- வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சி தான்.
கேள்வி:- தமிழ்நாட்டில் இப்போது இருக்கக் கூடிய மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு.....
பதில்:- இப்போது இல்லையே?
செய்தியாளர்:- ஏற்பட்டிருந்த மின்தட்டுப்பாட்டுக்கு - மத்திய அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய மின்சாரம் வராதது தான் காரணமா?
பதில்:- மின்தட்டுப்பாட்டுக்கு பல காரணங்கள் உண்டு. அதிலே இதுவும் ஒரு காரணம். மத்திய தொகுப்பிலிருந்து 2000 மெகாவாட் மின்சாரம் நமக்கு வந்திருக்க வேண்டும். வரவில்லை. அதைத்தான் தற்போது டெல்லி சென்றிருந்தபோது அந்தத் துறையினரிடம் விரிவாகப் பேசினோம். டிசம்பரில் ஆயிரம் மெகாவாட் முதற்கட்டமாகத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
கேள்வி:- அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு?
பதில்:- விரைவில் சட்டமாக உள்ளது. எடுக்கப்பட்டுள்ள முடிவினை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதை பற்றி ஆய்வு செய்து பரிந்துரை கூற அமைச்சரவை துணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் இன்றைக்கும் கூடி, அறிக்கை ஒன்றினை என்னிடம் அளித்திருக்கிறார்கள். எனவே மிக விரைவில் சட்டமன்றத்தில் அருந்ததியர் இடஒதுக்கீட்டிற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேறும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.

No comments:
Post a Comment